கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா
Mar 13, 2026
தங்கம் விலை ரூ.560 குறைந்தது
Mar 13, 2026
42 வயது பெண் கூட்டு பா*யல் வன்கொடுமை என புகார்
Mar 13, 2026
காய்கறிகளின் விலை 20% வரையில் குறைந்தது
Mar 13, 2026
முகப்பு
ஜிப் வைத்த சூட்கேஸ்.. ரூ.85 லட்சம் நகைகள் கொள்ளை போனது..! பூட்டை உடைக்காமல் அபேஸ்..
Nov 19, 2025 01:25 AM
267
ஓடும் ரெயிலில் ரூ.85 லட்சம் நகைகள் கொள்ளை.. ரெயிலில் ஜிப் ஆபரேசன் கொள்ளையர்கள் உஷார்..
சென்னையை சேர்ந்த அப்துல் நசீர் என்பவர் கடந்த 13 ம் தேதி, குடும்ப சுப நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மங்களூர் மெயில் விரைவு ரெயில் முதல் வகுப்பு குளிர் சாதன பெட்டியில் சொந்த ஊரான கேரள மாநிலம் கொயிலாண்டிக்கு சென்றார்.
குடும்ப சுப நிகழ்வு என்பதால்., பூட்டிய சூட்கேசில் தங்க நகைகளை எடுத்து சென்ற நிலையில் வீட்டில் சென்று பார்த்த போது., பூட்டியபடி இருந்த சூட்கேசில் இருந்த 85 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 747 கிராம் தங்க நகைகள், வைர நகைகள் காணாமல் போயிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து கோழிக்கோடு ரயில் நிலையத்தில் ஆர்.பி. எப் போலீசாரிடம் அப்துல் நசீர் புகார் அளித்தார். ரயிலில் பயணித்த போது சந்தேகம் படும்படியான நபர்கள் குறித்து கேட்டறிந்த ஆர் பி எப் போலீசார்., கொயிலாண்டி ரயில் நிலையத்தில் இந்தி மொழி பேசிய சிலர் தங்களது சூட்கேசை இறக்கி வைக்க உதவியதாக தெரிவித்தனர்.
பூட்டை திறக்காமல் கம்பிகளை கொண்டு ஜிப்பை மட்டும் திறந்து உள்ளே உள்ள பொருட்களை எடுத்து விட்டு ஜிப்பை மூடி வைக்கும், ZIP ஆப்ரேஷன் முறையில் பெட்டியில் நகைகளை கொள்ளை அடித்து இருக்கலாம் என்று கண்டறிந்தனர். தெற்கு ரயில்வே ஆர்.பி.எப். ஐ.ஜி. அருள் ஜோதி தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பதை கண்டு பிடிக்க களம் இறங்கினர்.
ரயிலில் சம்மந்தப்பட்ட பெட்டியில் முன் பதிவு செய்து பயணித்த பயணிகளின் பட்டியலை சரி பார்த்த ஆர்.பி.எப். போலீசார்., குளிர் சாதன பெட்டியில் படுக்கை விரிப்பை கொடுக்கும் ரயில்வே ஒப்பந்த ஊழியர்களிடம் நடத்திய விசாரணையில்., இரண்டாம் வகுப்பு குளிர் சாதன பெட்டியில் பயணித்த நான்கு பேர்கள், முதல் வகுப்பு பெட்டியில் ஏறியது உறுதியானது.
அந்த நான்கு பேரும்., ஹரியானா மாநிலம் சான்சி என்ற ஊரில் உள்ள ரயில்வே கவுண்டரில் டிக்கெட் முன் பதிவு செய்தது சிசிடிவி காட்சியில் தெரிந்தது. மேலும் மங்களூர் சூரத்கல் என்ற ஊருக்கு செல்வதற்காக முன் பதிவு செய்யப்பட்ட அவர்களின் ரயில் டிக்கெட் ரத்து செய்யப்பட்டதும் தெரிந்தது.
கேரள மாநிலம் கொயிலாண்டியில் இருந்து கோவா செல்ல திட்டமிட்ட கொள்ளையர்களை பிடிக்க சாதாரண உடையில் சென்ற ஆர்.பி.எப். போலீசார்., கோவாவில் வைத்து கைது செய்து விசாரித்தனர். அந்த 4 பேரும், ஹரியானா மாநிலத்தை சேர்ந்த சான்சி கொள்ளை கும்பலான, டில்பக், ஜிஜேந்தர், மனோஜ்குமார், ராஜேஷ் என தெரியவந்தது.
இந்த கொள்ளை கும்பலானது ரயிலில் பயணிக்கும் பயணிகளின் எந்த மாதிரியான சூட்கேசாக இருந்தாலும்., அதற்கு ஏற்ப பிரேத்யேக சாவியை கொண்டு திறந்து, நகைகளை திருடிய பிறகு மீண்டும் பூட்டி விட்டு வழக்கமாக தப்பி செல்வதை வாடிக்கையாக கொண்ட அதிர்ச்சி தகவல் தான் ZIP OPERATION என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்தியா முழுக்க பல்வேறு ரயில் நிலையங்களில் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட வழக்குகள் உள்ள சான்சி கொள்ளையர்களிடம் இருந்து முழுமையான வைர, தங்க நகைகளையும் முழுமையாக மீட்டனர். கேரள மாநிலம் கோழிக்கோடு ரயில்வே போலீசார், நான்கு பேரை கைது செய்து., நீதிமன்ற உத்தரவு படி சிறையில் அடைத்தனர்.
வழக்கமாக ரயிலில் பயணம் மேற்கொள்வோர்., தங்க நகை போன்ற விலை உயர்ந்த உடமைகளை கொண்டு செல்லும் போது., மிகவும் கவனமாகவும், விழிப்புடனும் இருக்க வேண்டும் என ஆர்.பி.எப். போலீசார் கேட்டுக்கொண்டு உள்ளனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu