RECENT NEWS

வீட்டில் பதுக்கப்பட்டிருந்த ரூ.1 கோடி மதிப்பு கஞ்சா பறிமுதல்

வீட்டில் பதுக்கப்பட்டிருந்த ரூ.1 கோடி மதிப்பு கஞ்சா பறிமுதல்

Mar 16, 2026

வீட்டில் பதுக்கப்பட்டிருந்த ரூ.1 கோடி மதிப்பு கஞ்சா பறிமுதல்

வீட்டில் பதுக்கப்பட்டிருந்த ரூ.1 கோடி மதிப்பு கஞ்சா பறிமுதல்

Mar 16, 2026

முகப்பு

"உங்க பொண்ணு செத்துட்டானு மாப்பிளை சிரிச்சுட்டே சொன்னான்".. ஆக்ரோஷமான பெண் வீட்டார்.. திருமணமான 9 நாளில் சோகம்..!

Jun 07, 2025 09:57 AM

112

"உங்க பொண்ணு செத்துட்டானு மாப்பிளை சிரிச்சுட்டே சொன்னான்".. ஆக்ரோஷமான பெண் வீட்டார்..  திருமணமான 9 நாளில் சோகம்..!


திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை சேர்ந்த பி.காம் பட்டதாரியான சாலினி என்பவர் , சென்னை ஆதம்பாக்கம் அம்பேத்கார் நகரில் வசிக்கும் அவரது சித்தி வீட்டில் தங்கி தனியார் மருத்துவமனைக்கு வேலைக்கு சென்றுவந்துள்ளார். அப்போது பக்கத்துக்கு வீட்டை சேர்ந்த, தனியார் நிறுவனத்தில் டெலிவரி பாயாக வேலை பார்த்து ஜெகன்நாதன் என்பவரின் பெற்றோர் ஷாலினியை பெண் கேட்டதாக கூறப்படுகிறது.

பைட் (()) ( ஷாலினியின் சித்தி )

இந்நிலையில் கடந்த மாதம் 28 ஆம் தேதியன்று சென்னை நங்கநல்லூரில் உள்ள திருமண மண்டபத்தில் இரு வீட்டார் சம்மதத்தோடு ஜெகன்நாதன் - சாலினி தம்பதியினருக்கு திருமணம் நடந்துள்ளது. திருமணத்தை முடித்துவிட்டு இருவரும் சாலினியின் தாயார் வீட்டிற்கு விருந்துக்கு சென்றுவிட்டு கடந்த 5 ஆம் தேதி சென்னையில் உள்ள ஜெகன்நாதனின் வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.

பைட் (())

சாலினி தனக்கு தலைவலிப்பதாக கூறி மாத்திரை வாங்கித்தருமாறு தனது கணவனிடம் கேட்டுள்ளார். ஜெகன்நாதன் உணவும், மெடிக்கலில் மாத்திரையும் மனைவிக்கு வாங்கிக் கொடுத்துள்ளார். பின்னர்
அன்று வீட்டில் உணவு சமைக்க முடியாததால் ஜெகன்நாதன் பக்கத்து வீட்டில் உள்ள அவரது அக்காவின் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.

மதியம் உணவு ரெடி ஆனதும் ஜெகன்நாதன் , ஷாலினியை சாப்பிட வருமாறு கூற போன் செய்தபோது போன் சுவிட்ச் ஆப்பில் இருந்ததாக சொல்லப்படுகிகிறது. உடனே ஜெகன்நாதன் வீட்டிற்கு சென்று கதவை தட்டியபோது உட்புறம் தாழிலிடப்பட்டிருந்தாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்து ஜன்னல் வழியாக பார்த்தபோது சாலினி அறையில் தூக்கிட்ட நிலையில் கிடந்தது தெரியவந்துள்ளது.

ப்ரீத் (())

சம்பவ இடத்திற்கு சென்ற ஆதம்பாக்கம் போலீசார் கதவை உடைத்து ஷாலினியை மீட்டு வேளச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து ஆதம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தபோது ஷாலினி இறப்பதற்கு முன்பு "தனக்கு இங்கு இருக்கவே பிடிக்கவில்லை" என கூறி மொபைலில் வீடியோ பதிவு செய்து வைத்திருந்ததை கைப்பற்றினர்.

ப்ரீத் (())

ஷாலினி இறந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள், "தங்களது மகள் இறப்பிற்கு ஜெகன்நாதன் தான் காரணம் என்றும் அவர் இங்கு வந்தே ஆக வேண்டும்" என ஆக்ரோஷமாக காவல் நிலையம் முன்பு கோஷமிட்டனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

என்ன கொடுமை சார் இது..! ஆத்திரத்தில் பாகிஸ்தான் வீரர்...இப்படியும் ஒரு  ரன் அவுட்- ஆ?  சர்ச்சையாக மாறி விவாதம்
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies