2,500 கிலோ கறி சமைத்து 5,000 பேருக்கு விருந்து
Feb 09, 2026
முகப்பு
எஸ்.ஐ.ஆர். பணிகளை தொடர உச்சநீதிமன்றம் அனுமதி
Nov 11, 2025 03:06 PM
41
எஸ்.ஐ.ஆர். பணிகளை தொடர உச்சநீதிமன்றம் அனுமதி
தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் எஸ்ஐஆர் பணிகளை தொடரலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
எஸ்ஐஆருக்கு எதிரான திமுக தொடர்ந்த வழக்கு விசாரணையின் போது, தமிழ்நாட்டில் பல இடங்களில் மழை பாதிப்பு உள்ள நிலையில், நிறைய இடங்களில் திருவிழா நடைபெறும் நேரத்தில் எப்படி S.I.R பணிகள் நடைபெறும்? என்று தி.மு.க. தரப்பில் வாதிடப்பட்டது.
குறைவான நேரத்தில் வாக்காளர் சரிபார்ப்பு பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்வது சரியானதாக இருக்காது என்றும் திமுக தரப்பில் வாதிடப்பட்டது.
நாடு முழுவதிலும் இயற்கை பேரிடர்கள் நடந்து கொண்டே தான் இருக்கும் அதை எப்படி கணக்கில் எடுத்துக் கொள்வது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் 2 வாரங்களில் பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனிடையே SIRக்கு ஆதரவாக அதிமுக தாக்கல் செய்த இடைக்கால மனுவை திமுக வழக்கோடு சேர்த்து விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. இரண்டு தரப்பினர் கோரிக்கையும் வேறு வேறு என்பதால் வாதிடும் போது குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால் தனி மனுவாக தாக்கல் செய்யுமாறு அதிமுகவு தரப்புக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu