RECENT NEWS

மது பாட்டிலில் ஊசி மூலம் விஷம் கலந்து இருவரை கொலை செய்த வழக்கு.. இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் தீர்ப்பு

மது பாட்டிலில் ஊசி மூலம் விஷம் கலந்து இருவரை கொலை செய்த வழக்கு.. இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் தீர்ப்பு

Mar 19, 2026

மது பாட்டிலில் ஊசி மூலம் விஷம் கலந்து இருவரை கொலை செய்த வழக்கு.. இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் தீர்ப்பு

மது பாட்டிலில் ஊசி மூலம் விஷம் கலந்து இருவரை கொலை செய்த வழக்கு.. இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் தீர்ப்பு

Mar 19, 2026

BIG STORIES

பசுபதி பாண்டியனுக்காக பழிக்கு பழியாக 4 கொலை.. கண்ணபிரான் திடீர் கைது ஏன்..? சிறை வாசலில் தட்டி தூக்கிய போலீஸ்

Nov 07, 2025 01:31 AM

434

பசுபதி பாண்டியனுக்காக பழிக்கு பழியாக 4 கொலை.. கண்ணபிரான் திடீர் கைது ஏன்..? சிறை வாசலில் தட்டி தூக்கிய போலீஸ்

பசுபதி பாண்டியனுக்காக பழிக்கு பழியாக 4 கொலை.. கண்ணபிரான் திடீர் கைது ஏன்..?

ஜெயிலில் இருந்து ரீலீசான அடுத்த சில வினாடிகளுக்கெல்லாம் , கண்ணபிரான், மீண்டும் புதிய வழக்கில் போலீசாரால் சுறிறிவளைத்து கைது செய்யப்பட்ட காட்சிகள் தான் இவை..!

பசுபதிபாண்டியன் கொலைக்கு பழிக்கு பழியாக , தீபக்ராஜாவுடன் இணைந்து தூத்துக்குடி மாவட்டம் பழையகாயல் அருகே 2 பேரையும், ராஜபாளையத்தில் இருவரையும் கொலை செய்த வழக்குகளில் போலீசாரால் கைது செய்யப்பட்டதால் பிரபலமானவர் கண்ணபிரான் என்கிற கண்ணபிரான் பாண்டியன்.

கண்ணபிரான் மீது ஒட்டு மொத்தமாக 15 கொலை , கொலை முயற்சி, வெடிகுண்டு வழக்கு, ஆயுத தடுப்பு சட்டம் உள்ளிட்ட 71 வழக்குகள் உள்ளதால் சரித்திர பதிவேட்டு குற்றவாளியாக போலீசாரால் அறிவிக்கப்பட்டவர் .

பெரும்பாலும் நேரடியாக களமிறங்காமல் , ஜெயிலுக்குள் இருந்தாலும், தன்னிடம் உள்ள இளைஞர்களை வைத்தே நினைத்ததை முடிப்பவர் கண்ணபிரான் என்று கூறும் போலீசார் , பசுபதி பாண்டியன் கொலைக்கு பழிக்குபழி வாங்கியவர் என்று அவரது சமூக இளைஞர்களிடம் பெயர் எடுத்ததால், நெல்லை தூத்துக்குடி மாவட்டத்தில் அவர் சார்ந்த சமூக மக்களிடம் தனிப்பட்ட செல்வாக்கு உள்ளது. அதனை வைத்து ஒரு சமூக இயக்கம் ஒன்றையும் தொடங்கி அதன் தலைவராகவும் உள்ளார்.

பலமுறை குண்டர் தடுப்புச்சட்டத்தில் சிறைக்கு சென்று திரும்பியவர் என்றாலும், அண்மையில் வழக்கு ஒன்றில் சிக்கி கடலூர் சிறையில் அடைக்கப்பட்ட கண்ணபிரான் இன்று ஜாமீனில் விடுதலையானார். தனது கணவரை சந்திக்க அவரது மனைவி குழந்தையுடன் வந்திருந்தார். ஆதரவாளர்களும் காத்திருந்தனர்

கண்ணபிரான் வெளியே வந்ததும், அங்கு கழுகு போல காத்திருந்த நெல்லை சிறப்பு காவல் ஆய்வாளர் தில்லை தலைமையிலான போலீசார் அவரை காவல் நிலைய பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் கைது செய்வதற்காக சுற்றி வளைத்தனர்

தனது மகனை கையில் வாங்கி வைத்துக் கொண்ட கண்ணபிரான் போலீசுடன் செல்ல மறுத்தார், தனது கணவரை கைது செய்ய கூடாது என்று அவரது மனைவியும் ஆதரவாளர்களும் போலீசாருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்

சிறை காவலர்கள் வெளியில் சென்று கைது செய்யுமாறு போலீசாரிடம் கூறியதோடு உடன் வந்தவர்களை வெளியே செல்லுமாறு கூறினர்.

இதனால் அவருடனேயே நடந்து வந்த போலீசார் கண்ணபிரானை அப்படியே வளைத்து போலீஸ் வாகனத்தில் ஏற்ற முயன்றனர், பதற்றமான அவர், குழந்தையுடன் சென்று சாலையில் அமர்ந்து மறியல் செய் என்று மனைவியிடம் கூறினார்

ஆனால் மனைவியோ நானும் வருவேன் என்று போலீஸ் வாகனத்தில் முதல் ஆளாக ஏறிக் கொண்டார். இதனால் கண்ணபிரான் தனது குழந்தையுடன் போலீஸ் வாகனத்தில் ஏறினார்

கண்ணபிரானின் ஆதரவாளர்கள் போலீசாருடன் தள்ளு முள்ளுவில் ஈடுபட்டனர், தடுத்த அத்தனை பேர் மீது வழக்கு பதியப்படும் என்று காவல் ஆய்வாளர் எச்சரித்ததும் ஆதரவாளர்கள் சிலர் விலகிச்சென்றனர்.

இதற்கிடையே போலீசாரின் டெம்போ டிராவலர் வாகனத்தை , கண்ணபிரான் ஆதரவாளர்கள் இரு கார்களில் விரட்டியதால் , நிலமை விபரீதமாவதை உணர்ந்த நெல்லை போலீசார் தங்கள் வாகனத்துடன் விருத்தாசலம் காவல் நிலையத்துக்குள் சென்றனர்

நிலைமையை எடுத்து கூறியதால் பெண் போலீசார் துணையுடன் கண்ணபிரானின் மனைவியை மகனுடன் வாகனத்தை விட்டு கீழே இறக்கி விடப்பட்டார். போலீசாரை கண்டதும் ஆதரவாளர்கள் பின்வாங்கினர். இதனையடுத்து எஸ்கார்டு பாதுகாப்புடன் கண்ணபிராணை போலீசார் நெல்லை அழைத்துச்சென்றனர்.

முன்னதாக சில தினங்களுக்கு முன்பு கண்ணபிரான் கைது செய்யப்பட்டதை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் காவல் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசியதாகவும், கண்ணபிரான் தூண்டுதலில் பேரிலேயே இந்த சம்பவம் நடந்ததாக வழக்கு பதிவு செய்து போலீசார் கண்ணபிரானை மீண்டும் கைது செய்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

ரூ 800 கோடி நில மோசடி.. போலீசுக்கு டிமிக்கி கொடுத்த கேபிள் செந்தில் திடீர் நாடகம்..! மிரட்டல் வழக்கில் தப்பிக்க டெக்னிக்
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies