RECENT NEWS

அமெரிக்காவில் சாலை விபத்தில் இந்திய மாணவி மரணம் - ரூ.260 கோடி இழப்பீடு வழங்க சியாட்டில் மாநகராட்சி சம்மதம்

அமெரிக்காவில் சாலை விபத்தில் இந்திய மாணவி மரணம் - ரூ.260 கோடி இழப்பீடு வழங்க சியாட்டில் மாநகராட்சி சம்மதம்

Feb 12, 2026

அமெரிக்காவில் சாலை விபத்தில் இந்திய மாணவி மரணம் - ரூ.260 கோடி இழப்பீடு வழங்க சியாட்டில் மாநகராட்சி சம்மதம்

அமெரிக்காவில் சாலை விபத்தில் இந்திய மாணவி மரணம் - ரூ.260 கோடி இழப்பீடு வழங்க சியாட்டில் மாநகராட்சி சம்மதம்

Feb 12, 2026

முகப்பு

கல்லூரி காதல் திருமணம் காட்டிக்கொடுத்த போலீஸ் எஸ்.ஐ. தலை, கைகளை உடைத்த பெண் குடும்பம்..! சினிமா பாணியில் திகில் சம்பவம்!

Sep 26, 2025 04:10 PM

96

கல்லூரி காதல் திருமணம் காட்டிக்கொடுத்த போலீஸ் எஸ்.ஐ.
தலை, கைகளை உடைத்த பெண் குடும்பம்..! சினிமா பாணியில் திகில் சம்பவம்!

காதல் திருமணம்; காட்டிக்கொடுத்த போலீஸ்! தலை, கைகளை உடைத்த பெண் குடும்பம்; திகில் சம்பவம்!

கவின் ஆணவப்படுகொலை, மயிலாடுதுறை வைரமுத்து ஆணவப்படுகொலை என மாற்று சாதியில் காதலித்ததால், ஆணவப்படுகொலை செய்த சம்பவங்கள் தமிழ்நாட்டையே உலுக்கிவருகின்றன. இந்நிலையில், சாதிமறுப்பு திருமணம் செய்துகொள்ளும் தம்பதியர்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டிய போலீஸ் அதிகாரி ஒருவரே, அவர்கள் இருக்கும் லொகேஷன்களை எடுத்து, பெண் வீட்டாரிடம் கொடுத்து, கொலை முயற்சிக்கு ரூட்டு போட்டுகொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் அருகே முத்துகவுண்டன் புதூரில் உள்ள அங்காளம்மன் கோவில் தெருவில், வாடகை வீட்டில் வசிக்கும் 22 வயது சரண்யா தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர், தேனி அருகே கல்லூரியில் படிக்கும் போது, தேனி மாவட்டம் அல்லி நகரைச் சேர்ந்த பேருந்து ஓட்டுனரான விக்னேஷ் என்பவரை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகின்றது. இவர்களின் காதலுக்கு சரண்யாவின் பெற்றோர், கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த ஜூலை 5 ஆம் தேதி, இருவரும் சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்டு, பின்னர் கோவையில் முத்து கவுண்டன் புதூரில் வசித்து வந்தனர்.

அதாவது, கடந்த செப்டம்பர் 24 ஆம் தேதி மாலை 5 மணியளவில், சரண்யாவின் வீட்டு கதவை யாரோ தட்டியதை அடுத்து, ஜன்னல் வழியாக பார்த்தபோது, அவரது தந்தை ஆனந்தன், தாய் லதா, மாமா ஈஸ்வரன், அத்தை மகேஸ்வரி, அண்ணன் பிரகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் விஜய், ஆதிபன் உள்ளிட்டோர் வீட்டின் முன்பு கொலைவெறியோடு நின்று கொண்டிருந்தனர். அவர்கள் சரண்யாவை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், "உன்னை வெட்டி புதைத்து விடுவோம்" என மிரட்டி, வீட்டு கதவை கைகளாலும் கால்களாலும் உடைக்க முயன்றுள்ளனர்.

சரண்யா கதவை உள்புறமாக பூட்டிக்கொண்ட நிலையில், அக்கம் பக்கத்தினர் சத்தம் கேட்டு வரவே அக்கம் பக்கத்தினரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. கதவை உடைத்து உள்ளே வர முயற்சித்துக்கொண்டிருந்த சூழலில், சரண்யா பதறியடித்துக்கொண்டு காவல் கட்டுப்பாட்டு அவசர உதவி எண்ணான 100-க்கு தகவல் தெரிவித்தார். இதுபற்றி தகவல் அறிந்த சூலூர் காவல் ஆய்வாளர் செல்வராகவன், உதவி ஆய்வாளர் அருள் பிரகாஷ் மற்றும் போலீசார் உடனடியாக விரைந்து சென்று சரண்யாவையும் அவரது கணவர் விக்னேஷையும் மீட்டனர்.

இதுகுறித்து, போலீஸார் விசாரித்தபோது, கல்லூரியில் பேருந்து ஓட்டும்போது விக்னேஷிற்கும் சரண்யாவிற்கு காதல் ஏற்பட்டுள்ளது. மூன்று வருடங்களுக்குப்பிறகு சரண்யாவின் அப்பா-அம்மாவிற்கு தகவல் சொல்லியுள்ளனர். திருமணம் செய்துவைக்கிறோம் என கோயம்புத்தூர் பேருந்து நிலையத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடத்திவிட்டு பெண்ணை அழைத்து சென்றுள்ளனர். வீட்டிற்குபோன இரண்டு நாட்களுக்குப்பிறகு, சாதியைக் காரணம் காட்டி, திருமணம் எல்லாம் செய்துவைக்கமுடியாது என கூறியதோடு, பெண்ணின் வீட்டார் கொலைமிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், இளம்பெண் சரண்யாவை ஹவுஸ் அரெஸ்ட் செய்து தலை, கைகளை உடைத்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில்தான், இருவரும் பெண் வீட்டின் எதிர்ப்பை மீறி சாதிமறுப்பு திருமணம் செய்துகொண்டு, கோவையில் வசித்து வந்தனர். இந்தநிலையில்தான், காலை 9 மணீக்கு வேலைக்கு சென்றுள்ளார், விக்னேஷ். மனைவி சரண்யா தனியாக வீட்டில் இருந்துள்ளார். இந்தநிலையில்தான், காதல் தம்பதியர் வசிக்கும் வீட்டு முகவரியை தெரிந்துகொண்டு, கொலை வெறி தாக்குதல் நடத்த வந்தது தெரியவந்துள்ளது. இந்த இடம் எப்படி தெரிந்தது என்ற கேள்விக்கு தேனி மாவட்டம் ராயப்பன்பட்டி காவல்நிலைய எஸ்.ஐ. ஒருவர்தான் தங்களது லொகேஷனை எடுத்து கொடுத்துள்ளார் என குற்றம் சாட்டியுள்ளனர்.


இதுகுறித்து சரண்யா, சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் சரண்யாவின் பெற்றோர் மற்றும் உறவினர்களான ஆனந்தன், லதா, ஈஸ்வரன், மகேஸ்வரி, பிரகாஷ், விஜய், ஆதிபன் ஆகிய 7 பேர் மீது ஆள் கடத்தல், சாதி வன் கொடுமை சட்டம், மற்றும் பெண்கள் துன்புறுத்தல் தடுப்பு சட்டப் பிரிவு 4-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விசாரணையை சூலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அருள் பிரகாஷ் விசாரணை செய்தார். சூலூர் போலீசார் தப்பி ஓடிய ஏழு பேரையும் கைது செய்து சூலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.


போலீஸார் வர இன்னும் கொஞ்சம் தாமதித்திருந்தாலும் இளம்பெண்ணின் உயிருக்கு ஆபத்தாக முடிந்திருக்கும் என்கிறார்கள், அக்கப்பக்கத்தினர். அதுவும், சாதி மறுப்பு திருமணம் செய்துகொள்வோருக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டிய காவல்துறை உதவி ஆய்வாளரே, காதல் தம்பதியரின் முகவரியை கண்டுபிடித்து பெண் வீட்டாருக்கு கொடுத்து, கொலைமுயற்சிக்கு காரணமாக அமைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது. இதுகுறித்து. உயரதிகாரிகள் விசாரணை செய்துவருவதாக கூறப்படுகிறது.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

"சூர்யா - ஜோ திருமணத்திற்கு இதனால் தான் சம்மதித்தேன்.. அயோக்கிய பெண் ராதிகாவின் வேலை" சிவக்குமார் பகிர்ந்த தகவல்கள்..!
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies