அரசியல்
தி.மு.க. ஆட்சிக்கு வந்த கடந்த 5 ஆண்டுகளில் 8,008 கொலைகள் - அண்ணாமலை
Mar 14, 2026 12:05 PM
6
தி.மு.க. ஆட்சிக்கு வந்த கடந்த 5 ஆண்டுகளில் 8,008 கொலைகள் நடந்துள்ள நிலையில், முதலமைச்சர் சமூகவலைதளத்தில் ரீல்ஸ் வெளியிட்டு வருவதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
கோவையில் பேட்டியளித்த அவர், தி.மு.க. ஆட்சியில் 5 ஆண்டுகளில் 2,080 பாலியல் குற்றங்களும், 39,999 போக்சோ வழக்குகளும் பதியப்பட்டுள்ளதாக கூறினார். அண்டை மாநிலங்கள் பள்ளி மாணவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவத தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மாணாக்கர்களுடன் ரீல்ஸ் வெளியிட்டு விளம்பரம் செய்து கொண்டிருப்பதாகவும் அண்ணாமலை சாடினார்.
தி.மு.க. கூட்டணியினர் பீதியை கிளப்பியதால் தான் பெட்ரோல் பங்குகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதாக விமர்சித்த அண்ணாமலை, போர் காரணமாக அண்டை நாடுகளில் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் விலை உயர்த்தப்படாமல் தான் உள்ளதாக குறிப்பிட்டார்.
தி.மு.க. கொடுக்கும் 5 தொகுதிகளை திருமாவளவன் நிச்சயம் ஏற்கமாட்டார் என்றும், கூட்டணியில் இருந்து வி.சி.க. மற்றும் கம்யூனிஸ்டுகள் வெளியேற வாய்ப்பு உள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்தார். மேலும், வைகோவை பார்ப்பதற்கே தனக்கு மிகவும் கஷ்டமாக உள்ளதாகவும், வெறும் 4 தொகுதிகளை வாங்கிவிட்டு கஷ்டப்பட்டு அவர் சிரித்துக் கொண்டிருப்பதாகவும் அண்ணாமலை கூறினார்.
பா.ஜ.க. கூட்டணிக்கு த.வெ.க. வருமா? என எழுப்பபட்ட கேள்விக்கு த.வெ.க. தொடர்பான தங்களின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்றார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu