BIG STORIES
புஷ்பா புருஷர் யாரு ? 3 இளைஞர்கள் போட்டி இளைஞரை கடித்து குதறிய பெண்..! டாஸ்மாக் மகிமையால் மல்லுக்கட்டு
Nov 28, 2025 02:59 PM
691
புஷ்பா புருஷர் யாரு ? 3 இளைஞர்கள் போட்டி இளைஞரை கடித்து குதறிய பெண்..! டாஸ்மாக் மகிமையால் மல்லுக்கட்டு
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பேருந்து நிலையம் அருகே ஒரு பெண்ணுக்காக 3 போதை இளைஞர்கள் அடித்துக் கொண்டனர். அப்போது தடுக்க வந்த போலீசார் முன்னிலையில் ஒரு இளைஞரை , மற்றொரு பெண் கடுமையாக தாக்கி கடித்து வைத்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
ஒரு வேளை சீன வர்மக்கலை ஏதும் கத்துருக்குமோ...? என்னா அடி ...! என்னா கடி...! போலீஸ் தடுத்தும் கேட்கலையே ...! எதற்காக
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பேருந்து நிலையம் அருகே இளம் பெண்ணை அழைத்து செல்வது யார் என்ற போட்டியில் காக்கிச்சட்டை அணிந்த இளைஞர், அந்த பெண்ணை சரமாரியாக தாக்கிக் கொண்டிருந்தார்.
இரு இளைஞர்கள் தடுத்து , தங்களுடன் அழைத்து செல்ல முயன்றனர். அந்த பெண்ணை அடிப்பதை பார்த்து அங்கு வந்த மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் தடுத்து நிறுத்தினர். அடி வாங்கிய பெண்ணோ பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தார்.இதற்கிடையே தாக்குதல் நடத்திய காக்கிச்சட்டை இளைஞருக்கு , மற்றொரு பெண் புத்திமதி சொல்லிக் கொண்டிருந்தார்.
சிவப்பு சட்டை, கருப்பு சட்டை மற்றும் காக்கிசட்டை அணிந்த அந்த 3 இளைஞர்களும் அந்த பெண்ணை தங்கள் மனைவி என்று உரிமை கொண்டாடி தங்களுடன் வருமாறு அழைத்தனர். அந்த பெண் யாருடனும் செல்ல விரும்பவில்லை. கூட்டத்தில் ஏட்டு ஏகாம்பரம் போல உள்ளே நுழைந்த அந்தபகுதி பஞ்சாயத்தார் ஒருவர் போலீசுக்கு தகவல் சொல்லியாச்சி, பொறுமையாக இருக்கனும் என்று சொல்ல, கருப்பு சட்டை போட்டிருந்த இளைஞர் “சார்.. அந்த பொண்ணு என் பெயரை பச்சை குத்தி வச்சிருக்கா பாருங்க..” என்று தன் தரப்பு நியாயத்தை கூறினார்.
சிறிது நேரத்தில் அங்கு வந்த போலீசார் அவர்கள் 3 பேரையும் விசாரிக்க வேண்டும், காவல் நிலையம் வாருங்கள் என அழைத்தனர். இதனால் ஆவேசமான மற்றொரு பெண், காக்கி சட்டை போட இளைஞரிடம், நான் தான் முதலிலேயே சொன்னென்ல, நீ கேட்காததால் இப்ப போலீஸ் வந்திருக்கு என்று சொல்லி அந்த இளைஞரை சரமாரியாக தாக்கத்தொடங்கினார்.
ஒரு கட்டத்தில் பாய்ந்து விழுந்து அந்த இளைஞரை பெண் கடித்து குதறியதால் போலீசார் மிரண்டு போயினர்.இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த பெண்ணை தடுத்தனர், இருந்தாலும் அடங்க மறுத்து ஆவேசம் காட்டிய அந்த பெண், காக்கிச்சட்டை போட்ட ஆசாமியை கன்னத்தில் பளார் பளார் என்று அறைந்தார்
போலீசார் அந்த பெண்ணை தடுத்தனர் , 3 பேரையும் காவல் நிலையம் அழைத்துச்சென்றனர். போலீசுடன் செல்லும் போது கருப்பு சட்டை அணிந்த இளைஞர், தங்களை போலீசில் சிக்கவைத்த பஞ்சாயத்தாரை பார்த்து , புஷ்பா பாணியில் தன்னை யாரும் அடக்க முடியாது என்று சைகைகாட்டியவாறே சென்றார்.
வடிவேலுவின் காமெடியில் வருவது போல நிஜத்தில் ஒரு பெண்ணுக்காக 3 பேர் அடித்துக் கொண்ட இந்த சம்பவத்தில் அந்த புஷ்பாவின் ஒரிஜினல் புருசர் யார் ? என்று போலீசார் விசாரித்தனர். அந்த இரு பெண்கள் உள்பட அனைவருமே போதையில் இருந்ததால் பொறுமை இழந்த போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்து விட்டதாக தெரிவித்தனர். டாஸ்மாக் உபயத்தால் போதையில் பாதையில் விழுந்து ஆண்களுடன் பெண்களும் சாலையில் அடித்து மல்லுக்கட்டிக் கொண்ட சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu