ஜனநாயகன் வழக்கு - படத்தயாரிப்பு நிறுவனம் வாபஸ்
Feb 10, 2026
BIG STORIES
மனித நேயம் இல்லா காப்பக கொடுமைகள்.. பெண்ணை தாக்கும் காட்சி..! மர்ம மரண விசாரணையில் திகில்
Nov 25, 2025 04:36 PM
384
மனித நேயம் இல்லா காப்பக கொடுமைகள்.. பெண்ணை தாக்கும் காட்சி..! மர்ம மரண விசாரணையில் திகில்
சென்னை ஆவடி அடுத்த சேக்காடு பகுதியில் செயல்பட்டுவந்த RK மனித நேய காப்பகத்தில் மன நலம் குன்றிய பெண் ஒருவர் மர்மமான முரையில் உயிரிழந்த நிலையில், இது குறித்து விசாரித்த போது , சாப்பாட்டிற்கு வரிசையில் நிற்கும் பெண் ஒருவரை காப்பாக உரிமையளர் கடுமையாக தாக்கிய வீடியோ கிடைத்துள்ளது
பெயருக்கு மனித நேய காப்பகம் என்று வைத்து விட்டு காப்பகத்தில் உள்ள பெண்களை தாக்கியதாக புகாருக்குள்ளாகி இருக்கும் ரியாஸ் இவர் தான்..!
சென்னை ஆவடி அடுத்த சேக்காடு அண்ணாநகர் அன்னை சத்தியா நகர் பகுதியில் RK மனிதநேய காப்பகம் எனும் பெயரில் மன நோயாளிகள் மறு வாழ்வு மையம் இயங்கி வருகிறது. இங்கு உரிய கட்டணம் வசூலித்துக் கொண்டு மனநலம் பாதிக்கப்பட்ட சிறியவர்கள் பெரியவர்கள் என 54 பேர் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இதனை ரியாஸ் என்பவர் நடத்தி வருகிறார். இதில் வேளச்சேரியை சேர்ந்த பாஸ்கர் என்பவர் தனது மனநலம் பாதிக்கப்பட்ட தாய் மேரியை கடந்த 20 தினங்களுக்கு முன்னர் மாதம் 5 ஆயிரம் என 3 மாத தொகையா 15 ஆயிரம் ரூபாயை கட்டி சேர்த்துள்ளார்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை உடல் நிலை சரி இல்லாமல் மேரி உயிரிழந்து விட்டதாக மகன் பாஸ்கருக்கு தகவல் தெரிவித்துள்ளானர். இதனால் அதிர்ச்சி அடைந்த மகன் பாஸ்கர் உடனடியாக காப்பகத்திற்கு சென்று விசாரித்துள்ளார். காப்பகம் சார்பில் முறையாக பதில் அளிக்க வில்லை என கூறப்படுகிறது. இதனால் உடனடியாக காவல் கட்டுபாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆவடி போலீசார் உயிரிழந்த மேரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து காவல்துறை தரப்பில் கூறுகையில் உடற்கூறாய்வு மருத்துவ அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதனிடையே இந்த காப்பகத்தில் சில மாதங்களுக்கு முன்பு உணவு வாங்குவதற்காக கையில் தட்டுடன் காத்திருந்த பெண்ணை காப்பக உரிமையாளர் ரியாஸ் கையால் கடுமையாக தாக்கும் வீடியோ வெளியாகி உள்ளது
மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை முகத்தில் பலமாக அறைந்து கழுத்தை நெரித்து உள் அறைக்குள் தள்ளிச்செல்லும் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகியுள்ளது
அடி வலி தாங்காமல் நான் ஏதும் செய்யவில்லை என அந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கூறும்போதும் விடாமல் அந்த பெண்ணை அடித்து கழுத்தை நெரித்து தலை முடியை பிடித்து தாக்கி ஒரு அறைக்குள் அழைத்து சென்றது ஏன் ? என்று ரியாசிடம் விசாரணையை முன்னெடுத்துள்ளனர் போலீசார். அதே நேரத்தில் சமூக நலத்துறை அதிகாரிகள் உடனடியாக சம்மந்தப்பட்ட காப்பகத்தில் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu