5 வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்
Mar 14, 2026
முகப்பு
''நகை திருட்டு வழக்கில் குற்றவாளியை பிடிக்க முடியவில்லை எனில் இழப்பீடு வழங்குக'' - மதுரை அமர்வு உத்தரவு
Nov 25, 2025 02:32 PM
71
''நகை திருட்டு வழக்கில் குற்றவாளியை பிடிக்க முடியவில்லை எனில் இழப்பீடு வழங்குக''
நகைத் திருட்டு வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீட்டை தமிழக அரசு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த பெண் ஒருவர் 2015ல் தனது வீட்டில் 75 சவரன் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாகவும், வழக்கு பதிவு செய்யப்பட்டு 9 வருடங்கள் ஆகியும் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை என்றும் வழக்குத் தொடர்ந்தார். அதனை விசாரித்த நீதிபதி புகழேந்தி, நகை திருட்டு வழக்கில் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை என போலீசார் பதிவு செய்த நாளில் இருந்து குறிப்பிட்ட கால இடைவெளிக்குள், சம்பந்தப்பட்ட நகையின் மொத்த மதிப்பில் 30% தொகையை புகார்தாரருக்கு தமிழக அரசு இழப்பீடாக வழங்க உத்தரவிட்டார்.
நகை திருட்டு தொடர்பாக கண்டுபிடிக்க முடியாத வழக்குகளை, விசாரணை நடத்தி கண்டுபிடிப்பதற்காக திறமை மிக்க காவல்துறை அதிகாரிகளை கொண்ட ஒரு சிறப்பு காவல் பிரிவை மாவட்டம் தோறும் உருவாக்க வேண்டும் என்றும் நீதிபதி அறிவுறுத்தினார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu