ஜனநாயகன் வழக்கு - படத்தயாரிப்பு நிறுவனம் வாபஸ்
Feb 10, 2026
முகப்பு
டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு - 50 சதவீத ஊழியர்களுடன் செயல்பட அரசு, தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவு
Nov 25, 2025 01:19 AM
69
டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு
தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதால், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்பட அரசு உத்தரவிட்டுள்ளது.
மற்றவர்களை வீட்டில் இருந்தே பணியாற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாசு அதிகரிப்பால், நகரின் பல பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசம் என்ற அளவுக்கு பதிவாகியுள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
கடுமையான புகைமூட்டம்போல் நிலவும் காற்று மாசால், மூச்சுத்திணறல் உள்ளிட்டவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, வேலை நேரங்களை மாற்றவும், பீக்-ஹவர் நேரங்களில் வாகனப் பயன்பாட்டை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மருத்துவமனைகள், தீயணைப்பு சேவைகள், பொதுப் போக்குவரத்து, மின்சாரம், குடிநீர் விநியோகம், பேரிடர் மேலாண்மை துறைகளுக்கு இந்த 50 சதவீத பணியாளர் உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu