இந்தியா
காங். மக்களிடையே பதற்றத்தையும், பீதியையும் ஏற்படுத்துகின்றனர் - பிரதமர்
Mar 14, 2026 01:49 PM
12
காங். மக்களிடையே பதற்றத்தையும், பீதியையும் ஏற்படுத்துகின்றனர் - பிரதமர்
நாட்டு மக்கள் மீதான போரின் தாக்கத்தை குறைக்க மத்திய அரசு பணியாற்றும் நிலையில் காங்கிரஸ் கட்சியினர் மக்களிடையே பதற்றத்தையும், பீதியையும் ஏற்படுத்துவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அசாமின் சில்ச்சாரில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், உலகம் முழுவதும் தற்போது போர்ச்சூழல் நிலவும் நிலையில், இதனால் மக்கள் சிரமங்களை எதிர்கொள்ளாமல் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்வதாக குறிப்பிட்டார்.
மேலும், காங்கிரஸ் கட்சியினருக்கு நாடு குறித்த எந்த தொலைநோக்குப் பார்வையும் இல்லை என விமர்சித்த பிரதமர், தன்னை அவதூறு செய்வது, மக்களை தவறாக வழிநடத்துவதை மட்டுமே அவர்கள் அறிந்திருப்பதாகவும் கூறினார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu