கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா
Mar 13, 2026
தங்கம் விலை ரூ.560 குறைந்தது
Mar 13, 2026
42 வயது பெண் கூட்டு பா*யல் வன்கொடுமை என புகார்
Mar 13, 2026
காய்கறிகளின் விலை 20% வரையில் குறைந்தது
Mar 13, 2026
BIG STORIES
தீரன் சொன்ன கதை என்ன..? பவாரியா குற்றவாளிகளுக்கு காத்திருக்கும் தண்டனைகள்..! மீட்கப்பட்ட நகைகள் எவ்வளவு ?
Nov 22, 2025 05:32 AM
202
தீரன் சொன்ன கதை என்ன..? பவாரியா குற்றவாளிகளுக்கு காத்திருக்கும் தண்டனைகள்..!
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அதிமுக எம்.எல்.ஏ.வாகவும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும் இருந்தவர் சுதர்சனம். கடந்த 2005 ஆம் ஆண்டு ஜனவரி 9 தேதி அதிகாலை சுமார் 3 மணிக்கு சுதர்சனம் வீட்டிற்குள் புகுந்த வடநாட்டைச் சேர்ந்த கொள்ளை கும்பல் ஒன்று நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தி அவரை கொலை செய்ததுடன், அவரது வீட்டில் இருந்த பணம், சுமார் 62 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே கண்டுபிடிக்கப்படாமல் இருந்த 20 சம்பவங்களுடன், தனது கட்சி எம்.எல்.ஏ. வையும் சுட்டுக் கொன்று நகைகளை கொள்ளையடித்த சம்பவத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. இதில் தொடர்புடைய கொள்ளையர்களைச் சுட்டுப்பிடிக்கவும் , கொள்ளையர்களை பிடிக்காமல் தமிழகத்திற்குள் வரகூடாது என்றும் தனிப்ப்டை காவல்துறைக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
அப்போது வடக்கு மண்டல ஐஜியாக பொறுப்பு வகித்த ராஜஸ்தானை பூர்வீகமாக கொண்ட ஐபிஎஸ் அதிகாரி ஜாங்கிட் தலைமையிலான 5 தனிப்படை போலீசார், கொள்ளை கும்பலை தீவிரமாக தேடி பல வட மாநிலங்களுக்கு சென்றனர். மிகத் தீவிரமாகச் செயல்பட்ட தனிப்படை, ஒரு மாத தேடுதல் வேட்டைக்கு பின்னர் சம்பவத்தில் ஈடுபட்டது அரியானாவை பூர்வீகமாக கொண்ட பவாரியா கொள்ளையர்கள் என்பதை கண்டுபிடித்தனர்.
பவாரிய கொள்ளை கும்பலை சேர்ந்த 32 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. முக்கியக் குற்றவாளியை 2005 பிப்ரவரி 1 ம் தேதி கைது செய்ததாக தெரிவித்த போலீசார் , தொடர்ந்து துப்பு துலக்கி 2005 மார்ச் மாதத்தில் ஹரியாணா, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பவாரியா கொள்ளையர்கள் 9 பேரை கைது செய்தனர். பவாரியா கொள்ளை கும்பல் தலைவன் ஓமா என்ற ஓம் பிரகாஷ், அவரது சகோதரர் சந்தோ என்ற சந்தோஸ், ஜெகதீஸ்வரா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
2005 செப்டம்பரில் முக்கியக் குற்றவாளிகள் இருவர் வடமாநிலத்தில் வைத்து உத்தரபிரதேச சிறப்பு படை உதவியுடன் ஐஜி ஜாங்கிட் தனிப்படையினர் என்கவுன்ட்டர் மூலம் சுட்டுக் கொன்றனர். இதில் கைது செய்யப்பட்ட சிறையில் அடைக்கப்பட்ட மூன்று பெண்கள் ஜாமீன் பெற்று தலைமறைவாகி விட்டனர். அவர்களை இதுவரை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. கைது செய்யப்பட்ட ஓம்பிரகாஷ் பவாரியா உள்ளிட்ட இருவர் சிறையிலேயே இறந்துவிட்டனர்.
மீதமுள்ள ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகிய மூன்று பேரும் தற்போது வரை சிறையில் உள்ளனர். ஜெயில்தார் சிங் என்பவர் ஜாமீன் பெற்று வழக்கு விசாரணையை சந்தித்து வருகிறார். இவர் பி.எட் பட்டதாரி இந்த நான்கு பேருக்கு எதிரான வழக்கு மட்டும் தனியாக பிரிக்கப்பட்டு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆப்ரஹாம் லிங்கன் விசாரித்து வந்தார்.
இந்த சம்பவத்தின் அடிப்படையில் தான் கார்த்தி நடிப்பில் தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தை எச்.வினோத் இயக்கி இருந்தார்
இப்படிப்பட்ட கொடூர வழக்கில், காவல் துறை தரப்பில் 86 பேர் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர். அனைத்து தரப்பு சாட்சிகள் மற்றும் குறுக்கு விசாரணையும் முடிந்த நிலையில், 20 வருடங்கள் கடந்து வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்த நீதிபதி, குற்ற குற்றஞ்சாட்டப்பட்ட ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க பட்டுள்ளது. எனவே இவர்களை குற்றவாளி என தீர்மானிப்பதாக அறிவித்தார். குற்றவாளி, ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகியோர் க்கான தண்டனை விவரங்களை நவம்பர் 24ஆம் தேதி வழங்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.
வழக்கின் தீர்ப்பை அறிவதற்காக நேரில் வந்திருந்த ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஜாங்கிட் கூறும் போது, தாங்கள் கைது செய்தாலும் அதன் பின்னர் வந்த தமிழக காவல் அதிகாரிகள் சிறப்பாக வழக்கை நடத்தியதால் கொள்ளையர்களை குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக தெரிவித்தார்
காவல்துறையினர் சிறப்பாக துப்புதுலக்கியதாக பாராட்டு தெரிவித்தார் சுதர்சனம் எம்.எல்.ஏவின் மகன்
அதே நேரத்தில் இந்த வழக்கில் கொள்ளை சம்பவத்தை நிரூபித்த அரசு தரப்பு, சுதர்சனத்தை பவாரியா கொள்ளையர்கள் தான் கொலை செய்தனர் என்பதை நிரூபிக்க தவறியதாக தெரிவித்த எதிர்தரப்பு வழக்கறிஞர் சங்கரசுப்பு, அதனால் குறைந்தபடச தண்டனை வழங்க கோரி இருப்பதாக தெரிவித்தார்
தமிழகத்தில் 25 க்கும் மேற்பட்ட கொள்ளை சம்பவத்தில் 1300 சவரனுக்கும் அதிகமாக பறித்துச்சென்றதாக கைதான இந்த பவாரியா கொள்ளையர்களிடம் இருந்து, 4 லாரிகளை மட்டுமே பறிமுதல் செய்ததாக நீதிமன்றத்தில் போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.
கூட்டாக செய்தாலும், குழுவாக செய்தாலும், நகைக்காக செய்தாலும், குற்றம் கேடு தரும்..!
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu