முகப்பு
7 வயது சிறுமியின் சாட்சியம்.. பெண்கள் இரட்டை கொலையில் 3 பேருக்கு 6 ஆயுள் தண்டனை..! 2016ல் டீச்சர் வீட்டில் நடந்த கொடூரம்
Nov 20, 2025 04:20 PM
266
டீச்சர் வீட்டில் நடந்த கொடூரம்
சென்னை அடுத்த குன்றத்தூரில் நடந்த தாய் - மகள் கொலை வழக்கில் 7 வயது சிறுமியின் சாட்சியத்தை ஏற்று 2 பெண்கள் உள்ளிட்ட 3 கொலையாளிகளுக்கும் 6 ஆயுள் தண்டனைகளை விதித்து காஞ்சிபுரம் நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பு வழங்கி உள்ளது.
“உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைத்து திட்டமிட்டு இரட்டை கொலைகளை அரங்கேற்றியதால் நீதிமன்றத்தால் 6 ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்ட கொடூர குற்றவாளிகள் இவர்கள் தான்..!
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை பூர்வீகமாக கொண்டவர் ராமசாமி, இவர் ஏமன் நாட்டில் பொறியாளராக பணிபுரிந்த நிலையில் சென்னை அடுத்த இரண்டாம் கட்டளை பெசில் கார்டன் பகுதியில் சொந்தமாக வீடுவாங்கி குடும்பத்துடன் குடிபெயர்ந்தார். ராமசாமியின் மனைவி தேன்மொழி ஆசிரியையாக பணிபுரிவதால் 7 வயது மகள் மற்றும் 9 மாத பெண் குழந்தையை பார்த்துக் கொள்வதற்காக அவரது தாய் வசந்தாவும் உடனிருந்தார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ந்தேதி காலையில் தேன்மொழி பள்ளிக்கூடத்திற்கு சென்ற பின்னர் வீட்டில் இருந்த வசந்தாவை, வீட்டில் ஏற்கனவே பணிபுரிந்த சத்யா, தவுலத் பேகம் ஆகியோர் சந்தித்துள்ளனர். இருவரையும் நலம் விசாரித்த வசந்தா அவர்களை வீட்டுக்குள் அழைத்துச்சென்று காப்பி கொடுத்து பேசிக் கொண்டிருந்தார். சத்யாவும், தவுலத் பேகமும் குழந்தைகளிடம் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது ஏற்கனவெ திட்டமிட்டபடி வீட்டிற்குள் திடீரென புகுந்த சத்யாவின் ஆண் நண்பர் ஜெயகுமார், வசந்தாவின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துள்ளார். இதனை பார்த்து 7 வயது சிறுமி கதறி அழுத நிலையில், அந்த சிறுமியையும் 9 மாத பெண் குழந்தையும் சத்யா வீட்டின் மேல் தளத்திற்கு தூக்கிச் சென்றுள்ளார். வீட்டின் பீரோ சாவி கிடைக்காததால் ஆசிரியை வரும் வரை அவர் வீட்டிலேயே சமைத்து சாப்பிட்டு காத்திருந்துள்ளனர்.
மாலையில் ஆசிரியை தேன்மொழி வீடுதிரும்பிய நிலையில் அவரையும் வீட்டின் கதவுக்கு பின்புறம் மறைந்திருந்த ஜெயக்குமார் கழுத்து அறுத்து கொலை செய்துள்ளான். அவரிடம் இருந்து பீரோவை திறந்து பார்த்த போது உள்ளே பெரிய அளவில் நகை பணம் இல்லை. இதனால் தேன்மொழி மற்றும் வசந்தா அணிந்திருந்த நகைகளை மட்டும் கொள்ளையடித்துள்ளனர்.
இரு குழந்தைகளையும் உயிரோடு விட்டால் தங்களை காட்டிக் கொடுத்து விடும் என்று 7 வயது சிறுமியின் கழுத்தில் அரிவாளை முனையால் அறுத்துள்ளனர் ரத்தம் வந்ததும் சிறுமி மயங்கி சரிந்தாள், அடுத்து 9 மாத பெண் குழந்தையின் மீது தலையனையை வைத்து அழுத்தி உள்ளனர். அந்த குழந்தையும் மயங்கியதால் இரு குழந்தைகளும் உயிரிழந்து விட்டதாக நினைத்து கொடூர கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.
இறைவன் அருளால், அதிர்ஷடவசமாக உயிர் பிழைத்த 7 வயது சிறுமி கழுத்தில் ஏற்பட்ட ரத்த காயத்துடன் தனது 9 மாத சகோதரியை தூக்கிக் கொண்டு அருகில் வசிக்கும் கன்னியப்பன் என்பரது வீட்டின் கதவை தட்டி விவரத்தை தெரிவித்துள்ளார். கன்னியப்பன் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் இரு சடலங்களையும் மீட்டு பிணகூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
7 வயது சிறுமி சொன்ன அடையாளங்களின் அடிப்படையில் அவர்களது வீட்டில் ஏற்கனவே வேலை பார்த்து பணியில் இருந்து நிறுத்தப்பட்ட சத்தியா, தவுலத் பேகம் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கார் ஓட்டுனர் ஜெயக்குமாரையும் கைது செய்தனர். ஏமான் நாட்டில் இருந்து வந்த கணவர் ராமசாமி தனது இரு குழந்தைகளுக்கும் தேவையான சிகிச்சை அளித்து முழுமையாக குணப்படுத்தினார். இந்த இரட்டை கொலை வழக்கு காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கில் கொலை சம்பவத்தை நேரில் பார்த்த 7 வயது சிறுமியின் சாட்சியம் முக்கிய பங்கு வகித்தது. சுமார் 9 வருடங்களாக நடந்து வந்த வழக்கு விசாரணை 20ந்தேதி நிறைவு பெற்ற நிலையில் 3 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து குற்றவாளிகளான ஜெயக்குமார், சத்யா, தவுலத்பேகம், மூன்று பேருக்கும் 6 பிரிவுகளின் கீழ் ஆறு ஆயுள் தண்டனைகளும், 80 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu