RECENT NEWS

ஜனநாயகன் வழக்கு - படத்தயாரிப்பு நிறுவனம் வாபஸ்

ஜனநாயகன் வழக்கு - படத்தயாரிப்பு நிறுவனம் வாபஸ்

Feb 10, 2026

ஜனநாயகன் வழக்கு - படத்தயாரிப்பு நிறுவனம் வாபஸ்

ஜனநாயகன் வழக்கு - படத்தயாரிப்பு நிறுவனம் வாபஸ்

Feb 10, 2026

தமிழ்நாடு

அலப்பறை..அட்டாக்..அட்டூழியம்..! அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்..! சங்கத்தை கலைத்து 'ரெடி ஜுட்' 'ப்ரைட் ரைஸ்' பிரியர் சிக்கியது எப்படி?

Nov 18, 2025 02:03 PM

229

அலப்பறை..அட்டாக்..அட்டூழியம்..! அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்..!  சங்கத்தை கலைத்து 'ரெடி ஜுட்'  'ப்ரைட் ரைஸ்' பிரியர் சிக்கியது எப்படி?

அலப்பறை..அட்டாக்..அட்டூழியம்..! அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்..! சங்கத்தை கலைத்து 'ரெடி ஜுட்'

திருப்பூர் வீரபாண்டி காவல் நிலையம் அருகே பாலு என்பவர் கடந்த பத்து வருடங்களாக 'பெப்ஸ்' என்ற பெயரில் ஹோட்டல் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று மாலை, வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கௌதம் என்பவர் 'பெப்ஸ்' ஹோட்டலுக்கு உணவருந்த சென்றுள்ளார்.

கௌதம் சாப்பிடுவதற்கு 'ப்ரைட் ரைஸ்' ஆர்டர் செய்து காத்திருந்துள்ளார். உணவு வர தாமதமானதால், ஆத்திரமடைந்த கௌதம் அங்கிருந்த ஹோட்டலின் ஊழியர்களுடன், எனக்கு பின்னால் ஆர்டர் செய்தவர்களுக்கெல்லாம் உணவு வருகிறது, எனக்கு மட்டும் ஏன் இன்னும் வரவில்லை? என
வாக்குவாதம் செய்துள்ளார்.

மேலும், தனது நண்பர்களுக்கு போன் செய்த கௌதம் , ஹோட்டலுக்கு வருமாறு அழைத்துள்ளார். அங்கு அவரது நண்பர்கள் நான்கு பேர் வந்துள்ளனர். பின்னர் ஹோட்டலின் கேசியர் ஜாஹிர் என்பவரிடம் கௌதம், கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில், கௌதம் ஜாஹிரை தாக்க, அவரது நண்பர்களும் அவரோடு சேர்ந்து கொண்டு ஜாஹிரை கொடூரமாக தாக்கியுள்ளனர். அது மட்டுமில்லாமல் ஹோட்டலில் இருந்த பொருட்களை தூக்கி வீசியும், கண்ணாடியை உடைத்தும் அலப்பறை செய்துள்ளனர்.

ஜாஹிருக்கு தலையில் அடிபட்ட நிலையில், அங்கிருந்தவர்கள் அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

பின்னர் அக்கம் பக்கத்தினரும், அந்த பகுதியில் கடை உரிமையாளர்களும் தாக்குதல் நடத்திய கும்பலை பிடிக்க முயன்றனர். அப்போது கௌதம் மட்டும் அவர்களிடம் மாட்டிய நிலையில், கௌதமின் நண்பர்கள் ஆளுக்கொரு பக்கமாக தெறித்து ஓடியுள்ளனர்.

மேலும் பிடிபட்ட கௌதமை, பொதுமக்கள் மற்றும் கடை ஊழியர்களும், வீரபாண்டி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். அப்போது கௌதம் மது போதையில் இருந்ததாக போலீசார் தரப்பில் சொல்லப்படுகிறது.

மேலும் கௌதம் மீது ஏற்கனவே 10க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

உணவகத்தை சேதப்படுத்தியது மற்றும் அங்கிருந்த ஊழியர்களை தாக்கியது, ரத்த காயம் ஏற்படுத்தியது உயிருக்கு ஆபத்தை விளைவித்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், ஹோட்டலில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து, தலைமறைவான கௌதமின் நண்பர்களான மணிகண்டன், சஞ்சய், நவீன், பீஜேஸ் ஆகியோரை கைது செய்தனர்.

இதனையடுத்து உணவகத்தை தாக்கி, உணவக ஊழியர்களையும் தாக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், உணவகங்களுக்கு பாதுகாப்பு அளிக்க கோரியும் திருப்பூர் மாவட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் திருப்பூர் மாநகர காவல் ஆணையரகத்தில் புகார் மனு அளித்தனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

ஜோதிடருக்கு நேரம் சரியில்லை.. பாலியல் வழக்கில் சிக்கியதால் சிறையில் கம்பி எண்ணும் யோகம்..!
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies