ஜனநாயகன் வழக்கு - படத்தயாரிப்பு நிறுவனம் வாபஸ்
Feb 10, 2026
முகப்பு
பெண்ணிடம் அத்துமீறல்... அன்றே டி.எஸ்.பி. மகன் விடுவிப்பு மாறிய போலீஸின் திரைக்கதை!
Nov 13, 2025 01:05 PM
235
கோவையில் மீண்டும் ஒரு பெண்ணிடம் அத்துமீறல்... அன்றே டி.எஸ்.பி. மகன் விடுவிப்பு; மாறிய திரைக்கதை!
கோவையில் மீண்டும் ஒரு பெண்ணிடம் அத்துமீறல்... கைதான அன்றே டி.எஸ்.பி. மகன் விடுவிப்பு... மாறிய அக்யூஸ்ட் பெயர்கள்... டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட் அடிக்கும் போலீஸின் திரைக்கதை பின்னணி குறித்து விவரிக்கிறது, இந்த செய்தி தொகுப்பு...
கோவையில் கல்லூரி மாணவி ஒருவர், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இதனைத் தொடர்ந்து கருப்பசாமி, காளீஸ்வரன் மற்றும் குணா என்கிற மூன்று கூட்டுக் கொடூரன்களை, சுட்டுப் பிடித்தது காவல்துறை. மூவர் மீதும் பீளமேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் கிளப்பிக்கொண்டிருக்கும் சூழலில்தான், காவல்துறை டி.எஸ்.பி.யின் மகன், கோவையில் பெண்ணிடம் மிரட்டி அத்துமீறிய புகாரில் தேடப்பட்டு வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட டி.எஸ்.பியின் மகன், அன்றைய தினமே விடுவிக்கப்பட்டது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்ல, கைது செய்யப்படுவதற்கு முன்பு, ஒரு குற்றச்சாட்டும் கைது செய்து விடுவிக்கப்பட்ட பிறகு அந்த குற்றத்தை அவர் செய்யவில்லை, வேறொருவரை தேடிவருகிறோம் என புகார் கொடுத்த பெண்ணிற்கு என்ன நடந்தது? என்பதை வெளியில் கசியவிடாமல், காவல்துறை ராணுவ ரகசியம்போல் பாதுகாத்து வருவதுதான் பல்வேறு சந்தேகங்களை உருவாக்கியிருக்கிறது.
இளம்பெண் கொடுத்த புகாரில் டி.எஸ்.பி. மகனை தேடிக்கொண்டிருக்கும்போது, முதலில் காவல்துறையால் கசியவிடப்பட்ட தகவல் இதுதான்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஜோதி நகரை சேர்ந்த 25 வயது இளம்பெண் கடந்த 6 மாதங்களாக கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் கண்டென்ட் ரைட்டராக ஆக பணியாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில், இளம்பெண்ணிற்கு கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த 28 வயது தருண் என்பவருடன் நட்பு ஏற்பட்டு பேசி பழகி வந்துள்ளார்.
கடந்த 2 ஆம் தேதி மாலை 6 மணிக்கு இளம்பெண்ணை தொடர்பு கொண்ட தருண், நேரில் பார்க்க வேண்டுமென்று கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன், மாலை 7 மணியளவில் பாப்பநாயக்கன்பாளையம் அப்பார்ட்மெண்டில் இருந்து அழைத்துக் கொண்டு கோவை கா.கா. சாவடியில் இருக்கும் தனியார் கல்லூரிக்கு அருகில் சென்றுள்ளனர். அங்குள்ள குளத்திற்கு அருகில் வாகனத்தை நிறுத்திவிட்டு, இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது, தருண் தனது உறவினரும் டி.எஸ்.பி தங்கபாண்டியனின் மகனுமான தனுஷுக்கு தொடர்புகொண்டு அந்த இடத்திற்கு வரவழைத்ததாக கூறப்படுகிறது. இருவரும் அப்பெண்ணிடம் அத்துமீறியதோடு, மிரட்டி அந்த இளம்பெண்ணிடம் அணிந்து இருந்த தங்க மோதிரம், 1 பவுன் செயின், 1 பவுன் பிரேஸ்லெட் என மொத்தம் 3 பவுன் தங்க நகை மற்றும் ரூபாய் 90,000 ஆயிரத்தை அவரது செல்போனில் இருந்து ஸ்கேன் செய்து பறித்துக் கொண்டனர் என்றுதான் முதலில், காவல்துறை தரப்பில் சொல்லப்பட்டது.
ஆனால், டி.எஸ்.பி. மகன் கைது செய்யப்பட்டபிறகு, சினிமா திரைக்கதையில் டிவிஸ்ட் என்பதுபோல, கதை அப்படியே மாற்றப்பட்டிருக்கிறது. அதாவது, எஃப்.ஐ. ஆர் விவரங்களைக்கூட ஊடகங்களுக்கு காண்பிக்காமல் ரகசியம் காத்துவரும், போலீஸின் புதிய கதை இதுதான்.
அதாவது, அந்த இளம்பெண்ணிடம் பழகிய தருணும் தனுஷும் ஒரே நபர்தான். டி.எஸ்.பி. மகனான தருண் தான் தனுஷ் என்கிற பெயரில் அறிமுகமாகி, அந்த இளம்பெண்ணை தனிமையான இடத்திற்கு அழைத்து சென்று பேசிக்கொண்டிருந்தார். தருண் என்கிற தனுஷின் நண்பன் அந்த ஸ்பாட்டிற்கு வந்து, இளம்பெண்ணிடம் மிரட்டி அவர் அணிந்து இருந்த தங்க மோதிரம், 1 பவுன் செயின், 1 பவுன் பிரேஸ்லெட் என மொத்தம் 3 பவுன் தங்க நகை மற்றும் ரூபாய் 90,000 ஆயிரத்தை அவரது செல்போனில் இருந்து ஸ்கேன் செய்து பறித்துக் கொண்டனர் என்பதுதான், போலீஸின் புதிய கதை.
சரி, டி.எஸ்.பி மகனான தருண் என்கிற தனுஷ் அந்த இளம்பெண்ணிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, அங்கு வந்து மிரட்டி பணம் பறித்த அந்த நண்பனின் பெயர் என்ன? என்று கேட்டால், அதுவும் போலீஸாரால் ரகசியம் காக்கப்பட்டுவருகிறது. அதாவது, டி.எஸ்.பி மகன் அந்த இளம்பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்ததுபோலவும், அங்கு வந்த இன்னொரு நண்பன் தான் மிரட்டி பணம் பறித்ததாகவும் விசாரணை அதிகாரிகளால் கூறப்படுகிறது. புகார் கொடுத்த இளம்பெண்ணும் மிரட்டப்பட்டதாலும் அசிங்கப்படுத்த முயற்சிப்பதாலும், வாய் திறக்காமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில், டி.எஸ்.பி. மகன் மீது 308 சட்டப்பிரிவான கொலை செய்ய முயற்சிப்பது, 351 பிரிவான அச்சுறுத்தல் உடல் ரீதியான தாக்குதல்,
506 பிரிவான பணம் பறிப்பது மரண பயம் உண்டாக்குவது, கடுமையான காயம்
387 பிரிவான கிரிமினல் மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இவ்வளவு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்ட டி.எஸ்.பி. தங்கபாண்டியனின் மகன் கைதான அன்றே விடுவிக்கப்பட்டது எப்படி? இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்ட பிரிவுகளையாவது நம்பலாமா? எதைத்தான் நம்புவதோ? என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu