RECENT NEWS

பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி ரௌடி வெட்டி படுகொலை

பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி ரௌடி வெட்டி படுகொலை

Mar 12, 2026

பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி ரௌடி வெட்டி படுகொலை

பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி ரௌடி வெட்டி படுகொலை

Mar 12, 2026

BIG STORIES

உயிர் காக்கும் மருத்துவர்களின் தற்கொலை படை தாக்குதல்.. ஒயிட் காலர் டெரரிசம் அம்பலம்.!

Nov 12, 2025 02:39 AM

215

உயிர் காக்கும் மருத்துவர்களின் தற்கொலை படை தாக்குதல்.. ஒயிட் காலர் டெரரிசம் அம்பலம்.!

தற்கொலை படை தாக்குதல்

டெல்லியில் காரை வெடிக்க வைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 13 பேர் பலியாகினர். மக்களோடு மக்களாக சமூகத்தில் மருத்துவர்களாக இருந்து கொண்டு அப்பாவி மக்களின் உயிர்களை காவு வாங்கிய ஒயிட் காலர் டெரரிசம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..

டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்து சிதறிய சம்பவத்தில் 13 பேர் பலியாகினர். அப்பாவி மக்களின் உயிர்களுக்கு குறிவைத்த பயங்கரவாதிகளுக்கு சிலீப்பர் செல்லாக இருந்து மருத்துவர்கள் சிலர் மூளையாக செயல்பட்டதும் , இது ஒரு தற்கொலை படை தாக்குதல் என்பதும் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

ஹரியானாவின் பரிதாபாத்தில் இருந்து ஹூண்டாய் ஐ20 காரில் அமோனியம் நைட்ரேட் நிரப்பபட்ட காரை எடுத்து வந்த உமர் என்ற மருத்துவர், டெல்லிக்குள் புகுந்து அமோனியம் நைட்ரேட்டை, டீசலில் கலந்து டெட்டனேட்டர் மூலம் வெடிக்க வைத்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தின் பின்னணி குறித்து விசாரித்த போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.

ஆபரேசன் சிந்தூர் தாக்குதலில் சள்ளடையாக்கப்பட்ட ஜெய்ஸ் இ முகமது அமைப்பிற்கு ஆதரவாக ஸ்ரீநகரில் சுவரொட்டி ஒட்டியதாக, அனந்த்நாக் அரசு மருத்துவக் கல்லூரியின் மருத்துவரான அதீல் அகமது ரத்தர் என்பவர் கடந்த 6 ஆம் தேதி உத்தரபிரதேசத்தின் சஹாரன்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் வைத்து கைது செய்யப்பட்டார்.

அனந்த்நாக் அரசு மருத்துவமனையில் உள்ள அவரது லாக்கரில் சோதனை நடத்திய போலீசார் , அதில் இருந்து ஏகே-47 துப்பாக்கி மற்றும் 350 கிலோ அமோனியம் நைட்ரேட் வெடிமருந்துகளையும் கண்டுபிடித்தனர். அவர் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதீலீடம் நடந்திய விசாரணையில் பரிதாபாத்தில் இருந்தும் வெடி மருத்து சிக்கியது. ஒட்டு மொத்தமாக 2,900 கிலோ அமோனியம் நைட்ரேட் வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் பைப்பற்றப்பட்டன. இந்த வெடி பொருளை அதீலுடன் சேர்ந்து மற்றொரு மருத்துவரான முஜம்மில் ஷகீல் வாடகை வீட்டில் பதுக்கி வைத்திருந்ததாக தெரிவித்த போலீசார் , அவரையும் கைது செய்தனர்.

மருத்துவர் ஷகீலைப் போலவே பெண் மருத்துவரான டாக்டர் ஷாஹீன் ஷாஹித் என்பவரும் கைது செய்யப்பட்டார். அவரது காரில் இருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன. அதேபோல பயங்கரவாதத் தாக்குதலைத் நடத்த திட்டமிட்டதாகக் கூறி குஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவால் மருத்துவர் அகமது மொகியுதீன் சயீத் என்பவரும் கைது செய்யப்பட்டார்.

அடுத்தடுத்து போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் ஒயிட்காலர் டெரரிசத்துக்கு மூளையாக செயல்பட்ட 4 மருத்துவர்கள் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டதால், உஷாரான மருத்துவர் உமர் அங்கிருந்து இருந்து அமோனியம் நைட்ரேட் வெடி மருந்துடன் காரில் தப்பியதாக கூறப்படுகின்றது. தலை நகர் டெல்லிக்குள் புகுந்து ANFO என்றழைக்கப்படும் அமோனியம் நைட்ரேட் எரிபொருள் எண்ணெயை பயன்படுத்தி காரை வெடிக்க வைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

உமர் ஓட்டி வந்த வெள்ளை ஹூண்டாய் ஐ20 கார் பதர்பூர் எல்லையிலிருந்து அவுட்டர் ரிங் ரோடு வழியாக பழைய டெல்லிக்குள் வந்தது 100க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதியாகி உள்ளது. HR 26CE7674 என்ற எண் கொண்ட அந்த கார், செங்கோட்டைக்கு அருகிலுள்ள வாகன நிறுத்துமிடத்தில் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக நிறுத்தப்பட்டிருந்ததாகவும், உமர் அதில் இருந்து கீழே இறங்காமலேயே அமர்ந்திருந்ததாகவும் கூறப்படுகின்றது.

வாகன நிறுத்துமிடத்திற்குள் பிற்பகல் 3:19 மணிக்கு நுழைந்த அந்த கார் மாலை 6:48 மணிக்கு புறப்பட்டுள்ளது, அங்கிருந்து சென்ற சிறிது நேரத்திலேயே சிக்னலில் அந்த கார் வெடித்துச் சிதறியதாகவும், போலீசாரால் சந்தேகிக்கப்படும் உமர் ஒரு நிமிடம் கூட காரை விட்டு வெளியேறவில்லை என்பதால் இதனை தற்கொலை படை தாக்குதல் என்கின்றனர். சிசிடிவி காட்சிகளில் ஓட்டுநரின் முகம் தெளிவாகத் தெரிவதாகவும், காரில் முகமூடி அணிந்த ஒருவர் இருப்பதும் பதிவாகியுள்ளது.

தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட கார் பல பேரிடம் கைமாறியதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆதாரங்களின்படி, இந்த காரை சல்மான் என்பவரிடம் இருந்து மார்ச் 2025-ல் தேவேந்தர் வாங்கியதாகவும், அக்டோபர் 29 அன்று தேவேந்தரிடமிருந்து ஆமிர் என்பவருக்கும், பின்னர் அமீரிடம் இருந்து தாரிக் வாங்கி அதனை உமருக்கும் கைமாற்றி விட்டதும் தெரியவந்தது. இதில் அமிர் மற்றும் தாரிக் இருவரும் டெல்லி போலீசாரின் விசாரணை வளையத்தில் சிக்கி உள்ளனர்.

வெடித்து சிதறிய கார் சாவியை உமர் முகமதுவின் சகோதரரான அமீர் வைத்திருக்கும் படங்கள் வெளியாகியுள்ளது. இது தேவேந்தரிடமிருந்து கார் வாங்கிய போது எடுக்கப்பட்டது என்று கூறப்படுகின்றது. கடந்த சில நாட்களாக காஷ்மீர், பரிதாபாத்தில் பல மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், இவர்கள் மீது பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் மருத்துவர் உமர் இந்த பயங்கரவாத தாக்குதலை அரங்கேற்றி இருப்பதாக கூறப்படுகின்றது.

அமோனியம் நைட்ரேட் வெடி மருந்து சுரங்கம் மற்றும் குவாரி தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு பாறைகளை தகர்க்க அதிகம் தேவைப்படும் என்பதற்காக அவர்கள் மட்டுமே தகுந்த உரிமத்துடன் இவற்றை வாங்கி வைத்திருக்க இயலும் என்று கூறப்படுகின்றது. அப்படி இருக்க ஒயிட்காலர் தொழில் செய்யும் மருத்துவர்களிடம் வெடி மருந்து எப்படி கிடைத்தது ? யார் மூலம் இந்த சதித்திட்டம் நிகழ்த்தப்பட்டது ? இதன் பின்னணியில் ஒழிந்துள்ள சிலீப்பர் செல்கள் யார் ? என்பது குறித்து என்.ஐ.ஏ அதிகாரிகள் விரிவான விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

தேர்வு முடிந்து வீடு திரும்பிய 12 ஆம் வகுப்பு மாணவி கடத்தி பாலியல் வன்கொடுமை..! துப்பட்டாவால் கழுத்தை நெரித்த கொடூரம்..
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies