ஜனநாயகன் வழக்கு - படத்தயாரிப்பு நிறுவனம் வாபஸ்
Feb 10, 2026
BIG STORIES
முதல்ல இவரு.. 2 வதா அவரு..! காதலனுக்கிடையே மோதல் காதலி கழுத்தை அறுத்து ரகளை மடக்கிய மக்கள்- கணவர் சமாதானம்
Sep 27, 2025 01:57 AM
527
முதல்ல இவரு.. 2 வதா அவரு..! காதலனுக்கிடையே மோதல் காதலி கழுத்தை அறுத்து ரகளை மடக்கிய மக்கள்- கணவர் சமாதானம்
திருப்பூர் கலெக்டர் அலுவலகம் அருகே, கழுத்து அறுபட்ட நிலையில் மோட்டார் சைக்கிளில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண்ணை மறித்து தகராறில் ஈடுபட்டதாக, காதலனை மடக்கிப்பிடித்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்
கழுத்து அறுபட்ட நிலையில், மோட்டார் சைக்கிளில் மருத்துவமனைக்கு சென்ற காதலியை மறித்து , ரக்கடு காதலன் ஒருவர் வம்பு செய்த காட்சிகள் தான் இவை..!
திருப்பூர், பல்லடம் ரோடு வித்யாலயாவை சேர்ந்தவர் அய்யனார், (50) இவரது மனைவி ஜெயராணி (45). இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ள நிலையில் ஜெயராணி வியாழக்கிழமை மாலை வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது வீட்டிற்குள் நுழைந்த மர்ம ஆசாமி ஒருவன் , ஜெயராணியின் கழுத்து மற்றும் கையில் கத்தியால் அறுத்து விட்டு தப்பி சென்றார்.
ரத்த காயங்களுடன் போராடிய ஜெயராணியை மீட்ட பக்கத்து வீட்டுக்காரர், தனது புல்லட் மோட்டார் சைக்கிளில் ஏற்றி ஜெயராணியை சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அவர்கள் இருவரையும் ஜாம்பி போல பின் தொடர்ந்த கழுத்தறுப்பு ஆசாமி, அவர்களை மீண்டும் தடுத்து நிறுத்தி ஜெயராணியிடம் தகராறு செய்தார். மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றவரின் சட்டையையும் பிடித்து கிழித்து அடாவடி செய்தார்
மடக்கிப்பிடித்த பொதுமக்களிடம் தன்னை ஜெயராணியின் காதலன் செல்வக்குமார் என்று கூறிக்கொண்ட அந்த நபர், ஜெயராணி தன்னிடம் பேசாமல், வேறு ஒருவருடன் பேசியதால், வீடு புகுந்து ஜெயராணியின் கழுத்தை அறுத்ததாக தெரிவித்தார். யாரிடம் பேசக்கூடாது என்று கழுத்தை அறுத்தேனோ, அதே நபருடன் அவர் மோட்டார் சைக்கிளில் சென்றதால் தன்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றும் அதனால் அவரை மறித்து மீண்டும் தாக்கியதாக, தனது திருட்டு காதலின் பெருமையை எடுத்து கூறினார்
காயத்துடன் நின்ற ஜெயராணி மீண்டும் மோட்டார் சைக்கிளில் ஏறி மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. ஜெயராணியின் கணவர் அய்யனாரை அழைத்து போலீசார் விசாரித்த போது, கத்தியால் அறுத்தவர் தனது மனைவியின் முதல் காதலன் செல்வக்குமார் என்றும் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தவர் 2 வது காதலன் என்றும் போலீசாரிடம் கூலாக தெரிவித்தார். செல்வக்குமாரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து கத்தியையும் கைப்பற்றினர். கலெக்டர் அலுவகம் அருகே நடந்த இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu