கோவையில் அங்கன்வாடி ஊழியர்கள் தொடர் போராட்டம்
Feb 07, 2026
முகப்பு
இந்தியா - மலேசியா இடையேயான உறவு உறுதியாக உள்ளது - பிரதமர் மோடி
Feb 08, 2026 10:59 AM
23
இந்தியா - மலேசியா இடையேயான உறவு உறுதியாக உள்ளது - பிரதமர் மோடி
இந்தியா - மலேசியா இடையே செமிகண்டக்டர், பேரிடர் மேலாண்மை, திரைப்பட கூட்டுத் தயாரிப்பு, பாதுகாப்பு, வேளாண்மை, பசுமை எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் ஒப்பந்தம் கையெழுத்தானது. கோலாலம்பூரில் பிரதமர் மோடி மற்றும் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ..
இரு நாடுகளுக்கும் இடையேயான உயர்மட்ட அளவிலான கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, இந்தியா மற்றும் மலேசியா இடையேயான உறவு உறுதியாக உள்ளதாகவும், இந்த உறவின் முழு திறனையும் இரு நாடுகளும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்வது அவசியம் எனவும் தெரிவித்தார்.
ஒப்பந்தங்கள் கையெழுத்தானதற்குப் பிறகு, பிரதமர் மோடியும், மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய மலேசியப் பிரதமர், சர்வதேச பொருளாதாரத்தில் இந்தியா மிக வேகமாக வளர்ந்து வருவதாகவும், பல்வேறு துறைகளில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட மலேசியா விரும்புவதாகவும் தெரிவித்தார்.
இந்தியா - மலேசியா இடையே பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, உளவுத்துறை பகிர்வு, கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதுடன், வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளும் அதிகரிக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu