RECENT NEWS

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு இன்று மாலையுடன் நிறுத்தம்

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு இன்று மாலையுடன் நிறுத்தம்

Jan 28, 2026

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு இன்று மாலையுடன் நிறுத்தம்

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு இன்று மாலையுடன் நிறுத்தம்

Jan 28, 2026

BIG STORIES

துணி விற்பது போல நோட்டம்.. வடக்கு கொள்ளையர் கைவரிசை.. துப்பாக்கியால் சுட்ட போலீசார்..! ஒரே நாளில் 13 வீடுகளில் கொள்ளை

Nov 30, 2025 03:19 AM

422

துணி விற்பது போல நோட்டம்.. வடக்கு கொள்ளையர் கைவரிசை.. துப்பாக்கியால் சுட்ட  போலீசார்..! ஒரே நாளில் 13 வீடுகளில் கொள்ளை

கோவை, கவுண்டம்பாளையம் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் 13 வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை அடித்த வட மாநிலத்தைச் சேர்ந்த 3 பேரை, கோவை மாநகர போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது

.கோவை மேட்டுப்பாளையம் சாலையில் கவுண்டம்பாளையத்தில் அரசு அலுவலர்கள் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. வீட்டு வசதி வாரியத்தால் அரசு ஊழியர்களுக்காக கட்டப்பட்ட 8 பிளாக்குகளில் தலா 14 அடுக்கு மாடிகளுடன் மொத்தம் 1,848 வீடுகள் உள்ளது. இதில் ஏராளமான வீடுகளில் வாடகை தாரர்கள் குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று பிற்பகல் 12 மணி முதல் சுமார் 1 மணி வரை C-3 பிளாக்கில் குடியிருந்த விமலா,ரேணுகா கிருஷ்ணசாமி,சந்திரன் உள்ளிட்ட 13 பேரின் வீடுகளில் சுமார் ஒரு மணி நேரத்தில் அடுத்தடுத்து பூட்டுகள் உடைக்கப்பட்டு நகை பணம் திருடப்பட்ட சம்பவத்தால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கவுண்டம்பாளையம் காவல் துறையினர்,கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்தனர்.

இதில் கொள்ளையடித்த பொருட்களுடன் வீட்டிலிருந்து வெளியேறிய திருடர்கள் ஒரு வாகனத்தில் ஏறி தப்பிச் சென்றது அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து போலீசார் தனிப்படை அமைத்து அடுத்தடுத்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை பின் தொடர்ந்து ஆய்வு செய்தனர். திருடர்கள் சென்ற வாகனத்தின் பதிவெண்ணை வைத்து, போலீசார் அந்த திருடர்களை தேடி வந்தனர்

இந்த சம்பவத்தில் தொடர்புடைய வட மாநிலத்தைச் சேர்ந்த கொள்ளையர்கள் மூன்று பேரும் குனியமுத்தூர் அடுத்த உள்ள குளத்துப்பாளையம் பகுதியில் பதுங்கி இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அப்போது போலீசார் அந்த மூன்று பேரை சுற்றி வளைத்து பிடிக்க முயன்ற போது , மறைத்து வைத்த ஆயுதங்களை வைத்து கொள்ளையர்கள் போலீசாரை தாக்கியதாகவும், பதிலுக்கு போலீசார் தற்காப்பிற்காக அந்த மூன்று பேரையும் முழங்காலுக்கு கீழே சுட்டு பிடித்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

பின்னர் மூவரையும் மீட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
விசாரணையில் குண்டடிபட்ட கொள்ளையர்கள் உத்திரபிரதேசத்தை சேர்ந்த ஆரிப் கஜிவாலா,இர்பான்,ஆசிப் ஆகியோர் என்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து விவரித்த கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர்,

துணி வியாபாரிகள் என கூறி அபார்ட்மெண்ட்களில் பூட்டிய வீடுகளை குறிவைத்து கைவரிசைகாட்டிய இவர்களிடமிருந்து 42 சவரன் தங்கம் நகைகள் மற்றும் ஒன்றரை லட்சம் ரூபாய் ரொக்கம், 500 கிராம் வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டது என்றார். ஏற்கனவே தீபாவளி பண்டிகையில் இருந்து இங்கு பாத்திரம் வியாபாரம் செய்வது போல இங்கே வந்து தங்கிருந்து கைவரிசை காட்டியுள்ளதாகவும், மேலும் 12 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்

சந்தேக நபர்களை அழைத்து வந்த ஆட்டோ ஓட்டுனரிடம்வும் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்த காவல் ஆணையர், தற்காப்பு காரணமாகவே போலீசார் 3 பேர் மீதும் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் விளக்கம் அளித்தார்

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

"ஜனநாயகன்" வெளியீடு எப்போது?.. மீண்டும் தனி நீதிபதி விசாரிக்க உத்தரவு.. என்ன சொல்கிறது தணிக்கை வாரியம்?..
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies