RECENT NEWS

5 வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்

5 வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்

Mar 14, 2026

5 வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்

5 வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்

Mar 14, 2026

BIG STORIES

என்னோட நிலத்தையா ஆட்டைய போடுறீங்க..? விவசாயி வச்சார் பாரு ஆப்பு..! சார்பதிவாளர் ஆடிப்போயிட்டாரு

Nov 26, 2025 04:07 PM

7208

என்னோட நிலத்தையா ஆட்டைய போடுறீங்க..? விவசாயி வச்சார் பாரு ஆப்பு..! சார்பதிவாளர் ஆடிப்போயிட்டாரு

என்னோட நிலத்தையா ஆட்டைய போடுறீங்க..? விவசாயி வச்சார் பாரு ஆப்பு..!

கோவில்பட்டி அருகே தன்னுடைய நிலம் முறைகேடாக தனியார் நிறுவனத்திற்கு பத்திர பதிவு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயி ஒருவர் மேள தளம் முழங்க தலையில் தவிடு, புண்ணாக்கு, பருத்தி கொட்டை, கோழியை சுமந்தபடி சார்பதிவாளர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள ஊத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். அந்த கிராமத்தில் இவரது குடும்பத்திற்கு சொந்தமான 1 ஏக்கர் 35 சென்ட் நிலம் உள்ளது. இதில் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் இந்த ஒரு ஏக்கர் 35 சென்ட் நிலம் சில மாதங்களுக்கு முன்பு ஸ்பீடு பூமி ப்ரோமோட்டர்ஸ் என்ற தனியார் சோலார் நிறுவனம் ஒன்றிக்கு பத்திர பதிவு செய்து கொடுக்கப்பட்டதாக தெரிகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த கோவிந்தராஜ் இது தங்களுடை சொந்தம் நிலம், அதற்குரிய ஆவணங்கள் தங்களிடம் இருக்கும் போது, எப்படி தனியார் நிறுவனத்திற்கு பத்திர பதிவு செய்ய முடியும், முறைகேடாக செய்யப்பட்டுள்ளதாக கொப்பம்பட்டி காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். மேலும் வருவாய் துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் அந்த தனியார் நிறுவனத்தினர் இவர் விவசாய நிலத்தில் பயிரிட்டு இருந்த பயிர்களை சேதப்படுத்தியதாக தெரிகிறது. தன்னுடைய நிலத்திற்கான அனைத்து ஆவணங்களும் தன்னிடம் இருக்கும் போது, போலியான ஆவணங்களை கொண்டு முறைகேடாக, பணத்தினை பெற்றுக்கொண்டு தனியார் நிறுவனத்திற்கு பத்திரபதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்து புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என்றும், போலியான ஆவணங்களை கொண்டு முறைகேடாக பதிவு செய்யப்பட்ட பத்திரபதிவினை ரத்து செய்ய வலியுறுத்தியும் நூதன போராட்டம் ஒன்றை செய்ய விவசாயி முடிவெடுத்தார்.

தன்னிடம் லஞ்சம் கொடுப்பதற்கு பணம் எதுவும் இல்லை என்றும் கொடுப்பதற்கு தவிடு, புண்ணாக்கு, பருத்தி கொட்டை, கோழி மட்டும் தான் இருக்கிறது என்றும் கூறி அவற்றை தலையில் வைத்து கொண்டு, மேளம் தாளம் முழங்க ஊர்வலமாக புறப்பட்டார் விவசாயி கோவிந்தராஜ். அவருடன் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஊர்வலமாக சென்று கோவில்பட்டி சார்பதிவாளர் அலுவலகத்தினை முற்றுகையிட்டனர்.

மேலும் தாங்கள் தலையில் சுமந்து வந்த பொருள்களுடன் உள்ளே செல்ல முயன்ற போது கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் மாரியப்பன் தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பொருள்கள் இல்லமால் 3 பேர் மட்டும் சென்று மனு கொடுக்க போலீசார் அனுமதியளித்தை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உள்ளே சென்று தங்களது கோரிக்கை மனுவினை சார்பதிவாளர் சுரேஷ் கண்ணனிடம் வழங்கினர்.

மனுவினை பெற்றுக்கொண்ட சார்பதிவாளர் சுரேஷ்கண்ணன், இதற்கு முன்புள்ள சார்பதிவாளர்கள் பதிவு செய்துள்ள ஆவணங்களை கொண்டு தான் பத்திர பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், எனவே மாவட்டபதிவாளரிடம் முறையீடும் படி அறிவுறுத்தினர். இந்த போராட்டத்தினால் சார் பதிவாளர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

என் ஜாய்... எஞ்சாமீன்னுட்டு ஏன் சாமி சண்டை போடுறீங்க ?ச.நா. - அறிவு பங்கு பிரிக்கலையாம்..! 5 வருடமாக ஓயாத ராயல்டி சண்டை
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies