RECENT NEWS

ஏப்ரல் 23 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்

ஏப்ரல் 23 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்

Mar 15, 2026

ஏப்ரல் 23 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்

ஏப்ரல் 23 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்

Mar 15, 2026

முகப்பு

வங்கக்கடலில் உருவாகும் புயல்..! தமிழ்நாட்டிற்கு பாதிப்பா? வானிலை மையம் UPDATE.!

Nov 25, 2025 02:06 AM

739

வங்கக்கடலில் உருவாகும் புயல்..! தமிழ்நாட்டிற்கு பாதிப்பா? வானிலை மையம் UPDATE.!

வானிலை மையம் UPDATE.!

வங்கக்கடலில் புயல் உருவாகும் புயல் எங்கு செல்லும் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு வானிலை ஆய்வு மைய தென்மண்ட தலைவர் அமுதா பதிலளித்துள்ளார்...

குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக செவ்வாய்க்கிழமை அன்று இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் மேலும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் அமுதா தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், குமரிக்கடலில் நிலவும் சுழற்சியின் காரணமாக தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவரமடைந்து தென் தமிழ்நாட்டில் மழை எதிர்பார்த்ததை விட அதிகம் பெய்ததாக தெரிவித்தார்.

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் அருகே உள்ள மலாகா நீரிணை பகுதி மற்றும் அதனை ஒட்டிய மலேசியா பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் அதனை தொடர்ந்த 48 மணி நேரத்தில் தெற்கு வங்கக்கடலில் புயலாகவும் வலுபெறும் வாய்ப்பு உள்ளது என தெரிவித்த அமுதா, செவ்வாய்க்கிழமை அன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அதனுடன் ஒன்றிணையவும் வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.

பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் நிலவும் புயலுடன் மலாகா நீரினை பகுதியில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஒன்றிணையவும் மற்றொரு வாய்ப்புள்ளது. இதன் காரணமாக குறைந்தபட்சமாக ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானால் தான் அது பயனிக்கும் பாதை தெரியவரும் என அமுதா தெரிவித்தார்.

வானிலையின் மாற்றங்கள் அனைத்தையும் கருத்தில் கொண்டு தற்போதைய நிலவரங்களுக்கு ஏற்ப கனமழைக்கான எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் வானிலையின் மாற்றங்களுக்கு ஏற்ப கனமழைக்கான வாய்ப்பும் மாறுப்படும் என தெரிவித்த அமுதா ஆழ்கடலில் மீன்பிடித்து வரும் மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும் என எச்சரித்தார். மேலும் வரும் 29 ஆம் தேதி வரை தெற்கு வங்கக்கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என தெரிவித்தார்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

கணவனை விபத்தில் பறிகொடுத்தார்.. 2 பெண் குழந்தைகளுடன் தவித்த பெண்ணுக்கு ரூ.27 லட்சம் இழப்பீடு.. 3 மாதத்தில் கைக்கு வந்தது எப்படி..?
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies