பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி ரௌடி வெட்டி படுகொலை
Mar 12, 2026
முகப்பு
பள்ளிவாசலுக்கு மந்திரிக்கப் போன இளம்பெண்... ரத்தம் சொட்ட சொட்ட அலறியடித்து ஓடிவந்த பயங்கரம்;பகீர் பின்னணி..!
Nov 24, 2025 05:39 AM
255
பள்ளிவாசலுக்கு மந்திரிக்க வந்த இளம்பெண்... ரத்தம் சொட்ட சொட்ட ஓடிவந்த பயங்கர பின்னணி!
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே வீரசோழன் பகுதியைச் சேர்ந்தவர் 25 வயது அப்துல் அஜீஸ். திருமணமான இவர் நரிக்குடி ஜூம்மா பள்ளிவாசலில் அஷ்ரத் ஆக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நரிக்குடி பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர், தனது குழந்தைக்கு மந்திரிக்க சென்றுள்ளார். அப்போது, “எனக்கு தூங்கினால் கெட்ட கெட்ட கனவாக வருகிறது. அதனால், எனக்கும் மந்திரிங்க” என கேட்டுள்ளார். அப்போது, நாளை தனியாக வாருங்கள் என கூறி அனுப்பியுள்ளார்.
அப்துல் அஜீஸ் சொன்னபடி, 22 ஆம் தேதி குறிப்பிட்ட நேரத்தில் நரிக்குடி ஜூம்மா பள்ளிவாசலுக்கு சென்றுள்ளார். அப்போது, மந்திரிப்பதுபோல் பாவ்லா செய்துவிட்டு, திடீரென அந்த இளம் பெண்ணிடம் அப்துல் அஜீஸ் பாலியல் ரீதியாக அத்துமீற ஆரம்பித்ததாக கூறப்படுகிறது. ஒரு கோயிலில் பூசாரியைப்போல, ஒரு தேவாலயத்தின் பாதிரியாரைப் போல நினைத்து பக்தியோடு சென்ற இளம்பெண்ணிடம் பள்ளி வாசல் அஷ்ரத்தாக பணிபுரியும் அப்துல் அஜீஸ் இப்படி நடந்துகொள்வார் என சற்றும் எதிர்பார்க்காத, அந்த இளம்பெண், அலறித்துடித்து கூச்சல் போட்டுள்ளார்.
கூச்சலிடக்கூடாது என அப்துல் அஜீஸ் மிரட்ட, பயந்துபோன இளம்பெண் இன்னும் அதிகமாக கூச்சலிட, சிறிய கத்தியை எடுத்த அப்துல் அஜீஸ், இளம்பெண்ணின் கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்தியுள்ளார்.
வலிதாங்க முடியாமல், ரத்தம் சொட்ட சொட்ட பள்ளிவாசலிலிருந்து வெளியே ஓடிவந்து, இளம்பெண் கதறி அழுது கூச்சல் போட, அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, காயமடைந்த அந்த இளம் பெண்ணை திருச்சுழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
தப்பிக்க முயன்ற அப்துல் அஜீஸை மடக்கி பிடித்து, நரிக்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
நரிக்குடி காவல் நிலைய போலீசார், அப்துல் அஜீஸை கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிவாசலில் மந்திரிக்க வந்த இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறியதோடு, கத்தி கூச்சல் போட்ட பெண்ணை, கத்தியால் வெட்டிய சம்பவம், நரிக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu