முகப்பு
ADMK பிரமுகர் மனைவி கொலையில் 'பகீர்' திருப்பம்..! மன்மத லீலைகள் அம்பலம்..!
Nov 14, 2025 05:48 AM
354
ADMK பிரமுகர் மனைவி கொலையில் 'பகீர்' திருப்பம்..! மன்மத லீலைகள் அம்பலம்..!
கோவை பன்னிமடை ஊராட்சியின் முன்னாள் தலைவராகவும், அதிமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலருமாகவும் இருந்தவர் கவிசரவணகுமார். இவருக்கு திருமணமாகி மகேஸ்வரி என்ற மனைவியும் 21 வயதில் ஒரு மகனும் 15 வயதில் ஒரு மகளும் இருந்தனர்.
கவிசரவணகுமாரின் மனைவி மகேஸ்வரி கடந்த மாதம் 28 ஆம் தேதி, வீட்டில் கத்தியால் குத்தப்பட்டு ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
47 வயது மகேஸ்வரியின் கொலைக்கு யார் காரணம்? அக்கம்பக்கத்தினர் கதறி துடித்துக்கொண்டிருந்த சூழலில், மகேஸ்வரியின் வீட்டில் 15 வருடங்களாக டிரைவராக வேலைபார்த்து வந்த சுரேஷ் என்பவர்,
“நான்தான் மகேஸ்வரியை கத்தியால் குத்தி கொலை செய்தேன்” என காவல் நிலையத்தில் சரணடைந்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியே பரபரப்பானது.
சரணடைந்த டிரைவர் சுரேஷ், எதற்காக மகேஸ்வரியை கொலை செய்தார்?, என்ன காரணத்தை வாக்குமூலமாக கொடுத்தார்? என்பதை போலீஸார், பல மணிநேரம் ரகசியம் காத்துவந்தனர்.
பிறகு, ‘மகேஸ்வரி திட்டியதால் கொலை செய்தேன்’ என டிரைவர் சுரேஷ் வாக்குமூலம் கொடுத்ததாக, காவல்துறை சொல்ல, ‘ஏம்பா... எந்த டிரைவர்தான் திட்டுவாங்காமல் இருந்திருக்கிறார்?’ இதெல்லாம் கொலைக்கான காரணமா? என அப்பகுதி மக்கள் பேசிக்கொண்டனர்.
அதே நேரத்தில், முன்னாள் கவுன்சிலரும் கணவருமான கவி சரவணகுமரே, மனைவி மகேஸ்வரியை கொலை செய்யச் சொல்லிவிட்டு, டிரைவர் சுரேஷ் பழிபோடுகிறார்” என மகேஸ்வரியின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டும் வந்துள்ளனர்.
வீட்டைச் சுற்றி மட்டுமல்ல, வீடு முழுக்க சி.சி.டி.வி கேமரா இருந்துள்ளது. ஆனால், கொலை சம்பவத்தின்போது சி.சி.டி.வி. கேமரா ஆஃப் செய்யப்பட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனால், அதிமுக மாவட்ட கவுன்சிலர் கவி சரவணகுமாரின் மனைவி மகேஸ்வரி படுகொலையில் மர்மம் நீடித்துவந்தது.
ஓட்டுநர் சுரேஷ் கொலை செய்ததாக சரணடைந்த நிலையில் தடாகம் போலீசார் அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்திருந்தனர். இந்நிலையில், தடாகம் காவல்துறையினர் சுரேஷை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரித்தபோது தான் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி, வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
சுரேஷின் கால் ஹிஸ்டரியை போலீசார் சோதனை செய்தபோது, மகேஸ்வரி கொலை செய்யப்படுவதற்கு முன்பு தனது எஜமான் கவிசரணகுமாரிடம் போனில் பேசியது தெரியவந்துள்ளது.
இதனால் வசமாக சிக்கிக் கொண்ட சுரேஷிடம் போலீசார் கிடுக்குப்பிடி கேள்விகளால் விசாரித்தபோது தான், கவிசரணகுமாரே தனது மனைவி மகேஸ்வரியை கொலை செய்ய சொன்னததாக சுரேஷ் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
இதனால் என்ன பிரச்னை வந்ததாலும் அதை நான் பார்த்துக் கொள்வதாக கூறியதால் தான் அப்படி செய்தேன் எனவும் வாக்கு மூலம் அளித்துள்ளார்.
அப்படி மனைவியை கொலை செய்ய சொல்லும் அளவுக்கு கவிசரணகுமாருக்கு என்ன ஆத்திரம்? என போலீசார் விசாரித்தபோது தான் பல தகவல்கள் வெளியே வந்துள்ளன.
செங்கல் சூளை நடத்தி வந்த கவி சரவணகுமார், செங்கல் சூளை விவகாரமாக பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று வருவதை மனைவியிடம் காரணம் காட்டி, நிறைய பெண்களோடு தகாத உறவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அப்படி ஒரு பெண்ணோடு தகாத உறவில் இருந்தபோது, மகேஷ்வரியிடம் கையும் களவுமாக கவி சரவணகுமார் சிக்கியுள்ளார். பின்னர் இனி அப்படி செய்யமாட்டேன் என மனைவியை சமாதானம் செய்துள்ளார்.
ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக, வடவள்ளி பகுதியில் வீடு எடுத்து ஒரு பெண்ணோடு கவி சரவணகுமார், திருமணத்தை மீறிய உறவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
பாதி நாட்கள் அங்கேயே குடித்தனம் நடத்தி வந்த கவி சரவணகுமார், ஒரு கட்டத்தில் தனது மனைவி மகேஸ்வரியிடம் விவாகரத்து கேட்டுள்ளார். ஆனால் மகேஸ்வரி, விவாகரத்து தர மாட்டேன் என உறுதியாக தெரிவித்துள்ளார்.
இது கவி சரவணகுமாருக்கு பிரச்னையாக இருந்து வந்த நிலையில், தனது மனைவியை தீர்த்து கட்ட முடிவு செய்தது தெரியவந்துள்ளது. அதற்காக 15 ஆண்டுகளாக தன்னிடம் வேலை பார்த்து வந்த விசுவாசி சுரேஷிடம், இது குறித்து தெரிவித்து, வழக்கு செலவையும், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சேம்பரையும் தருவதாக ஆசை வார்த்தை கூறி, என்ன ஆனாலும் தான் பார்த்துக் கொள்வதாக தைரியம் கூறி அனுப்பியுள்ளார்.
சுரேஷும் வீட்டிற்கு சென்று கத்தியால், மகேஸ்வரியை குத்திக் கொலை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் கொலை செய்த கையோடு வடவள்ளி பகுதியில் தங்கியிருந்த கவி சரவணகுமாரை சந்தித்துள்ளார். அங்கிருந்து கவி சரவணகுமார், சுரேஷை அழைத்து சென்று சரண் அடைய வைத்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சுரேஷ் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் தடாகம் காவல்துறையினர் கவி சரவணக்குமாரையும் கைது செய்து இந்த வழக்கில் இரண்டாவது கொலை குற்றவாளியாக சேர்த்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தியுள்ளனர்.
அதே நேரத்தில் மகேஸ்வரி இறந்த தினத்தன்று, கவி சரவணகுமார் வீட்டிற்கு சென்று தனது மகனிடம் கொலை செய்தவனை விடக் கூடாது என்பது போல ஆக்ரோஷமாக கூறுவதும், எதுவுமே தெரியாதது போல நடித்த காட்சிகளும் காண்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கூட்டத்தில் இப்படி ஹெவி பெர்பார்மன்ஸ் கொடுத்தும் போலீசாரின் விசாரணையில் வசமாக சிக்கியுள்ளார் கவி சரவணகுமார்.
காதல் வேகத்தில் செய்தாலும், காமுக மோகத்தில் செய்தாலும் குற்றம் கேடு தரும்..!
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu