RECENT NEWS

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - அ.தி.மு.க. எம்.பி.இன்பதுரை

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - அ.தி.மு.க. எம்.பி.இன்பதுரை

Mar 13, 2026

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - அ.தி.மு.க. எம்.பி.இன்பதுரை

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - அ.தி.மு.க. எம்.பி.இன்பதுரை

Mar 13, 2026

முகப்பு

இளம்பெண்ணை மாறி மாறி சீரழித்த 'வக்கிர காவலர்கள்' நள்ளிரவில் ரோந்து பணியில் திகில்.! தி.மலையில் நடந்தது என்ன?

Sep 30, 2025 01:35 PM

156

இளம்பெண்ணை மாறி மாறி சீரழித்த 'வக்கிர காவலர்கள்' நள்ளிரவில் ரோந்து பணியில் திகில்.! தி.மலையில் நடந்தது என்ன?

18 வயது இளம்பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை சிக்கிய 2 காவலர்கள்..தி.மலையில் நடந்தது என்ன?

ஆந்திராவில் இருந்து காய்கறிகளை ஏற்றிக் கொண்டு சரக்கு வாகனம் ஒன்று திருவண்ணாமலை காய்கறி மண்டிக்கு சென்றுள்ளது. பின்னர் அங்கு காய்கறிகளை இறக்கி வைத்து விட்டு பைபாஸ் சாலை வழியாக அந்த வாகனம் ஆந்திரா நோக்கி புறப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை அடுத்த ஏந்தல் புறவழிச் சாலையில் அந்த வாகனம் நள்ளிரவில் சென்று கொண்டிருந்தபோது, வாகனத்தின் முன் பகுதியில் இரண்டு பெண்கள் அமர்ந்திருந்ததை பார்த்த, இரவு ரோந்து பணியில் இருந்த கிழக்கு காவல் நிலைய காவலர்களான சுரேந்தர் மற்றும் சுரேஷ்ராஜ் இருவரும் அந்த வாகனத்தை வழிமறித்துள்ளனர்.

அப்போது ஓட்டுனரும், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இரண்டு சகோதரிகளும் வாகனத்தில் இருந்து கீழே இறங்கியுள்ளனர். பின்னர் அங்கு நின்ற இரண்டு பெண்களில் 18 வயதான தங்கையை மட்டும், காவலர் சுரேந்தர் புல்லட் பைக்கில் ஏற்றிக் கொண்டு 1 கி.மீ தூரத்தில் சுடுகாட்டுக்கு அருகில் உள்ள புதர் பகுதிக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. அங்கு சென்றதும் காவலர் சுரேந்தர், அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்ததாக சொல்லப்படுகிறது.

பின்னர் அங்கிருந்து காவலர் சுரேஷ் ராஜிற்கு போன் செய்த காவலர் சுரேந்தர், சுடுகாட்டிற்கு அருகே உள்ள இடத்திற்கு வருமாறு கூறியுள்ளார். உடனே அங்கு வந்த காவலர் சுரேஷ்ராஜூம் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

பின்னர் காவலர்கள் இருவரும் அந்த இளம்பெண்ணை அங்கேயே விட்டுவிட்டு தப்பித்து சென்றுள்ளனர். அந்த பெண் எங்கு செல்வது என தெரியாமல் நின்றுள்ளார்

இந்த கொடூர சம்பவம் நள்ளிரவு 12 மணிக்கு நடந்ததாக கூறப்படும் நிலையில், அதிகாலை 4 மணி அளவில் பால் ஊற்றுவதற்காக உள்ளூர் பகுதியை சேர்ந்த ஒருவர் அவ்வழியாக சென்றபோது, பெண் ஒருவர் நின்றுகொண்டிருப்பதை பார்த்துள்ளார்.

அந்த பெண்ணிடம் என்ன நடந்தது? என உள்ளூரை சேர்ந்தவர் கேட்க அவர் நடந்ததை தெரிவித்துள்ளார். உடனே உள்ளூரை சேர்ந்த நபர், அந்த பெண்ணை, அக்காவும், வாகன ஓட்டுனரும் இருக்கும் இடத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.

பின்னர் அவர் 108 ஆம்புலன்ஸிற்கு போன் செய்து வரவழைத்து, அந்த பெண்ணை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளார். மருத்துவனையில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த தகவலை அறிந்த திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் மற்றும் உதவி காவல் கண்காணிப்பாளர் சதீஷ் ஆகியோர் நேரடியாக பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் காலை 9 மணிக்கு சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.

அப்போது புல்லட் வாகனம் மற்றும் காவலர்களின் அங்க அடையாளங்கள் குறித்து அந்த பெண் கூறியதையும், அன்று ரோந்து பணியில் இருப்பவர்களின் பட்டியலை வைத்தும் பார்த்தபோது சுரேந்தர் மற்றும் சுரேஷ்ராஜ் தான் என்பதை போலீசார் உறுதி செய்தனர்.

இதையடுத்து காவலர்கள் சுரேந்தர் மற்றும் சுரேஷ்ராஜ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து ரகசியமான இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

6 இன்ஸ்பெக்டர்கள், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் மற்றும் உதவி காவல் கண்காணிப்பாளர் சதீஷ் ஆகியோர் கைதானவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இருவரையும் சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று விசாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மக்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டிய காவலர்களே, இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

செல்போனை பரிசோதித்த  கணவர் உடலில் பெட்ரோல் 
ஊற்றி தீ வைத்த மனைவி..! வாட்ஸ் அப் சாட்டிங் ரகசியத்தால் ஆவேசம்
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies