RECENT NEWS

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1840 உயர்ந்தது

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1840 உயர்ந்தது

Feb 09, 2026

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1840 உயர்ந்தது

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1840 உயர்ந்தது

Feb 09, 2026

முகப்பு

“சந்தேகமா படுற...?” ராணுவ வீரரைக் கொன்று பைக்கிலேயே வைத்து சுற்றிய மனைவி family!

May 27, 2025 04:27 PM

566

“சந்தேகமா படுற...?”   ராணுவ வீரரைக் கொன்று பைக்கிலேயே வைத்து சுற்றிய மனைவி family!

“சந்தேகமா படுற...?” ராணுவ வீரர் கொலை... பைக்கிலேயே வைத்து சுற்றிய மனைவி குடும்பம்!

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே பெரிய அய்யம்பாளையம் ஊராட்சிக்குபட்ட
தேன்மலைபட்டி கிராமத்தைச் சேர்ந்த பிச்சாண்டி -சாந்தி தம்பதியர். இவர்களது, மூத்த மகன் ராஜேஷ், ராணுவத்தில் பணிபுரிந்ததோடு, கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு, கீழ்பழ்பள்ளிபட்டு பகுதியைச் சேர்ந்த சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து, ஒரு மகன், ஒரு மகளுடன் கண்ணமங்கலம் பகுதியில் தனியாக வசித்து வந்தார்.

சங்கீதா வேலூரில் தனியார் மருத்துவமனையில், செவிலியராக பணியாற்றி வந்தார். ராணுவத்தில் பணிபுரிவதால் விடுமுறை கிடைக்கும்போது, ராஜேஷ் வந்து சென்றுகொண்டிருந்தார்.



இந்தநிலையில், தனது மனைவி செவிலியராக பணிபுரிவது ராணுவ வீரர் ராஜேஷுக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. “வேலைக்கு செல்வதை நிறுத்துவிடு” என அடிக்கடி மனைவி மீது சந்தேகப்பட்டு, ராஜேஷ் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால், கணவர் ராஜேஷுடன் கோபித்துக்கொண்டு, தனது குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார், சங்கீதா.


இதனையடுத்து, தனது மாமியார் வீட்டிற்கு சென்ற மனைவியிடம் கெஞ்சி தங்களது
வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார், ராணுவ வீரர் ராஜேஷ். ஆனால், சந்தேகம் என்பது நீரு பூத்த நெருப்பு போன்றதாயிற்றே? அது, கனன்றுகொண்டேதானே இருக்கும்? எப்போது வேண்டுமானாலும் தீ கொழுந்துவிட்டு எரியத்தானே செய்யும்? எனவே, கடந்த மே 13 ஆம் தேதி மீண்டும் தம்பதியினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது, தனது மனைவி சங்கீதாவை, ராணுவ வீரர் ராஜேஷ் அடித்து, தாக்கி வன்முறையில் ஈடுபட்டுள்ளார். இதனால், மனைவி சங்கீதா மீண்டும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு, தனது தாயார் இந்திராணியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.


இதனால், ஆத்திரமடைந்த சங்கீதாவின் அண்ணன் சதீஷ்குமார், ராஜேஷை போனில் தொடர்பு கொண்டு தங்கையை கொடுமைப் படுத்துவது தொடர்பாக கோபட்டுப்பட்டு பேசியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மே 13 ஆம் தேதி இரவு, ராணுவ வீரர் ராஜேஷ் மது குடித்து விட்டு, தனது மனைவியை அழைப்பதற்கு தனது மாமியார் வீட்டிற்கு வந்துள்ளார்.


அப்போது, கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், மாமியார் இந்திராணி மருமகனை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த ராஜேஷ், தனது மனைவி மற்றும் மாமியார் ஆகியோரை தாக்க ஆரம்பித்துள்ளார். இதனைக் கண்ட சங்கீதாவின் சகோதரர் சதீஷ்குமார், “என் கண் முன்பே என் தாயையும் தங்கையையும் அடிக்கிறியா?” எனக் கூறி, ராஜேஷை கடுமையாக தாக்கியுள்ளார்.

இதனையடுத்து, சங்கீதாவின் உறவினர்களான, வேலூர் மாவட்டம் நாகநதி கிராமத்தைச் சேர்ந்த கலையரசன், கதிர்வேல், ஜெயக்குமார், கிஷோர் உள்ளிட்டோரை வரவழைத்து, சுமார் 8 பேர் சேர்ந்து, ராணுவ வீரர் ராஜேஷை, கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.

பின்னர், போளுர் தாலுக்கா வெல்லூர் கிராமத்தில் உள்ள சங்கீதாவின் குடும்ப
சொத்தாக உள்ள மாந்தோப்பு விவசாய நிலத்தற்கு கொண்டு சென்று, ஓர் அறையில்
அடைத்து வைத்து, தொடர்ந்து தாக்கியுள்ளனர். தாக்குதலில் ராணுவ வீரர்
ராஜேஷ் உயிரிழந்துள்ளார்.


பின்னர், சங்கீதாவின் குடும்பத்தினரும் உறவினர்களும் சேர்ந்து, மே 15 ஆம் தேதி
விடியற்காலையில் ராஜேஷின் சடலத்தை பைக்கில் வைத்துக் கொண்டு, என்ன செய்வது என தெரியாமல் சுற்றி திரிந்துள்ளதாக கூறப்படுகிறது.

பிறகு, ராஜேஷின் சொந்த ஊரான தேன்மலைபட்டி கிராமத்தில், விவசாயி ஜெயபாலன்
என்பவரின் நிலத்திலுள்ள கிணற்றில், ராஜேஷின் சடலத்தை வீசி விட்டு
சென்றது, விசாரணையில் தெரியவந்தது.



இந்தநிலையில், மே 15 ஆம் தேதி இரவு 7.00 மணிக்கு, கிணற்றில் சடலம் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், கண்ணமங்கலம் போலீசார் நேரில் சென்று சடலத்தை கைப்பற்றி, இறந்தது ராணுவ வீரர் ராஜேஷ்தான் என உறுதிபடுத்தினர். பின்பு, பிரேத பரிசோதனைக்கு வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து,
விசாரணை மேற்கொண்டனர்.



பிரேத பரிசோதனையில், ராணுவ வீரர் ராஜேஷ் கிணற்றில் தவறி விழவில்லை,
இறந்த பிறகு சடலத்தை கிணற்றில் வீசப்பட்டது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, ராஜேஷின் கொலைக்குக் காரணம் அவரது மனைவி சங்கீதாவும் அவரது குடும்பத்தினரும்தான் என்பதை கண்டறிந்த போலீஸார், கொலையில் தொடர்புடைய 8 பேரையும் தேடி வந்த நிலயில், 5 பேரை கைது செய்தனர்.


மேலும், தலைமறைவாக உள்ள ராணுவ வீரர் மனைவி சங்கீதா, அவரது தாயார் இந்திராணி,
சகோதரர் சதீஷ்குமார் ஆகியோரை போலீசார் தனிப்படை அமைத்து தேடிவருவதாகவும் கூறப்படுகிறது. கைது செய்யபட்ட 5 பேரையும், ஆரணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

சந்தேகத்தால், கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட தகராறு, படுகொலையில் முடிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

நா.த.க கூட்டத்தில் இடையூறு... த.வெ.கவினரின் கார் மீது தாக்குதல்... 'சாட்டை'யின் பேச்சால் சலசலப்பு
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies