RECENT NEWS

தமிழக மீனவர்களை 25 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

தமிழக மீனவர்களை 25 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

Feb 16, 2026

தமிழக மீனவர்களை 25 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

தமிழக மீனவர்களை 25 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

Feb 16, 2026

BIG STORIES

வாலிபால் ஆடலாம் வா..மாணவியை சீரழித்தவக்கிர பயிற்சியாளர்..! போக்சோவில் சிக்கியது எப்படி ?

May 01, 2025 01:37 AM

7076

வாலிபால் ஆடலாம் வா..மாணவியை சீரழித்தவக்கிர பயிற்சியாளர்..!
போக்சோவில் சிக்கியது எப்படி ?

வாலிபால் ஆடலாம் வா..மாணவியை சீரழித்தவக்கிர பயிற்சியாளர்..! போக்சோவில் சிக்கியது எப்படி ?

நாகப்பட்டினம் மாவட்டத்தில் வாலிபால் போட்டிக்கு மாணவியை அனுப்ப பெற்றோர் மறுப்பதாக கூறி சைல்டு ஹெல்ப் லைனுக்கு புகார் தெரிவித்த பயிற்சியாளர், மாணவியிடம் ஏற்கனவே பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டது தெரியவந்ததால் போலீசாரால் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.

நாகப்பட்டிணம் மாவட்டம் வேதாரண்யம் வட்டத்திற்குட்பட்ட தோப்புத் துறை பகுதியைச் சேர்ந்தவர் முகமது கலிலூர் ரகுமான். 34 வயதுடைய இவர் பள்ளி கல்லூரி மாணவிகளுக்கு வாலிபால் பயிற்றுநராக உள்ளார். இவர் சம்பவத்தன்று மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறையின் 1098 என்கிற டால் ப்ரீ எண்ணிற்கு போன் செய்து, தங்கள் அணியில் நன்றாக வாலிபால் விளையாடும் மாணவி ஒருவரை அவரது பெற்றோர்கள் போட்டிக்கு அனுப்பாமல் வீட்டில் அடைத்து வைத்து துன்புறுத்தி வருகின்றனர் என தகவல் தெரிவித்துள்ளார்.

அவர் அளித்த புகாரின் அடிப்படையில் குழந்தை பாதுகாப்பு துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மாணவியின் பெற்றோர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.அப்போது பெற்றோர்கள் வாலிபால் பயிற்றுனர் மீது எங்களுக்கு சந்தேகம் உள்ளது எனவும் , அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் 12 ஆம் வகுப்பு படித்து வரும் தங்கள் மகளுக்கு வாலிபாலில் சிறப்பான பயிற்சி அளிப்பதாக கூறி பல்வேறு ஊர்களுக்கு அழைத்துச்சென்றார். அங்கு அவரது நடவடிக்கைகள் சரியாக இல்லாத்தால் , அவருடன் தங்கள் மகளை அனுப்ப வில்லை என்று தெரிவித்தனர்.

மாணவியை அழைத்து அதிகாரிகள் தனியாக விசாரணை செய்ததில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருத்துறைப்பூண்டியில் சம்பந்தப்பட்ட மாணவி படித்துவரும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் பங்கேற்க சில மாணவர்களை கலிலுர் ரஹ்மான் அழைத்து சென்றுள்ளார்.

அப்போது அங்கு வாலிபால் விளையாடி கொண்டிருத இந்த மாணவியை பார்த்த்துள்ளார் முகமது கலிலூர் ரகுமான். முதலில் மாணவியிடம் விளையாட்டு நுனுக்கங்களை சொல்லிக்கொடுப்பது போல பேச்சுக்கொடுத்துள்ளார். பின்னர் “உனக்கு நிறைய திறமை இருக்கிறது, உன்னுடைய விளையாடும் திறனை பார்க்கும் போது, நீ மாநில அளவில் ஜொலிக்க வாய்ப்புள்ளது , என்னிடம் பயிற்சி பெற்றால் உன்னால் மாநில அளவில் போட்டியில் பங்கேற்று ஜெயிக்க முடியும்” என மாணவியை ஊக்கப்படுத்துவது போல மூளை சலவை செய்துள்ளார்.

இதனையடுத்து மாணவியும் மாநில அளவில் வெற்றி பெற்று சாதிக்கலாம் என்கிற ஆசையில் வாலிபால் கோச் பற்றி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பெற்றோரும், தங்கள் மகளை கலிலுர் ரஹ்மானிடம் பயிற்சி பெற அனுமதி அளித்துள்ளனர். இதனை பயன்படுத்தி பல்வேறு ஊர்களுக்கு போட்டியில் கலந்து கொள்வதற்காக மாணவியை அழைத்துச் சென்றுள்ளார் கலிலூர் ரஹ்மான்.

செல்லும் இடங்களில் தனிமையை பயன்படுத்தி பேசி பேசியே மாணவியிடம் அத்துமீரலில் ஈடுபட்டதாகவும், இந்த விவரம் அறிந்து பெற்றோர் மாணவியை பயிற்சிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே வைத்திருந்ததால், சைல்டு ஹெல்ப் லைனுக்கு தவறான புகார் அளித்து மாணவியை அழைத்துக் கொண்டு வெளியூர் செல்ல பயிற்சியாளர் கலிலூர் ரஹ்மான் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது, அவர் மீது போக்சோ சட்டத்தின் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

ஏற்கனவே இரண்டு பெண்களை திருமணம் செய்து தனித்தனியாக வீடு எடுத்து குடித்தனம் நடத்தி வரும் கலிலுர் ரஹ்மான் 3 வதாக பன்னிரண்டாம் வகுப்பு மாணவியையும் திருமண ஆசைக்காட்டி சீரளித்ததாக சுட்டிக்காட்டிய போலீசார் , பெண் பிள்ளைகளை விளையாட்டு , நடனம் என்று சிறப்பு பயிற்சிக்கு ஆண் பயிற்சியாளர்களை நம்பி அனுப்பி வைக்கும் பெற்றோர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம் என்றும் முடிந்தவரை கூடவே சென்று காத்திருந்து வீட்டுக்கு கூட்டி வருவது பாதுகாப்பாக இருக்கும் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

"10 நிமிடங்கள் கொடுங்கள்".. உச்ச நீதிமன்றத்தில் தனி ஆளாக வாதாடி வென்ற +2 மாணவன்..! வியந்து பாராட்டிய நீதிபதி..!
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies