அரசுப் பேருந்தின் பின்பக்க டயர் வெடித்து சேதமடைந்த பலகையால் பள்ளிச்சிறுவர்கள் உட்பட 4 பேர் காயம்

0 3479
அரசுப் பேருந்தின் பின்பக்க டயர் வெடித்து சேதமடைந்த பலகையால் பள்ளிச்சிறுவர்கள் உட்பட 4 பேர் காயம்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே அரசுப் பேருந்தின் பின்பக்க டயர் வெடித்து, பேருந்தின் உட்புற பலகை உடைந்து பள்ளிச்சிறுவர்கள் உட்பட 4 பேர் காயமடைந்தனர்.

காட்டுமன்னார்கோவிலில் இருந்து தெம்மூர் வழியாக சிதம்பரம் நோக்கி அந்த அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. வக்கிராமாரி என்ற ஊரின் அருகே வந்தபோது, திடீரென பேருதின் இடதுபுற பின்பக்க டயர்களில் ஒன்று பெரும் சப்தத்துடன் வெடித்தது.

இதில் டயரின் மேற்பகுதியில் உள்ள மரத்தாலான பலகை சிதைந்து, பின்பக்க சீட்டில் அமர்ந்திருந்த முதியவர் ஒருவரின் கால் அதில் சிக்கிக்கொண்டது. உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டு முதியவர் மீட்கப்பட்டார்.

இதில் 3 பள்ளிச் சிறுவர்களுக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments