கனமழையால் சரிந்த மரம் வனப்பகுதியில் நடப்பட்டது!

0 1953

தெலுங்கானா மாநிலம் ஸ்ரீசில்லாவில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் வேரோடு சாய்ந்து விழுந்த சுமார் 70 ஆண்டுகள் பழமையான ஆலமரம் மீண்டும் நடப்பட்டது. மரம் விழுந்த இடத்தில் இருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில், மீண்டும் நடப்பட்டுள்ளது.

ஸ்ரீசில்லாவுக்கு அருகேயுள்ள ஒரு கிராமத்தில் இருந்த இந்த ஆலமரம் 4 மாதங்களுக்கு முன் சரிந்து விழுந்த நிலையில், கிராம மக்கள் அதனை பராமரித்து வந்தனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகமும் சமூக ஆர்வலர்களும் மரத்தை மீண்டும் நடவு செய்ய முடிவு செய்து, சுமார் 100 டன் எடைக் கொண்ட மரத்தை கிரேன்களின் உதவியுடன் அப்புறப்படுத்தினர். பிறகு, மரத்தின் இரண்டு பெரிய கிளைகள் லாரி மூலம் கொண்டு சென்று ஜில்லல்லா வனப்பகுதியில் நடவு செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments