விளாத்திகுளம் +2 மாணவி கொலை - ஒருவர் கைது
Mar 19, 2026
அரசியல்
இனி 'பூத் சிலிப்' இல்லை; வாக்காளர் தகவல் சீட்டுதான் - அர்ச்சனா பட்நாயக்
Mar 19, 2026 04:58 AM
35
இனி 'பூத் சிலிப்' இல்லை; வாக்காளர் தகவல் சீட்டுதான் - அர்ச்சனா பட்நாயக்
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப்புக்குப் பதிலாக வாக்காளர் தகவல் சீட்டு வழங்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
முன்பு அரசியல் கட்சிகள் அல்லது தேர்தல் அலுவலர்கள் சிறிய காகிதத்தில் வாக்காளரின் பாகம் எண் மற்றும் வரிசை எண்ணை மட்டும் எழுதித் தருவார்கள். அதற்குப் பதிலாக தேர்தல் ஆணையமே அதிகாரப்பூர்வமாக ஒரு சிறிய கையேடு போன்ற சீட்டை அச்சிட்டு வழங்கவுள்ளதாக அர்ச்சனா பட்நாயக் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
அதில் வாக்காளரின் பெயர் மற்றும் புகைப்படம், வாக்காளர் அடையாள அட்டை எண், வாக்குச் சாவடியின் பெயர் மற்றும் இருப்பிடம், வாக்குப் பதிவு நடைபெறும் தேதி மற்றும் நேரம், வாக்குச் சாவடியின் வரைபடம் உள்ளிட்டவற்றை அறிந்துகொள்ளலாம்.
இந்த தகவல் சீட்டை மட்டும் வைத்துக் கொண்டு வாக்களிக்க முடியாது என்றும் வாக்காளர் அடையாள அட்டையோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களில் ஒன்றையோ எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu