RECENT NEWS

என்ன கொடுமை சார் இது..! ஆத்திரத்தில் பாகிஸ்தான் வீரர்...இப்படியும் ஒரு  ரன் அவுட்- ஆ?  சர்ச்சையாக மாறி விவாதம்

என்ன கொடுமை சார் இது..! ஆத்திரத்தில் பாகிஸ்தான் வீரர்...இப்படியும் ஒரு ரன் அவுட்- ஆ? சர்ச்சையாக மாறி விவாதம்

Mar 14, 2026

தமிழ்நாடு

விவசாயிகள் அனைவரும் இயற்கை விவசாயத்தை பின்பற்ற வேண்டும்.. நீர் மேலாண்மையில் இந்தியாவிற்கு தமிழகம் வழிகாட்டுகிறது - பிரதமர் மோடி

Nov 19, 2025 12:33 PM

81

விவசாயிகள் அனைவரும் இயற்கை விவசாயத்தை பின்பற்ற வேண்டும் எனக்கேட்டுக் கொண்ட பிரதமர் மோடி, நீர் மேலாண்மையில் இந்தியாவிற்கு தமிழகம் வழிகாட்டுவதாகவும் புகழாரம் சூட்டியுள்ளார்.

கோவை வந்த பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர் சுவாமிநாதன், நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உள்ளிட்டோர் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து ரோடு ஷோ சென்ற பிரதமருக்கு வழிநெடுகிலும் திரண்டிருந்த மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

தேச பக்தி முழக்கங்களை எழுப்பியபடி நின்ற மக்கள் மலர்களை தூவியும், நடனமாடியும் பிரதமரை உற்சாகமாக வரவேற்றனர்.

இதனைத் தொடர்ந்து கொடீசியா மைதானத்தில் தென்னிந்திய வேளாண் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அங்கு அமைக்கப்பட்ட வேளாண் கண்காட்சியை திறந்து வைத்த பிரதமர், அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த வேளாண் பொருட்களை பார்வையிட்டார்.

வேளாண் பணிகள், விளை பொருள்களின் மதிப்பு கூட்டல் பணிகள், வேளாண் கருவிகள், பூக்கள் வளர்ப்பு உள்ளிட்டவை குறித்தும் விவசாயிகளிடம் பிரதமர் கேட்டறிந்தார்.

இதனைத் தொடர்ந்து விவசாயிகள் கௌரவிப்பு நிதி திட்டத்தின் 21-வது தவணையாக 18,000 கோடி ரூபாய் நிதியை பிரதமர் மோடி விடுவித்தார். இத்திட்டத்தின் கீழ், 4 மாதத்திற்கு ஒரு முறை தலா 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளில் ஆண்டுக்கு 6,000 ரூபாய் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இதன் மூலம் நாடு முழுவதும் 9 கோடி விவசாயிகள் பயன்பெறுவர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, பூமியின் பாதுகாப்புக்கு இயற்கை வேளாண்மை அத்தியாவசியமானது என்றார். ரசாயனத்தால் மண்ணின் வளத்திற்கு கேடு ஏற்படுவதாகவும், செலவீனமும் அதிகரிப்பதாகவும் குறிப்பிட்ட பிரதமர், ஒற்றைப் பயிரிடும் முறைக்கு பதில் பல வகை பயிர்களை பயிரிட வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், தமிழக உணவுப் பண்பாட்டில் சிறுதானியம் எப்போதும் இருக்கும் எனக் குறிப்பிட்ட பிரதமர், சிறுதானிய விவசாயத்தை ஊக்குவிக்க மாநில அரசுகள் முன்வர வேண்டுமென வலியுறுத்தினார். தென் இந்திய வேளாண்மை ஒட்டு மொத்த நாட்டுக்கும் வழிகாட்டுவதாக குறிப்பிட்ட பிரதமர், தென்னிந்தியா தான் நாட்டின் வேளாண் பல்கலைக்கழகம் என புகழாரம் தெரிவித்தார்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

என்ன கொடுமை சார் இது..! ஆத்திரத்தில் பாகிஸ்தான் வீரர்...இப்படியும் ஒரு  ரன் அவுட்- ஆ?  சர்ச்சையாக மாறி விவாதம்
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies