RECENT NEWS

'புதுமைப் பெண்' திட்டத்தால் கல்லூரிகளில் மாணவிகள் சேர்க்கை 34 சதவீதம் அதிகரிப்பு...   அமைச்சர் முத்துசாமி பேச்சு

'புதுமைப் பெண்' திட்டத்தால் கல்லூரிகளில் மாணவிகள் சேர்க்கை 34 சதவீதம் அதிகரிப்பு... அமைச்சர் முத்துசாமி பேச்சு

Feb 13, 2026

முகப்பு

உலகத்திலேயே மிக நீண்ட தேர்வு..! 13 மணி நேரம் தொடரும் சவால் கடைகள் மூடல்... சத்தம் வராம இருக்க விமானங்களையே நிறுத்துறாங்களாம்!

Nov 14, 2025 06:02 AM

157

உலகத்திலேயே மிக நீண்ட தேர்வு..! 13 மணி நேரம் தொடரும் சவால் கடைகள் மூடல்... சத்தம் வராம இருக்க விமானங்களையே நிறுத்துறாங்களாம்!

உலகத்திலேயே மிக நீண்ட தேர்வு..! 13 மணி நேரம் தொடரும் சவால் கடைகள் மூடல்...

ஒவ்வொரு வருட நவம்பர் மாதத்திலும் இப்படியொரு மிக நீண்ட தேர்வு தென் கொரியாவில் நடைபெறுகிறது. கடந்த வியாழக்கிழமை நாடு முழுவதும் 5 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கொரிய மொழியில் கல்லூரி ஸ்காலஸ்டிக் திறன் தேர்வை எழுதியுள்ளார்கள்.

என்பதன் சுருக்கமாக கொரிய மொழியில் சுனியுங்("Suneung") என அழைக்கப்படுகிறது. ஏழு ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் எழுதியுள்ளார்கள், என கூறப்படுகிறது.

மாணவர்கள் தங்கள் பாடத் தேர்வுகளைப் பொறுத்து, கொரிய, கணிதம், ஆங்கிலம், சமூக அல்லது இயற்கை அறிவியல், கூடுதல் வெளிநாட்டு மொழி மற்றும் ஹன்ஜா எனப்படும் கொரிய மொழியில் பயன்படுத்தப்படும் பாரம்பரிய சீன எழுத்துக்கள் ஆகியவற்றில் சுமார் 200 கேள்விகளுக்கு பதிலளிக்கின்றனர்.

மேலும் ஒவ்வொரு பாடத்திற்கும் இடையில் 20 நிமிட இடைவேளை மட்டுமே கொடுக்கப்படுகிறது.

"Suneung" தேர்வு என்பது தென் கொரியாவின் கல்லூரிக் கல்வித் திறன் சோதனைத் தேர்வு ஆகும். இது மாணவர்களின் கல்லூரி சேர்க்கைக்கான திறனை மதிப்பிடும் ஒரு தேர்வாக அங்கு நடத்தப்படுகிறது.

இது ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தின் மூன்றாவது வியாழக்கிழமை அன்று, சுமார் எட்டு மணி நேரம் நடைபெறும் தேர்வு ஆகும்.

இந்த நாளில், மாணவர்களின் தேர்வுக்காகவே கடைகள் மூடப்படுகின்றன. விமான சப்தங்கள் மாணவர்களின் தேர்வை தொந்தரவு செய்யாமல் இருக்க விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன எனவும் கூறப்படுகிறது.

இரவு நேரம் சூழ்ந்தபிறகும்கூட பல மாணவர்கள் தேர்வு எழுதிக்கொண்டே இருப்பார்கள். இரவு 10 மணிக்குமேல் கூட தேர்வை எழுதி முடித்துவிட்டுத்தான் வருவார்கள். இதைவிட, பார்வை சவால் கொண்ட மாணவர்கள் 12 மணி நேரத்திலிருந்து 13 மணிநேரம்கூட இந்த தேர்வை எழுதுகிறார்கள்.

அதாவது, அவர்கள் கூடுதல் வெளிநாட்டு மொழிப் பிரிவை எடுத்துக் கொண்டால், தேர்வு தொடங்கி கிட்டத்தட்ட 13 மணி நேரத்திற்குப் பிறகு இரவு 11:48 மணிவரை தேர்வு எழுதுவது தொடரும்.

இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து மாணவர் தேர்வு எழுதக் காரணம், இந்த தேர்வு பல்கலைக்கழகத்திற்குச் செல்ல முடியுமா என்பதை மட்டும் நிர்ணயிக்காது, அவர்களின் வேலை வாய்ப்புகள், வருமானம், அவர்கள் எங்கு வாழ்வார்கள் மற்றும் எதிர்காலத்தையே தீர்மானிக்கக்கூடிய தேர்வாக இருக்கிறது.

மாணவர்கள் தங்கள் பாடத் தேர்வுகளைப் பொறுத்து, கொரிய, கணிதம், ஆங்கிலம், சமூக அல்லது இயற்கை அறிவியல், கூடுதல் வெளிநாட்டு மொழி மற்றும் ஹன்ஜா எனப்படும் கொரிய மொழியில் பயன்படுத்தப்படும் பாரம்பரிய சீன எழுத்துக்கள் ஆகியவற்றில் சுமார் 200 கேள்விகளுக்கு பதிலளிக்கின்றனர்.

மேலும் ஒவ்வொரு பாடத்திற்கும் இடையில் 20 நிமிட இடைவேளை மட்டுமே கொடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

"சூர்யா - ஜோ திருமணத்திற்கு இதனால் தான் சம்மதித்தேன்.. அயோக்கிய பெண் ராதிகாவின் வேலை" சிவக்குமார் பகிர்ந்த தகவல்கள்..!
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies