RECENT NEWS

சேதமடைந்த சாலையில் பைக்கின் டயர் சறுக்கி கீழே விழுந்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்

சேதமடைந்த சாலையில் பைக்கின் டயர் சறுக்கி கீழே விழுந்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்

Mar 19, 2026

சேதமடைந்த சாலையில் பைக்கின் டயர் சறுக்கி கீழே விழுந்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்

சேதமடைந்த சாலையில் பைக்கின் டயர் சறுக்கி கீழே விழுந்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்

Mar 19, 2026

முகப்பு

ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டிகள் எப்படி நடத்தப்படும்? இந்தியா - பாகிஸ்தான் மோதல் இம்முறை இல்லை..? ஏன் தெரியுமா?

Nov 09, 2025 03:57 AM

49

ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டிகள்  எப்படி நடத்தப்படும்?  இந்தியா - பாகிஸ்தான் மோதல் இம்முறை இல்லை..? ஏன் தெரியுமா?

ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டிகள் எப்படி நடத்தப்படும்? இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் இம்முறை இல்லை?

உலகின் புகழ்பெற்ற விளையாட்டான கிரிக்கெட்,1900-ம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக்கில் இடம் பெற்றது. அதில் இங்கிலாந்து அணி பிரான்சை தோற்கடித்து தங்கப்பதக்கம் வென்றது. அதன்பின்னர் கிரிக்கெட் ஒலிம்பிக்கில் இருந்து நீக்கப்பட்டது. மீண்டும் கிரிக்கெட்டை ஒலிம்பிக்கில் சேர்க்குமாறு நீண்ட காலமாகவே பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில் வரும் 2028 ஆம் ஆண்டு, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் 128 ஆண்டுகளுக்குப் பிறகு கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது. இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.

ஒலிம்பிக் போட்டிகள் இரண்டு அல்லது மூன்று வாரங்கள் மட்டுமே நடக்கும். இதனால் கிரிக்கெட் போட்டிகளை எப்படி இவ்வளவு விரைவாக நடத்துவது? எத்தனை அணிகளை தேர்வு செய்வது? என்பது குறித்து ஐசிசி நிர்வாகிகள் ஒலிம்பிக் சம்மேளன அதிகாரிகளுடன் இணைந்து துபாயில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதன்படி, ஆடவர் பிரிவில் 6 அணிகள், மகளிர் பிரிவில் 6 அணிகள் என மொத்தமாக 12 அணிகள் பங்கேற்க இருப்பதாகவும், மொத்தம் 28 போட்டிகள் நடத்தப்பட உள்ளதாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதில் அடுத்த சிக்கல் என்னவென்றால் எந்த 6 அணிகளை தேர்வு செய்வது? எப்படி தேர்வு செய்வது? என்ற கேள்வி எழுந்தது. முதலில் ஐசிசி டி20 தரவரிசை பட்டியலில் முதல் ஆறு இடங்கள் பிடிக்கும் கிரிக்கெட் அணிகள், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் என முடிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் அந்த முடிவு கைவிடப்பட்டது.

அதற்கு மாறாக ஒவ்வொரு கண்டத்திலும் ஐசிசி தரவரிசையில் முன்னிலையில் இருக்கும் ஒரு அணியை தேர்வு செய்யலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி ஆசிய கண்டத்தில் இருந்து இந்தியாவும், ஐரோப்பிய கண்டத்தில் இருந்து இங்கிலாந்தும், ஓசேனியா ஆஸ்திரேலிய கண்டத்தில் இருந்து ஆஸ்திரேலியா அணியும், ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து தென்னாப்பிரிக்கா அணியும், அமெரிக்க கண்டத்தில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் அணியும், மற்றும் போட்டியை நடத்தும் அமெரிக்காவும் பங்குபெற முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட்டில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகளுக்கு எப்போதுமே பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் இம்முறை ஒலிம்பிக் போட்டியில் ஆசிய கண்டத்தில் இருந்து இந்தியா மட்டுமே தேர்வாகியுள்ளதால், பாகிஸ்தானுக்கு ஒலிம்பிக் போட்டியில் விளையாட இடம் கிடைக்கவில்லை. அதனால் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோத வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

எனினும் பாகிஸ்தான் அணி இந்தியாவுடன் ஒலிம்பிக்கில் மோதினால் அது பெரிய அளவு வர்த்தக லாபத்தை ஒலிம்பிக் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு கொடுக்கும் என்றும், இதனால் பாகிஸ்தான் அணியையும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

ரூ 800 கோடி நில மோசடி.. போலீசுக்கு டிமிக்கி கொடுத்த கேபிள் செந்தில் திடீர் நாடகம்..! மிரட்டல் வழக்கில் தப்பிக்க டெக்னிக்
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies