RECENT NEWS

அமெரிக்காவில் சாலை விபத்தில் இந்திய மாணவி மரணம் - ரூ.260 கோடி இழப்பீடு வழங்க சியாட்டில் மாநகராட்சி சம்மதம்

அமெரிக்காவில் சாலை விபத்தில் இந்திய மாணவி மரணம் - ரூ.260 கோடி இழப்பீடு வழங்க சியாட்டில் மாநகராட்சி சம்மதம்

Feb 12, 2026

அமெரிக்காவில் சாலை விபத்தில் இந்திய மாணவி மரணம் - ரூ.260 கோடி இழப்பீடு வழங்க சியாட்டில் மாநகராட்சி சம்மதம்

அமெரிக்காவில் சாலை விபத்தில் இந்திய மாணவி மரணம் - ரூ.260 கோடி இழப்பீடு வழங்க சியாட்டில் மாநகராட்சி சம்மதம்

Feb 12, 2026

தமிழ்நாடு

3 பேரை சுட்டுப்பிடித்த போலீஸ்.. ஜாமீனில் வந்தவர்களின் பாதகச் செயல்.. காவல் ஆணையர் பரபரப்பு தகவல்.!

Nov 04, 2025 01:08 PM

265

3 பேரை சுட்டுப்பிடித்த போலீஸ்.. ஜாமீனில் வந்தவர்களின் பாதகச் செயல்.. காவல் ஆணையர் பரபரப்பு தகவல்.!

காவல் ஆணையர் பரபரப்பு தகவல்.!

கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை தொடர்பாக 3 பேரை போலீசார் சுட்டு பிடித்துள்ள நிலையில், அதில் இருவர் மீது கொலை வழக்கு உள்ளதாகவும், 30 நாட்களுக்கு முன் ஜாமீனில் வந்தவர்கள் இந்த பாதகச் செயலை அரங்கேற்றி உள்ளதாகவும் கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் தெரிவித்துள்ளார்.

கோவையில் ஆண் நண்பரைத் தாக்கிவிட்டு முதலாம் ஆண்டு கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தமிழகத்தை உலுக்கியுள்ள நிலையில், அதனை அரங்கேற்றிய 3 பேரை வெள்ளகிணரில் வைத்து போலீசார் சுட்டு பிடித்துள்ளனர்.

குற்றச்சம்பவம் நடந்த இடத்தில் கிடைத்த தடயங்களையும், 300-க்கும் மேற்பட்ட சி.சிடி.வி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தபோது மூவரும் வெள்ளகிணரில் பதுங்கி இருப்பது தெரியவந்ததாக கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். வெள்ளகிணரில் வைத்து அவர்கள் மூவரையும் சுற்றி வளைத்தபோது போலீசாரைத் தாக்கிவிட்டு அவர்கள் தப்ப முயன்றதாகவும், அதனாலேயே அவர்களை சுட்டு பிடித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

போலீஸ் விசாரணையில் அவர்கள் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ், காளீஸ்வரன், குணா என்பது தெரியவந்ததாகவும், அவர்களில் சதீஷும், காளீஸ்வரனும் உடன் பிறந்த அண்ணன் தம்பி என்றும், குணா இவர்களது தூரத்து உறவினர் என்றும் சரவணா சுந்தர் தெரிவித்துள்ளார்.

மூவரும் இருகூரில் தங்கியபடி கட்டட வேலை, மரம் வெட்டுதல் என சிறு சிறு வேலைகளை செய்துவந்ததாகவும், அவர்கள் மீது கொலை, அடிதடி, திருட்டு என பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் காவல் ஆணையர் சரவண சுந்தர் தெரிவித்துள்ளார்.

மூவரும் இருகூரில் மது அருந்திவிட்டு மீண்டும் மது அருந்துவதற்காக சம்பவ இடத்துக்குச் சென்றபோது இந்த கொடூரச் செயலை அரங்கேற்றி உள்ளதாக காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். கல்லூரி மாணவியின் ஆண் நண்பர் இரவு 11.20 மணிக்கு போலீசாருக்கு செல்போனில் தகவல் அளித்த நிலையில், அடுத்த 15 நிமிடங்களில் போலீசார் அங்கு சென்றுவிட்டதாகவும், இருள் சூழ்ந்த பகுதி என்பதால் பாதிக்கப்பட்ட மாணவியை கண்டுபிடிக்க 5 மணி நேரம் ஆனதாகவும் அவர் கூறியுள்ளார்.

கல்லூரி மாணவியின் உடல் நலம் தற்போது தேறி வருவதாகவும், இது திட்டமிட்டு செய்யப்பட்டது போல் தெரியவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

கூட்டு பலாத்காரம், பொது இடத்தில் ஆபாசமாக செயல்படுதல், ஆபத்தான ஆயுதம் பயன்படுத்தி காயம் ஏற்படுத்துதல், பாலியல் குற்ற நோக்குடன் ஒருவரை கடத்துததல் உட்பட 5 பிரிவுகளின் கீழ் மூவர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குண்டாஸ் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் காவல் ஆணையர் சரவண சுந்தர் தெரிவித்துள்ளார்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

"சூர்யா - ஜோ திருமணத்திற்கு இதனால் தான் சம்மதித்தேன்.. அயோக்கிய பெண் ராதிகாவின் வேலை" சிவக்குமார் பகிர்ந்த தகவல்கள்..!
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies