RECENT NEWS

100 ஆண்டுகளுக்கு முன் பிரான்ஸ் அபகரித்த மத்தளம் ஐவரி கோஸ்ட் நாட்டிற்கே   திருப்பி ஒப்படைப்பு

100 ஆண்டுகளுக்கு முன் பிரான்ஸ் அபகரித்த மத்தளம் ஐவரி கோஸ்ட் நாட்டிற்கே திருப்பி ஒப்படைப்பு

Mar 14, 2026

100 ஆண்டுகளுக்கு முன் பிரான்ஸ் அபகரித்த மத்தளம் ஐவரி கோஸ்ட் நாட்டிற்கே   திருப்பி ஒப்படைப்பு

100 ஆண்டுகளுக்கு முன் பிரான்ஸ் அபகரித்த மத்தளம் ஐவரி கோஸ்ட் நாட்டிற்கே திருப்பி ஒப்படைப்பு

Mar 14, 2026

முகப்பு

கர்ப்பத்தை கலைக்க மறுப்பு காதலி கொடூரக்கொலை!.. சூட்கேசில் அடைத்த காதலன்..

Jun 07, 2025 09:52 AM

201

கர்ப்பத்தை கலைக்க மறுப்பு காதலி கொடூரக்கொலை!.. சூட்கேசில் அடைத்த காதலன்..

கர்ப்பத்தை கலைக்க மறுத்ததால் காதலியின் கழுத்தை நெரித்து கொன்று, சடலத்தை சூட்கேசில் அடைத்து வீசி சென்ற சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் நிஜாம்பேட்டையில் பச்சுபள்ளி-மியாபூர் சாலையோரம் ஆள் நடமாட்டம் குறைவான பகுதியில் உள்ள முட்புதரில் இருந்து துர்நாற்றம் வீசியது. அவ்வழியாக ஆடு மேய்த்தவர்கள் பார்த்தபோது புதரில் புதிய சூட்கேஸ் இருந்தது தெரிய வந்தது.இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு வந்து சூட்கேசை திறந்து பார்த்தபோது, அழுகிய நிலையில் இளம்பெண் சடலம் இருப்பது தெரிந்தது. சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
விசாரனையில், கொலையானவர் நேபாள நாட்டை சேர்ந்த 33 வயதாகும் தாரா பெஹாரா என்பது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் இந்த கொலையை செய்தது, ஐதராபாத் இந்திரம்மா காலனியை சேர்ந்த விஜய்தோபா என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து விஜய்தோபாவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் தாராபெஹராவை கொன்றதை ஒப்புக்கொண்டார். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகின.

நேபாள நாட்டை சேர்ந்த விஜய்தோபாவுக்கு, 2 குழந்தைகளின் தாயான தாராபெஹாரா உடன் திருமணம் தாண்டிய உறவு இருந்துள்ளது. இதனால் அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளர். குடும்பத்திற்கு தெரியவந்தால் தங்களது காதலுக்கு இடையூறு ஏற்படும் என பயந்து இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, கடந்த ஏப்ரல் மாதம் 4ஆம் தேதி ஐதராபாத்துக்கு குடிவந்துள்ளனர்.

ஜூபிலி ஹில்ஸ் பகுதி அருகே வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தனர். இவர்கள் தங்கியிருக்கும் பகுதிக்கு அருகே விஜய்தோபா ஒரு ‘பாஸ்ட் புட்’ கடையில், வேலை செய்து வந்தார். பின்னர் அங்கிருந்து இந்திரம்மா காலனியில் சென்ற இருவரும் ஒன்றாக ‘பாஸ்ட்புட்’ கடையை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் தாராபெஹாரா கர்ப்பமாகி உள்ளார். இதையறிந்த விஜய்தோபா, தற்போது குழந்தை பிறந்தால் இடையூறாக இருக்கும். எனவே கருவை கலைத்து விடும்படி தாராபெஹராவிடம் கூறியுள்ளார். ஆனால் தாராபெஹரா அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த மாதம் 23ம்தேதி அதிகாலை இருவருக்கும் இடையே மீண்டும் இதுதொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த விஜய்தோபா, தாராபெஹாராவை துணியால் கழுத்தை நெரித்துள்ளார். இதில் மூச்சுத்திணறி தாராபெஹாராவை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து தான் செய்த கொலையை மறைப்பதற்காக, வெளியே சென்று பெரிய சூட்கேசை ஒன்றை வாங்கி, அதில் இறந்த தாராபெஹாராவின் உடலை அடைத்து, பச்சுபள்ளி-மியாபூர் சாலையில் உள்ள ரெட்டிஸ் ஆய்வகம் அருகே உள்ள முள்புதரில் வீசிவிட்டு தப்பி சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து விஜய்தோபாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கர்ப்பத்தை கலைக்க மறுத்ததால் நம்பி வந்த காதலியின் கழுத்தை நெரித்து கொன்று, சடலத்தை சூட்கேசில் அடைத்து இளைஞர் வீசி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

என்ன கொடுமை சார் இது..! ஆத்திரத்தில் பாகிஸ்தான் வீரர்...இப்படியும் ஒரு  ரன் அவுட்- ஆ?  சர்ச்சையாக மாறி விவாதம்
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies