கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா
Mar 13, 2026
தங்கம் விலை ரூ.560 குறைந்தது
Mar 13, 2026
42 வயது பெண் கூட்டு பா*யல் வன்கொடுமை என புகார்
Mar 13, 2026
காய்கறிகளின் விலை 20% வரையில் குறைந்தது
Mar 13, 2026
முகப்பு
டிக்கெட் கேட்டா அடிப்பீங்களா..? நடத்துநர் பேசுனது சரியா..? இதற்கு என்னதான் தீர்வு..? மாநகரப் பேருந்தில் மாணவி ஆவேசம்
Nov 28, 2025 03:07 AM
698
சென்னை பாரிமுனையில் இருந்து தாம்பரம் சென்ற மாநகர பேருந்தில் நடத்துநரை சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் செருப்பால் அடித்ததாக கூறி, பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை பாரிமுனையில் சட்டக்கல்லூரி மாணவி பிரியா என்பவர் மாநகர போக்குவரத்து கழக பேருந்தில் ஏறியுள்ளார். கிளாம்பாக்கம் வரை செல்லும் அந்த பேருந்தில், தாம்பரம் செல்வதற்காக பயணச்சீட்டு எடுத்த பிரியா, தாம்பரம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கவில்லை.
அடுத்த பேருந்து நிறுத்தத்தில் இறங்க காத்திருக்கும் போது போது நடத்துனர் மணி, நீங்கள் இறங்க வேண்டிய இடத்தை தாண்டி வந்துவிட்டதால் தாம்பரத்தில் இருந்து பயணித்ததற்காக 15 ரூபாய்க்கு டிக்கெட் எடுக்கச்சொல்லி கேட்டுள்ளார்.
மாணவிப் பிரியா டிக்கெட் எடுக்கமுடியாது என்று மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தாம்பரத்தில் இறக்கிவிடாமல் இதுவரை அழைத்து வந்தது உன்னுடைய தவறு என கூறி நடத்துனரிடம் அந்த பெண் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் நடத்துனரை அந்த மாணவி ஒருமையில் பேசியதாகவும், பதிலுக்கு நடத்துனரும் அந்த மாணவியை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.
ஒருகட்டத்தில் அந்த பெண் நான் யார் தெரியுமா வழக்கறிஞர் என சொல்லிக்கொண்டு நடத்துனர் மணியை கண்ணத்தில் பளார் பளாரென இரண்டு அடி அடித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து நடத்துனர் மணி மற்றும் சட்டக்கல்லூரி மாணவி ப்ரியா இருவரும் ஒருவர் மீது ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இருதரப்பினர் புகாரையும் ஏற்றுக்கொண்ட கிளாம்பாக்கம் போலீசார் இருதரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கு இடையே நடத்துனர் செருப்பால் தாக்கப்பட்டதாக கூறி பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் தங்கள் பேருந்துகளை நிறுத்திவிட்டு திடீர் போராட்டத்தில் குதித்ததால் தங்கள் பகுதிகளுக்கு செல்ல மாநகர பேருந்து கிடைக்காமல் சில மணி நேரம் பயணிகளும் அவதிக்கு உள்ளாயினர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu