முகப்பு
உச்ச நீதிமன்றத்தின் 53-வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் சூர்யகாந்த்
Nov 24, 2025 03:37 PM
32
உச்ச நீதிமன்றத்தின் 53-வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் சூர்யகாந்த்
உச்ச நீதிமன்றத்தின் 53-வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் பதவியேற்றுக் கொண்டார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
நாட்டின் தலைமை நீதிபதியாக பதவி ஏற்ற பிறகு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கைகுலுக்கி வாழ்த்து பெற்றார் சூர்யகாந்த். தொடர்ந்து புதிய தலைமை நீதிபதிக்கு தற்போது ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் ஆரத் தழுவி வாழ்த்து தெரிவித்தார். மேலும் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தனது பெற்றோர் உள்ளிட்டோரிடம் காலில் விழுந்து ஆசி பெற்றுக் கொண்டார்.
2027 ஆம் ஆண்டு பிப்ரவரி 9 ஆம் தேதி வரை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் பதவியில் இருப்பார். பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாகவும், ஹிமாச்சலப் பிரதேச உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாகவும் அவர் பதவி வகித்துள்ளார். 2019 ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு நீக்கம், பீகாரில் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் செல்லும் போன்ற பல முக்கிய தீர்ப்புகளை சூர்யகாந்த் வழங்கி இருக்கிறார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu