ஜனநாயகன் வழக்கு - படத்தயாரிப்பு நிறுவனம் வாபஸ்
Feb 10, 2026
தமிழ்நாடு
டெல்டா விவசாயிகளின் கண்ணீரை துடைக்கத் துணை நிற்காமல், நீலிக்கண்ணீர் வடித்த பச்சைத் துரோகிகள் எங்கே? -முதலமைச்சர் கேள்வி
Nov 24, 2025 12:14 PM
15
டெல்டா விவசாயிகளின் கண்ணீரை துடைக்கத் துணை நிற்காமல், நீலிக்கண்ணீர் வடித்த பச்சைத் துரோகிகள் எங்கே? -முதலமைச்சர் கேள்வி
டெல்டா விவசாயிகளின் கண்ணீரை துடைக்கத் துணை நிற்காமல், நீலிக்கண்ணீர் வடித்த பச்சைத் துரோகிகள் எங்கே? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருக்கிறார்...
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், கொள்முதல் நிலையங்களை அதிகரித்த போதும், அதிகப்படியான மழைப்பொழிவால், நெல்மணிகள் ஈரமானதாக குறிப்பிட்டுள்ளார்.
நெல்லின் ஈரப்பதத்தை 22 விழுக்காடாக உயர்த்த வேண்டும் என்ற தமது கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளதால் விவசாயிகள் போராடி வருவதாக கூறியுள்ளார். அவர்களுக்கு துணை நிற்க யாரிடம் அனுமதி பெற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி காத்திருக்கிறார்? என்று முதலமைச்சர் வினவி இருக்கிறார்.
கூட்டணி அமைத்தால், அதனால் தமிழ்நாட்டுக்கு நன்மைகளைப் பெற்றுத்தர வேண்டும், சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும் தான் கூட்டணி என்று பழனிசாமி நினைக்கிறாரா என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu