தமிழ்நாடு
டெல்டா விவசாயிகளை தாம் நேரில் சென்று சந்தித்து நிலையில் முதலமைச்சர் ஏன் நேரில் செல்லவில்லை? - எடப்பாடி பழனிசாமி கேள்வி
Nov 24, 2025 11:44 AM
22
டெல்டா விவசாயிகளை தாம் நேரில் சென்று சந்தித்து நிலையில் முதலமைச்சர் ஏன் நேரில் செல்லவில்லை? - எடப்பாடி பழனிசாமி கேள்வி
கனமழையால் பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளை தாம் நேரில் சென்று சந்தித்து நிலையில் முதலமைச்சர் ஏன் நேரில் செல்லவில்லை என்று அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் நிரந்தர டி.ஜி.பி. நியமனம் செய்யாததற்கு என்ன காரணம் என்பதை தி.மு.க அரசு தெரிவிக்க வேண்டும் என்றார்.
நெல்கொள்முதலில் ஈரபதத்தை அதிகரிக்க மத்திய அரசு மறுக்க என்ன காரணம் என்பதையும் தமிழக அரசு சொல்ல வேண்டுமென்ற அவர், மத்திய அரசு எதற்காக மறுப்பு தெரிவித்துள்ளது என்பதை சொன்னால் தான் அதற்கு பதில் சொல்ல முடியுமென்றார்.
39 நாடாளுமன்ற தொகுதிகளில் வென்றதாக மார் தட்டுபவர்கள்,விவசாயிகளுக்காக நாடாளுமன்றத்தில் ஏன் குரல் எழுப்புவதில்லை? என்று அவர் கேள்வி எழுப்பினார். தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டும் போதாது, மக்கள் நலனுக்காக செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu