முகப்பு
காதல் மனைவி தலையை வெட்டிய 'சைக்கோ' கணவன்..! மலைக்கோவிலில் திகில்..! திருமணமான 4 மாதத்தில் சோகம்
Nov 18, 2025 04:46 PM
340
காதல் மனைவி தலையை வெட்டிய 'சைக்கோ' கணவன்..! மலைக்கோவிலில் திகில்..!
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சிலாவட்டம் பகுதியை சேர்ந்தவர் 24 வயது சரண். இவர் அந்த பகுதியில் ரவுடியாக வலம் வந்த நிலையில், சரண் மீது மதுராந்தகம் சுற்று வட்டார காவல் நிலையங்களில் கொலை வழக்கு, அடிதடி வழக்கு உட்பட ஏராளமான குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்துள்ளன.
இதனை தொடர்ந்து சரணும், அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த 19 வயது மதுமிதா என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.
இவர்களின் காதல் விவகாரத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
மேலும் ஒரத்தி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து இருவரும் தங்கி வந்துள்ளனர்.
திருமணம் ஆன சில நாட்களிலேயே மதுமிதா, தனது ஆண் நண்பர் ஒருவரோடு செல்போனில் மணிக்கணக்காக பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சரண் இனி அவனுடன் நீ பேசவே கூடாது என கண்டித்ததாக சொல்லப்படுகிறது.
பின்னர் திருமணமான இரண்டு மாதத்திலேயே சரண் அதே பகுதியை சேர்ந்த நபர் ஒருவரின் கைகளை அரிவாளால் வெட்டிய வழக்கில் கைதாகி சிறை சென்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சரண், பிணையில் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.
சிறையில் இருந்து தனது கணவர் வீட்டிற்கு வந்த போதும், மதுமிதா, தனது ஆண்நண்பரோடு போனில் அடிக்கடி பேசி வந்ததாக சொல்லப்படுகிறது. இதனை சரண் கவனித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த திங்கள் கிழமையன்று, சரண், தனது மனைவியிடம் அனந்தமங்கலம் மலைப் பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவிலுக்கு சென்று வரலாம் வா" என கூறி வீட்டில் இருந்து பைக்கில் அழைத்து சென்றுள்ளார்.
இருவரும் மலைக்கோவிலுக்கு சென்று கொண்டிருந்தபோது, முதலில் காளி கோவிலுக்கு சென்றுவிட்டு அதன் பின் ஈஸ்வரன் கோவிலுக்கு செல்லலாம் என சரண், மதுமிதாவை புதர்கள் நிறைந்த பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு ஆட்கள் நடமாட்டம் இல்லாத நிலையில், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், சரண் திடீரென தனது மனைவியின் கழுத்தை அறுத்துள்ளார்.
இதில் மதுமிதா ரத்த வெள்ளத்தில் விழுந்துள்ளார். பின்னர் ஆத்திரம் தீரும் வரை சரண் தனது மனைவியை கத்தியால் வெட்டியதாக சொல்லப்படுகிறது. மதுமிதா துடிதுடித்து உயிரிழந்த நிலையில், இறந்ததை உறுதிப்படுத்திக்கொண்டு, சரண் அங்கிருந்து தப்பித்து, பைக்கில் சிலாவட்டம் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். நடந்ததை அனைத்தையும் சரண், தனது தாயிடம் தெரிவிக்க, அதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது தாய், ஒரத்தி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
பின்னர் ஒரத்தி போலீசார் சரணை கைது செய்து, கொலை செய்த இடத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சரண், இங்கு தான் கொலை செய்ததாக அடையாளம் காண்பித்த நிலையில், இறந்த மதுமிதாவின் உடலை போலீசார் கைப்பற்றி உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சரணிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தனது மனைவி ஆண் நண்பரோடு பேசுவதை அறிந்து ஆத்திரம் அடைந்ததாகவும், அதனால் அவரை கொலை செய்ய ரகசியமாக திட்டமிட்டு, ஆள் நடமாட்டம் இல்லாத மலைக் கோவிலுக்கு அழைத்து சென்று கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்த 19 வயது இளம்பெண், திருமணம் ஆன 4 மாதத்திலேயே கணவனால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu