முகப்பு
மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்.. டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக கைதானவர்கள் தகவல்
Nov 18, 2025 02:19 AM
70
மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்.. டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக கைதானவர்கள் தகவல்
ஹமாஸ் அமைப்பைப் போல் டெல்லியில் ட்ரோன்கள் மூலம் மிகப்பெரிய அளவில் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தும் தாக்குதலை நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்தது தேசிய புலனாய்வு முகமை மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
டெல்லி கார் வெடிப்பில் உயிரிழந்த உமர் உன் நபியுடன் தொடர்பில் இருந்ததாகக் கைது செய்யப்பட்ட அமீர் ரஷீத் அலி மற்றும் டேனிஷ் ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இது தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
2023-ஆம் ஆண்டு இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் ட்ரோன்களைப் பயன்படுத்தி கடுமையான தாக்குதலை தொடுத்தனர்.
அதேபோல், அதிக எடைகொண்ட குண்டுகளை சுமந்து செல்லக்கூடிய பெரிய பேட்டரிகள் மற்றும் கேமராக்கள் பொருத்தப்பட்ட சக்திவாய்ந்த ட்ரோன்கள் மூலம் டெல்லியில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர்.
அதற்காக, சிறிய ட்ரோன்கள் தயாரிப்பில் அனுபவம் கொண்ட டேனிஷ், ட்ரோன்களை மாற்றி அமைக்க தொழில்நுட்ப உதவியை வழங்கியதாகவும் கூறப்படுகிறது. செங்கோட்டை கார் வெடிப்பு சம்பவத்துக்கு முன்னரே, இத்தாக்குதலை நடத்த அவர்கள் திட்டமிட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu