BIG STORIES
கூலிப்படைக்கு ஆள் காட்டி இளைஞரை காரில் கடத்தி கொன்று வீசிய கொடூரம்..! பட்டப்பகலில் நடந்த கொடுமை
Nov 18, 2025 01:30 AM
276
கூலிப்படைக்கு ஆள் காட்டி இளைஞரை காரில் கடத்தி கொன்று வீசிய கொடூரம்..! பட்டப்பகலில் நடந்த கொடுமை
கிருஷ்ணகிரி அருகே பழிக்கு பழி கொலை முயற்சி சம்பவத்துக்கு, ஆள்காட்டியாக இருந்ததாக கூறி இளைஞரை கடத்திச்சென்று அடித்தே கொலை செய்து ஏரியில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஓசூர் நியூ ASTC அட்கோ பகுதியில் சுனில் என்பவருக்கு சொந்தமான டீக்கடை ஒன்றில் வேலை செய்து வந்த கோகுல்ராஜ் என்பவரை கடந்த 16ந்தேதி மர்ம கும்பல் ஒன்று காரில் கடத்திச்சென்றதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் அவரை கண்டுபிடிக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளாத நிலையில் 17ந்தேதி கோகுல்ராஜின் சடலம் வேப்பனப்பள்ளி அருகே ஆந்திர எல்லையில் உள்ள ஏரியில், காயங்களுடன் மிதந்தது.
போலீஸ் விசாரணையில் கொலைக்கு பழிவாங்க ஏவப்பட்ட கூலிப்படைக்கு ஆள்காட்டியாக செயல்பட்டதால் கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அடுத்த வேலாங்குளம் பகுதியை சேர்ந்தவர் நெய் வியாபாரி அழகுராஜா . அதே பகுதியை சேர்ந்த பிளம்பர் வேலை செய்யும் முருகேசனுக்கும் , அழகுராஜாவுக்கும் முன்விரோதம் இருந்து வந்த நிலையில், கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை மறைமலை நகர் பகுதியில் வைத்து அழகு ராஜா கொலை செய்யப்பட்டார். அழகுராஜாவின் சடலத்தை காரில் எடுத்து சென்று தமிழக கர்நாடக எல்லையில் ஓசூர் அருகே பள்ளூர் (Ballur) என்ற பகுதியில் வீசி சென்றதாக போலீசார் முருகேசன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்
இந்த நிலையில் கொலை நடந்த இடம் சென்னை மறைமலை நகர் பகுதி என்பதால் அத்திப்பள்ளியில் இருந்த வழக்கு மறைமலை நகர் காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் ஜெயிலில் இருந்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஜாமினில் வெளியே வந்த முருகேஷன் தனியார் கம்பெனி ஒன்றில் பிளம்பர் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 26ம் தேதி இரவு 10 மணியளவில் ஆதித்யா லே அவுட் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த முருகேசனை, கையில் அருவாளுடன் பைக்கில் வந்த இருவர் மடக்கினர். காரின் பின்பக்க கண்ணாடியை உடைத்தனர். அவரது காருக்கு முன்பாக வேறொரு வெள்ளை நிற கார் வந்து மறித்து நின்றது. அதிர்ச்சியடைந்த முருகேசன், காரில் இருந்து இறங்காமல் காரை திருப்பிக் கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்று நல்லூர் காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.
நல்லூர் போலீசார் நடத்திய விசாரணையில் அழகுராஜா கொலைக்கு பழிக்குபழியாக முருகேசனை தீர்த்து கட்ட அழகுராஜாவின் அண்ணன் ராஜசேகர் திட்டமிட்டு கூலிப்படையை ஏவியது தெரியவந்தது. தாக்குதலில் ஈடுபட்ட வேல்பாண்டி என்பவரை கைது செய்து விசாரித்த போது சுனில் என்பவருக்கு சொந்தமான டீக்கடையில் வேலை பார்த்து வந்த கோகுல்ராஜ் என்பவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் தான் முருகேசன் இருக்கும் இடத்தை கண்டறிந்து அவரை பின் தொடர்ந்து சென்று கொலை செய்ய முயன்றதாக தெரிவித்தார்.
இதனை அறிந்து ஆத்திரமடைந்த முருகேசன் கடந்த 16ம் தேதி சுனிலின் டீக்கடைக்கு சென்று, அங்கிருந்த கோகுல்ராஜை கழுத்தை பிடித்து இழுத்து காரில் ஏற்றி சென்று அடித்து உதைத்து கொலை செய்து ஏரியில் வீசியது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். கொலையாளிகளை போலீசார் தேடிவருகின்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu