BIG STORIES
தபால் நிலைய பார்சலை திருடி தாய்க்கு சேலை ‘கிப்ட்’ .. சீரியல் கொள்ளையன் கைது..! ஒரே இரவில் தொடர் கைவரிசை
Nov 16, 2025 02:11 AM
235
தபால் நிலைய பார்சலை திருடி தாய்க்கு சேலை ‘கிப்ட்’ .. சீரியல் கொள்ளையன் கைது..!
தாம்பரம் அருகே தபால் நிலையத்தில் பார்சலை களவாடி அதில் இருந்த புடவையை தாய்க்கு பரிசாக கொடுத்த சீரியல் கொள்ளையன் சூர்யாவை போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கைது செய்தனர். ஒரே இரவில் அடுத்தடுத்து 6 இடங்களில் கைவரிசை காட்டிய களவாணிகள் சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..
ஒரே இரவில் ஆறு இடங்களில் திருடி சிசிடிவி காட்சிகளால் போலீசில் சிக்கிய கொள்ளையன் ஆலப்பாக்கம் சூர்யா இவர் தான்..!
கடந்த வாரம் தாம்பரம் அடுத்த சேலையூர் மாடம்பாக்கம் பகுதியில் ஒரே இரவில் தபால் நிலையம் , மளிகை கடை , போட்டோ ஸ்டுடியோ அடகு கடை மற்றும் வீடுகளில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது.
இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை சேகரித்த சேலையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆலப்பக்கம் சூர்யா வழக்கு ஒன்றில் கைதாகி சிறைக்கு சென்ற போது அங்கிருந்த கண்ணகி நகர் சந்தோஷ் உடன் பழகியதாகவும், இருவரும் சிறையில் இருந்து வெளியில் வந்ததும் குடித்து ஜாலியாக இருப்பதற்கு பணம் தேவைபட்டதால் அடுத்தடுத்து கைவரிசை காட்டியது தெரியவந்தது.
அவர்கள் இருவரையும் பிடித்து விசாரித்த போது மொத்தம் 6 பேர் சேர்ந்து ஒரே இரவில் இந்த கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றியதை ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
முதலில் திருப்போரூர் பகுதியில் கேடிஎம் மோட்டார் சைக்கிளை திருடிய கொள்ளையர்கள், அங்கிருந்து பொன்மார் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் ஊழியரை தாக்கி பணம் பறித்து உள்ளனர் . அங்கிருந்து மாடம்பாக்கம் பகுதியில் கொள்ளையில் ஈடுபட முயன்ற போது மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் இல்லாமல் நின்றதால் அதை நிறுத்திவிட்டு மற்றொரு ஆர் 15 மோட்டார் சைக்கிளை திருடிச்சென்றனர்.
ஒரு வீட்டுக்குள் சுற்றுசுவரை ஏறி குதித்து உள்ளே சென்ற போது அந்த வீட்டின் உரிமையாளர் காற்றுக்காக கதவை திறந்து வைத்து விட்டு தூங்கிக் கொண்டிருந்ததாகவும், வீட்டுக்குள் இருந்து கார் சாவியை எடுத்து வந்து அதனை களவாடியதாக கொள்ளையர்கள் தெரிவித்துள்ளனர்.
அடகுகடைக்குள் இருந்து சில நகைகளையும், மளிகை கடைக்குள் புகுந்து 25 ஆயிரம் ரூபாய் பணத்தையும் திருடியவர்கள், தபால் நிலையத்துக்குள் புகுந்து இரு பார்சல்களை திருடி வந்ததாக தெரிவித்தனர். அதில் ஒரு பார்சலில் சேலை இருந்ததால் அதனை தனது அம்மாவுக்கு கிப்டாக கொடுத்ததாக கொள்ளையன் சூர்யா தெரிவித்தான் . மற்றொரு பார்சலில் பேண்டு சட்டை சார்ட் இருந்ததால் அதனை அணிந்து கொண்டதாக தெரிவித்துள்ளான். மொத்தம் இரண்டு மோட்டார் சைக்கிள் , ஒரு காருடன் தப்பிய கொள்ளையர்கள் கொள்ளையடித்த நகை பணத்தை பிரித்துக் கொண்டு இசிஆர் பகுதியில் அறை எடுத்து மது அருந்தி ஜாலியாக செலவு செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக சேலையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மதுரவாயில் ஆலப்பாக்கத்தை சேர்ந்த சூர்யா வயது 19 என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்
இந்த தொடர் கொள்ளையில் கண்ணகி நகர் சந்தோஷை அங்குள்ள போலீசாரும், தாளம்பூர் காவல் நிலையத்தில் நான்கு பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்
ஏற்கனவே பல வழக்குகள் உள்ள கொள்ளையர்கள் இதுபோல கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு அதில் வரும் பணத்தில்
உல்லாசமாக ஊர் சுற்றி விட்டு போலீசில் சிக்கி சிறைக்கு சென்று விட்டு மீண்டும் சிறையில் இருந்து திரும்பியதும் பழையபடி கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவது வழக்கம் என்று போலீசார் தெரிவித்தனர்
பாலிமர் செய்திகளுக்காக தாம்பரம் செய்தியாளர் வசந்தன்
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu