தமிழ்நாடு
மகனை ஆணவக் கொலை செய்த தந்தைக்கு இரட்டை ஆயுள் தண்டனை
Nov 15, 2025 01:58 AM
109
தந்தைக்கு இரட்டை ஆயுள் தண்டனை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே மாற்று சமூகப் பெண்ணை திருமணம் செய்த மகன் உள்பட இருவரை கொலை செய்த தந்தைக்கு இரட்டை ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.
அருணபதி கிராமத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மகன் சுபாஷ் மாற்று சமூகத்தைச் சேர்ந்த அனுசுயா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதற்கு தண்டபாணி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 2023ம் ஆண்டு தனது கிராமமான அருணபதிக்கு தம்பதியினரை வரவழைத்த தண்டபாணி இரவில் உறங்கிக் கொண்டிருந்த தனது மகன் சுபாஷையும், அதனைத் தடுக்க வந்த சுபாஷின் பாட்டி கண்ணம்மாள் என்பவரையும் வெட்டிக் கொலை செய்தார். இந்த வழக்கில் தண்டபாணிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu