அதிமுக - பாஜக கூட்டணியை பார்த்து பயம் - இ.பி.எஸ்
Jul 23, 2025
முகப்பு
வசமாய் சிக்கிய மேக்கப் ராணி..தோண்ட தோண்ட வெளிவரும் பகீரங்க பிண்ணனி!!!
Jun 20, 2025 08:13 AM
238
ஆன்லைன் செயலி மூலம் இளைஞர்கள் மற்றும் நல்ல வசதி படைத்த குடும்பஸ்தர்களை குறி வைத்து பண மோசடி செய்த மேக்கப் ராணி, வசமாய் சிக்கியது எப்படி விரிவாக பார்க்கலாம்...
சென்னையைச் சேர்ந்தவர் தொழிலதிபர் அப்துல் பயாஸ். இவர் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில், ஓஎம்ஆர் சாலையில் உடல் எடையை குறைத்து அழகுப்படுத்தும் அழகு கலை நிறுவனத்தில் பணி புரிவதாக ஆரிஃபா என்ற பெண் தனக்கு அறிமுகமானதாக தெரிவித்துள்ளார். அவர் மூலமாக காமேஷ் என்ற மேக்கப் கலைஞரும் அறிமுகமாகியுள்ளார்.
இவர் சினிமாவில் பல பிரபல நடிகைகளுக்கு மேக்கப் செய்து வருவதாகவும், தனது நண்பர் கூட நடிகர் விஜய் நடித்த லியோ படத்தில் மேக்கப் ஆர்டிஸ்டாக இருந்தார் எனவும், இப்படி பல நடிகர்களுடன் நெருக்கமாக இருப்பதுப்போன்ற புகைப்படங்களை காட்டி, அப்துல் பயாஸை நம்ப வைத்ததுள்ளனர். மேலும் புதிதாக எடுக்கவுள்ள படத்தில் நாயகனாக திரைத்துறையில் அறிமுகப்படுத்துவதாக ஆசை வார்த்தை கூறியதாக கூறப்படுகிறது.
நடிகராக சினிமாவில் நடிக்க வேண்டும் என்றால் அதற்கு திரைப்பட நிறுவன அலுவலகம் துவங்க வேண்டும் எனக் கூறி பயாஸிடமிருந்து, ஒரு லட்ச ரூபாய் பணத்தை முதற்கட்டமாக ஆரிஃபா வாங்கியதாக தெரிகிறது. அதைத்தொடர்ந்து சினிமா துறைக்கு ஏற்றவாறு பயாஸை அழகுப்படுத்தி ஒரு நடிகராக மாற்றுவதாக கூறி கூடுதல் பணத்தை பெற்றதாகவும் கூறப்படுகிறது.
இப்படி நடிக்க வைப்பதற்காகவும், அலுவலகத்திற்காகவும் என சுமார் 7 லட்சம் ரூபாய் வரை பல்வேறு தவணைகளில் ஆரிஃபா மற்றும் காமேஷிடம் அப்துல் பயாஸ் கொடுத்து இருக்கிறார். அதையடுத்து சில நாட்களுக்குப் பிறகு, படம் எடுப்பது தொடர்பாக அலுவலகத்திற்கு வராமல், அவர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த பயாஸ் அங்கு சென்று பார்த்தபோது, அவர்கள் அலுவலகத்தை காலி செய்துவிட்டு தலைமறைவானதை அறிந்து, அதிர்ச்சியடைந்துள்ளார்.. அதைத்தொடர்ந்து பயாஸ் விசாரித்த போது தான், ஆரிஃபா மற்றும் காமேஷ் ஆகிய இருவரும் ஆசை வார்த்தை காட்டி தன்னை நம்ப வைத்து, பணத்தை ஏமாற்றியது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து போலீஸீல் புகார் அளித்த அப்துல் ஃபயாஸ், தொடர்ந்து ஆரிஃபா மற்றும் காமேஷ் ஆகிய இருவரும் எங்கெங்கெல்லாம் செல்வார்கள் என்பதை அறிந்து பின் தொடர்ந்து உள்ளார். ஒரு கட்டத்தில் அண்ணா நகர் பகுதியில், அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை வைத்து அப்துல் பயாஸ் அவர்களைத் தேடிச் சென்றுள்ளார்.
காரில் தேடினால் தப்பித்து விடுவார்கள் என்பதற்காக ராப்பிடோ புக் செய்து ஆரிஃபா மற்றும் காமேஷ் தங்கியிருக்கும் இடத்தை அப்துல் பயாஸ் கண்டுபிடித்து போலீசாரிடம் தகவல் கொடுத்துள்ளார். அதையடுத்து உடனடியாக அங்கு வந்த கோட்டூர்புரம் போலீசார் இருவரையும் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. விசாரணையில் ஆரிஃபா ஒரு மோசடி ராணி என்பது போலீசாருக்கு தெரிய வந்தது. எட்டாம் வகுப்பு மட்டும் படித்துவிட்டு 3 குழந்தைக்கு தாயான அவர் கணவனுடன் வசித்து வந்துள்ளார். இருப்பினும் தன்னை பொறியியல் பட்டதாரி எனக் கூறிக்கொண்டு, மாடர்ன் டிரெஸ் அணிந்து, அழகு கலை நிபுணர் என பல நிறுவனங்களில் போலி சான்றிதழ் கொடுத்து பணிபுரிந்ததும் தெரியவந்துள்ளது.
இதேபோன்று அண்ணா நகரில் உள்ள தனியார் அழகு கலை நிறுவனத்தில் ஏமாற்றி பணியில் இருந்த போது தான் போலீசாரிடம் சிக்கி உள்ளார். ஆரிஃபா மற்றும் காமேஷ் இருவரும் சமூக வலைதளங்களை பயன்படுத்தி செயலிகள் மூலமாக இளைஞர்கள் மற்றும் நல்ல வசதி படைத்த குடும்பஸ்தர்களை குறி வைத்து பண மோசடி செய்வது தெரியவந்துள்ளது.
மேலும் தான் வேலை பார்க்கும் அழகு கலை நிறுவனங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் ”டின்டர்” என்ற செயலி மூலமாக டேட்டிங் செல்பவர்களிடம் பல்வேறு ஆசை வார்த்தை கூறி சினிமாவில் நடிக்க வைப்பதாகவும் கூறி பணத்தை ஏமாற்றியதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அவ்வாறு ஏமாந்து அவர்கள் பணத்தை திருப்பி கேட்டால் அவர்களிடம் உல்லாசமாக இருந்துவிட்டு அதை வீடியோவாக எடுத்து மிரட்டியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதற்கு உடந்தையாக செங்கல்பட்டை சேர்ந்த காமேஷ் மனைவியிடம் இருந்து பிரிந்து, ஆரிஃபாவுடன் சேர்ந்து இதுப் போன்ற மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ”லோகாண்டோ” எனப்படும் செயலி மூலமாக ஓரினச்சேர்க்கையாளரிடம் இது போன்று நாடகமாடி உல்லாசமாக இருந்து வீடியோ எடுத்து மிரட்டியதும் தெரிய வந்துள்ளது.
சென்னையில் வார இறுதி நாட்களில், நட்சத்திர விடுதிகளுக்குச் சென்று பார்ட்டிகளில் கலந்து கொண்டு, அங்கு நட்பாகும் இளைஞர்கள் வசதியான குடும்பஸ்தர்கள் ஆகியோரை மோசடி வலையில் சிக்க வைத்திருப்பதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
தங்களின் மோசடி வலையிலிருந்து தப்பித்தாலும், குடும்பத்தோடு ஒன்றாக வாழ முடியாதபடி பிரித்து விடும் செயலிலும் ஆரிஃபா மற்றும் காமேஸ் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் பல இளைஞர்களும், குடும்பஸ்தர்களும் பயந்து இவர்களிடம் பணத்தை ஏமாந்துள்ளனர்.
குறிப்பாக பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் குடும்பஸ்தர்களை ஏமாற்றி பணம் மோசடி செய்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோசடி ராணி ஆன ஆரிஃபா மீது தொடர்ந்து புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
இவர்களிடம் எத்தனை பேர் ஏமாந்துள்ளார்கள் எவ்வளவு பணம் மோசடி செய்துள்ளார்கள் என்பது குறித்து கோட்டூர்புரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆன்லைன் செயலிகளை பயன்படுத்தி இளைஞர்கள் மற்றும் குடும்பஸ்தார்களிடம், நட்பாக பழகி சினிமா வாய்ப்பு தருவதாக கூறி, உல்லாசமாக இருந்து பின் அவர்களை மிரட்டி பெண் பணம் பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu