RECENT NEWS

பெருநாட்டில் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு

பெருநாட்டில் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு

Mar 07, 2026

பெருநாட்டில் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு

பெருநாட்டில் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு

Mar 07, 2026

முகப்பு

40 உயிர்கள் கேள்விக்குறி ! பஸ்ஸில் சாப்பிட்டபடி டிரைவிங்.. ஓட்டுனரின் அசால்ட் வீடியோ.. “நாங்க எப்பவும் இப்படித்தான்!”

Jun 11, 2025 07:32 AM

258

40 உயிர்கள் கேள்விக்குறி ! பஸ்ஸில் சாப்பிட்டபடி டிரைவிங்.. ஓட்டுனரின் அசால்ட் வீடியோ.. “நாங்க எப்பவும் இப்படித்தான்!”

40 உயிர்கள் கேள்விக்குறி ! பஸ்ஸில் சாப்பிட்டபடி டிரைவிங்.. ஓட்டுனரின் அசால்ட் வீடியோ.. “நாங்க எப்பவும் இப்படித்தான்!”

ஏதோ வீட்டின் ஹாலில் அமர்ந்து, டிவி பார்த்துக்கொண்டே 'நொறுங்கத் தின்றால் நூறு வயது' என்ற பழமொழியை மனதிற்குள் அசைபோட்டபடி, எந்தவித பதட்டமும் இல்லாமல், பேருந்து steering -ஐ கைகளால் பிடிக்காமல், அதன் மீதே சாப்பாட்டை வைத்து சாப்பிட்டபடியே, பேருந்தை இயக்கிய, அலட்சிய டிரைவரின் ஆபத்தான காட்சிதான் இது...

 மதுரையில் இருந்து சென்னைக்கு நூற்றுக்கணக்கான தனியார் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே ஆம்னி பேருந்து நிலையத்திலிருந்து, ஸ்ரீ குமரன் டிராவல்ஸ் பேருந்து, 40 பயணிகளுடன் மதுரையிலிருந்து, சென்னை புறப்பட்டது.

சிறிது தூரம் பேருந்து சென்ற நிலையில், பேருந்து ஓட்டுநர் பேருந்தை இயக்கியவாறு ஸ்டியரிங் கில் வைத்து சாப்பிட துவங்கினார்.

ஆபத்தான முறையில் உணவு சாப்பிட்டுக் கொண்டே பேருந்தை இயக்கிய டிரைவரைப் பார்த்து, அப்பேர்ந்தில் பயணித்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

அப்போது, பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த பயணிகளில் ஒருவர், “சாப்பிட்டுவிட்டு அதன் பின்பு பேருந்தை இயக்கலாமே?” என டிரைவரிடம் கேட்டதற்கு, நேரமில்லாததால் பேருந்தை இயக்கிக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருப்பதாகவும், இது பழக்கப்பட்ட ஒன்றுதான் என்றும் கூற, பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உங்க குடும்பத்துல உள்ளவங்க பயணிக்கும்போது இப்படி அலட்சியமா, ஆபத்தான முறையில பஸ்ஸை ஓட்டுவீங்களா? என பயணிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். பல ஓட்டுநர்கள் பயணிகளின் உயிரைக் காப்பாற்றும் விதமாக, இரவு பகல் பாராமல் கண்விழித்து, கவனமாக பேருந்தை இயக்குகிறார்கள்.

இன்னும் சொல்லப்போனால், பல ஓட்டுநர்கள் தங்களுக்கு நெஞ்சுவலி ஏற்படும்போதுகூட பாதுகாப்பாக ஓரங்கட்டிவிட்டு உயிரிழந்த சோக சம்பவங்கள் எல்லாம் நிகழ்ந்திருக்கிறது. அப்படியிருக்க, பயணிகளின் உயிர்களில் விளையாடும் இப்படிப்பட்ட ஆம்னி பேருந்து டிரைவர்கள் மீதும் உரிமையாளர்கள் மீதும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

திமுக கொடி கட்டிய தறிகெட்ட கார் மோதி கர்ப்பிணி பலியான சோகம்..! விபத்து ஏற்படுத்தியவர் விடுவிப்பு
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies