RECENT NEWS

5 வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்

5 வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்

Mar 14, 2026

5 வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்

5 வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்

Mar 14, 2026

முகப்பு

இவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்; ‘ஆப்பு’ரேஷன் Hydra... போலீஸிடம் வசமாக சிக்கிய..Invisible கில்லாடிகள்!

Jun 04, 2025 10:41 AM

125

இவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்; ‘ஆப்பு’ரேஷன் Hydra... போலீஸிடம் வசமாக சிக்கிய..Invisible கில்லாடிகள்!

உங்க OTP நம்பரை சொல்லுங்க... உங்களுக்கு ஸ்காலர்ஷிப் வந்திருக்கு, உடனே உங்க க்யூ ஆர் கோடை அனுப்புங்க.. என உங்களிடமிருந்து ஏமாற்றிய கும்பல் தமிழ்நாடு போலீஸின்‘ஆப்ரேஷன் Hydra... மூலம் ஆப்புவைத்த பின்னணி குறித்து விவரிக்கிறது, இந்த செய்தி தொகுப்பு...

ஆழ்க்கடலில் வாழும் உயிரினமான Hydra போல் ஊடுருவி, பொதுமக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கும் சைபர் குற்றவாளிகளை பிடிக்க, அமைக்கப்பட்ட ‘ஆப்ரேஷன் ஹைட்ரா’ வில், தனிப்படைகளை அமைத்து தேடிவந்தது, மாநில சைபர் க்ரைம் காவல்துறை.

இதில், திருமண தகவல், கல்வி ஊக்கத்தொகை, ஆன்லைன் முதலீடுகள், வங்கிக் கடன் என டிஜிட்டல் குற்றத்தில் முழுமையாக ஈடுபட்ட கிரிமினல்களை பிடிக்க
அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் உத்தராகண்ட், ஜார்கண்ட், அஸ்சாம், டெல்லி போன்ற பல்வேறு மாநிலங்களுக்கு விரைந்து சென்றனர்.

டிஜிட்டல் பயன்பாட்டால் குறுக்கு வழியில் பல கோடிகளை சுருட்டிய,
உத்தராகண்ட் மாநில ஜாஸ்பூரைச் சேர்ந்த மொஹம்மத் தவூத், மொஹம்மத் வாசீம்,
அதேபோல், ICICI வங்கியின் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி போல் பேசி,
வங்கி கணக்கை புதுபிக்க வேண்டும் எனக்கூறி ஏமாற்றிய
அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த பங்கஜ் குமார், ஹிடேஷ்வர் பிஸ்வாஸ், ஹிட்டு, நிஹார் ரஞ்சன் நாத் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அதாவது, ஒரு பெண் உட்பட 7 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட 7 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், டிஜிட்டல் நிதி ஆதாரங்கள், மோசடிக்காக பயன்படுத்தப்பட்ட வங்கி கணக்குகள், மோசடிக்காக பயன்பட்ட செல்போன்கள், பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதுபோன்ற பல்வேறு மோசடி நடவடிக்கைகளுடன் தொடர்புடைய மொத்தம் 35 வங்கிக் கணக்குகள் மற்றும் 6 மொபைல் போன் எண்கள் பறிமுதல் செய்யப்பட்டு, தடயவியல் சோதனைக்காகவும் அனுப்பப்பட்டுள்ளது.

வஞ்சகத்தை நெஞ்சில் வைத்து, பொய்யாக கொஞ்சி பேசும் ஹைட்ராவை போல் ஊடுருவி இருக்கும் சைபர் கிரிமினல்கள் என்னதான் வளர்ந்தாலும், ஊடுருவினாலும், மாநில சைபர் க்ரைம் போலீசார் மையப் புள்ளியாக செயல்பட்டு, இந்தியா முழுக்க ஒரே நேரத்தில்
7 பேரை கைது செய்த சம்பவம் பாராட்டை பெற்றுள்ளது. இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அதேநேரத்தில், சைபர் குற்றத் தடுப்பு ஹெல்ப்லைன் எண்ணான 1930 க்கு, சைபர் திருடன்களிடம் ஏமாந்தவர்கள், வலியோடும் வேதனையோடும் தொடர்புகொள்ளும்போது, உடனடியாக அட்டெண்ட் செய்து, புகார்களை பதிவு செய்து, நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எதிரொலிக்கிறது.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

என் ஜாய்... எஞ்சாமீன்னுட்டு ஏன் சாமி சண்டை போடுறீங்க ?ச.நா. - அறிவு பங்கு பிரிக்கலையாம்..! 5 வருடமாக ஓயாத ராயல்டி சண்டை
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies