RECENT NEWS

கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல - டென்மார்க் பிரதமர் திட்டவட்டம்

கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல - டென்மார்க் பிரதமர் திட்டவட்டம்

Feb 15, 2026

கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல - டென்மார்க் பிரதமர் திட்டவட்டம்

கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல - டென்மார்க் பிரதமர் திட்டவட்டம்

Feb 15, 2026

BIG STORIES

தி. நகர் ஓட்டலில் வாடகை காதலிகள் விடிய விடிய ஆட்டம்..! இளைஞர்களை சீரழிக்கும் டோக்கன்

Apr 09, 2025 05:55 AM

5172

தி. நகர் ஓட்டலில் வாடகை காதலிகள் விடிய விடிய ஆட்டம்..! இளைஞர்களை சீரழிக்கும் டோக்கன்

தி. நகர் ஓட்டலில் வாடகை காதலிகள் விடிய விடிய ஆட்டம்..! இளைஞர்களை சீரழிக்கும் டோக்கன்

ஒரு காலத்தில் சென்னை நட்சித்திர ஓட்டல்களில் கொடிகட்டி பறந்த கேபரே நடனம் தடை செய்யப்பட்டது, கலாச்சார நடனம் என்ற பெயரில் மதுபான பார்களில் நடந்த ஆபாச குழு நடனங்களும் தடை செய்யப்பட்டது. இந்த நிலையில் சென்னை தியாகராய நகரில் உள்ள பென்னின்சூலா ஓட்டலில் உள்ள சட்டவிரோத மதுபாரில் வாடகை காதலிகள் டோக்கன் முறையில் நடனமாடும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது

வாடகை சைக்கிள் ... வாடகை பை.. ஏன் வாடகை கார் கூட பார்த்திருக்கிறோம் அதென்ன வாடகை காதலிகள்..? விரிவாக பார்க்கலாம் இந்த செய்தித்தொகுப்பில்..

உள்ளத்தால் கவரப்பட்டு ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் விரும்புவது காதல் என்றும் அதில் இணக்காமாக இருக்கின்ற ஆண் காதலன் என்றும் பெண் காதலி என்றும் சமூகத்தால் அழைக்கப்படுகின்றனர். ஆனால் பாரில் வழங்கப்படும் டோக்கன் பணத்துக்காக யாரென்றே தெரியாத ஆணுடன் சில நிமிடங்கள் காதலியாக வாழ்ந்து விட்டு போகிறவர்கள் தான் இந்த வாடகை காதலிகள் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

சென்னை தியாகராய நகர் ஜி.என் செட்டி சாலையில் உள்ள பென்னின்சூலா ஓட்டலில் உள்ள மதுபான பாரின் உள்பக்கம், அனுமதியின்றி ரகசியமாக டான்ஸ் பார் ஒன்று செயல்பட்டு வருவதாக கூறப்படுகின்றது. மனமகிழ் மன்றம் என்ற பெயரில் அனுமதி பெற்றுள்ள இந்த பார் தினமும் இரவு 7;30 மணிக்கு செயல்பட தொடங்குகின்றது.

இந்த டான்ஸ் பாருக்குள் செல்வதற்கு நுழைவுக் கட்டணமாக 1000 ரூபாய் வசூலிக்கப்படுகின்றது. உள்ளே சென்றதும் அங்கு தயாராக உள்ள வாடகை காதலிகளை டோக்கன் பெற்று அழைத்துச்சென்று ஜோடியாக ஆட்டம் போடலாம் என்கின்றனர். ஒரு டோக்கன் 200 ரூபாய் என அந்த பெண்களுடன் ஆட்டம் போடுவதற்காக அங்கு வரும் இளைஞர்களும், உல்லாச மதுப்பிரியர்களும் ஆயிரக்கணக்கில் பணத்தை கொட்டி டோக்கனை கொடுத்து அந்த பெண்களை சில மணி நேரத்துக்கு வாடகைக்கு காதலிகளாக எடுத்துக் கொண்டு இருளோடு இருளாக கெட்ட ஆட்டம் போடுகின்றனர்

அண்மையில் காசி டாக்கீஸ் அருகே இது போன்று நடத்தப்பட்ட டான்ஸ் பாரில் ரெய்டு நடத்தப்பட்டது. அங்கு பணம் கொடுத்து டம்மி ரூபாய் நோட்டுக்களை பெற்று ஆட்டம் போட்டதாகவும், இதனால் டம்மி ரூபாய் நோட்டுக்கு பதில் இங்கு டோக்கன் வழங்கப்படுவதாக கூறப்படுகின்றது. வாடகை காதலிகள் ஒரு டோக்கனுக்கு அதிகப்படியாக ஒரு பாடலுக்கு மட்டுமே ஆடுகின்றனர், தொடர்ந்து அவர்கள் தங்களுடன் ஆடவேண்டு மென்றால் அடுத்தடுத்து டோக்கனை அந்த பெண் களுக்கு கொடுக்க வேண்டும் எனவும் கூறப்படுகின்றது.

வெளிப்பார்வைக்கு ஜோடியாக வந்து பப்பில் மது அருந்தி அவர்கள் ஆடிச்செல்வது போல இருக்கும், ஆனால் உண்மையில் இங்கு ஆடும் பெண்கள் தங்கள் வயிற்றுப்பிழைப்புக்காக யாரென்றே தெரியாத ஆண்களுக்கு சில மணி நேரம் வாடகை காதலிகளாக இருந்து அந்த இருட்டுக்குள் தங்கள் பணக்கஷ்டத்தை போக்கிக் கொள்கின்றனர்.

இந்த சட்ட விரோத வாடகை காதலிகள் ஆட்டம் இரவு 10 மணிக்கு மேல் உச்ச கட்டத்தை எட்டும் என்றும், நள்ளிரவு 12: 30 மணி வரை டோக்கனை அள்ளி வீசி எந்த ஒரு இடையூறும் இன்றி தொடர்வதாகவும் கூறப்படுகின்றது. அதன் பின்னர் அதில் விருப்பம் உள்ள பெண்களை தவறான செயல்களுக்கு சிலர் அறைகளுக்கு அழைத்துசெல்வதாக , இந்த டான்ஸ் பாரில் மது அருந்திய வாடிக்கையாளர் ஒருவர் தெரிவித்தார்.

இந்த டான்ஸ் பாரை அஜீத் என்பவர் நடத்தி வருவதாக கூறப்படும் நிலையில் இது குறித்து காவல்துறையில் ஆதாரத்துடன் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று புகார் அளித்தவர் தெரிவித்தார்.

அதே நேரத்தில் சென்னையில் கடந்த காலங்களில் பல்வேறு இடங்களில் நடந்த இது போன்ற டான்ஸ் பார்களை காவல்துறையினர் இழுத்து மூடி நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த குற்றச்சாட்டு குறித்து ஓட்டலுக்கே நேரடியாக சென்று விசாரித்த போது, தங்கள் பாரில் டி.ஜே மியூசிக் மட்டும் ஏற்பாடு செய்துள்ளதாகவும், இங்கு நடனமாடும் பெண்களுக்கும் தங்களுக்கு சம்பதமில்லை என்று தெரிவித்தனர், ஜோடியாக வருபவர்கள் மது அருந்தி ஆடிச்செல்வதாகவும், தங்களிடம் எப்.எல்.2 உரிமம் இருப்பதாகவும் தெரிவித்தனர்

எப்.எல்.2 உரிமம் இருந்தாலும் டான்ஸ் பார் நடத்த அனுமதி இல்லை என்கின்றனர் சட்ட நிபுணர்கள், இளைஞர்களை சீரழிக்கும் விபரீத செயல்களை வீடியோ ஆதரத்துடன் புகார்கள் அளித்தும் தேனாம்பேட்டை போலீசார் நடவடிக்கை எடுக்காமல் மவுனம் காப்பது ஏன் ? என்ற கேள்விக்கு தான் கடைசிவரை விடை கிடைக்கவில்லை.

ஏற்கனவே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் வறுமையில் இருக்கின்ற பெண்களை காண்டிராக்ட் அடிப்படையில் அழைத்து வந்து, அவர்களை மதுப்பிரியர்களுக்கு வாடகைக்கு அனுப்பும் சமூக விரோத செயலை காவல் துறையினர் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் ஆதங்கமாக உள்ளது. மதுவை நாடி... மாதுவை தேடி பாருக்குள் சட்ட விரோதமாக ஆட்டம் போட்டாலும் குற்றம் கேடு தரும்..!

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

"10 நிமிடங்கள் கொடுங்கள்".. உச்ச நீதிமன்றத்தில் தனி ஆளாக வாதாடி வென்ற +2 மாணவன்..! வியந்து பாராட்டிய நீதிபதி..!
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies