''இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது தொடர்பாக தேர்தல் அலுவலர் தான் முடிவெடுப்பார்..'' - தேர்தல் ஆணையம்..!

இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது தொடர்பாக தேர்தல் அலுவலர் தான் முடிவெடுப்பார் என்றும் சின்னம் கோரி எந்த மனுவும் தங்களிடம் தாக்கல் செய்யப்படவில்லை என்றும் தேர்தல் ஆணையம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க, தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவிற்கு இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், ஒரு கட்சியின் செயல்பாடுகளை கண்காணிப்பதோ, முறைப்படுத்துவதோ தங்களின் பணி அல்ல என்றும், வேட்புமனுவை ஏற்பது, நிராகரிப்பது தொடர்பாக சம்மந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி முடிவு செய்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments