தமிழ்நாடு
நடுவுல கொஞ்சம்... வருங்கால முதல்வரே கோஷம்.. திமுக பெண் பிரமுகர் ஷாக்..! நடு வழியில் நின்ற தங்கத்தேர்..
May 28, 2025 11:12 AM
367
நடுவுல கொஞ்சம்... வருங்கால முதல்வரே கோஷம்.. திமுக பெண் பிரமுகர் ஷாக்..! நடு வழியில் நின்ற தங்கத்தேர்..
திருத்தணி முருகன் கோவிலில் தங்கத்தேர் இழுத்துச் சென்ற அதிமுகவினர், எடப்பாடி பழனிச்சாமியை வாழ்த்தி கோஷம் போட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக பெண் பிரமுகர் தங்க தேரை நடுவழியில் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பிறந்த நாளை முன்னிட்டு, மதுரையை சேர்ந்த மாநில அதிமுக மருத்துவ அணி இணை செயலாளர் டாக்டர் சரவணன் ஏற்பாட்டில் திருத்தணி முருகன் கோவிலில் தங்கத்தேர் இழுக்கப்பட்டது.
இதில் அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் காயத்ரி ரகுராம் என 50க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டு தங்க தேரை இழுத்து வந்தனர்
அப்போது திருவள்ளூர் திமுக நகர செயலாளர் ரவிச்சந்திரன் அவரது மனைவி செல்வி உள்ளிட்ட திமுகவினரும் பணம் கட்டி தங்கத்தேர் இழுக்க வந்திருந்தனர்
தங்கத்தேர் இழுத்துக் கொண்டு இருந்த அதிமுகவினர் நாளைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்க என்று அதிமுகவிற்கு ஆதரவாக கோயில் வளாகத்தில் கோஷம் எழுப்பினார்கள்
இதனைக் கண்டு காண்டான திமுக நகர செயலாளர் மனைவி செல்வி ,தங்கத் தேரை இழுத்துக் கொண்டு இருந்த
அதிமுகவினரை தடுத்து நிறுத்தி "எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் என்றால் மற்றவர்கள் எல்லாம் யாருடா முட்டாள் !!! முட்டாள்" !!! என்று அதிமுகவினரை கடுமையாக வசைப்பாடினார்
மேலும் உங்களுக்கு மட்டும் தான் கோயில்ல தங்கத்தேர் இழுக்க வந்தீங்களா ..?
கோவிலில் அரசியல் செய்யாதீங்க... கோயிலில் அரசியல் கட்சி தலைவர் படத்தை வைத்துக் கொண்டு இப்படி அரசியல் செய்கிறீர்களே ? என்று திட்டினார்
இதை அடுத்து தங்கத் தேரை இழுத்துக் கொண்டு இருந்த அதிமுகவினருக்கும், திமுகவினருக்கும் கடும் வாக்குவாதம் நடந்தது.
இதனை வீடியோ எடுத்துக் கொண்ட செய்தியாளர்களை அதிமுகவினர் தடுக்க முற்பட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் தொடர்ந்து தங்கத்தேர் இழுக்காமல் அதிமுகவினர் அந்த பகுதியில் இருந்து நழுவிச் சென்றனர்
பின்னர் திமுக நகர செயலாளர் ரவிச்சந்திரன் அவரது மனைவி செல்வி திமுக ஆதரவாளர்கள் அனைவரும் சேர்ந்து தங்கத்தேரை தொடர்ந்து இழுத்துச் சென்றனர்.
கோவிலுக்குள்ளும் இரு தரப்பினர் அரசியல் காரணங்களுக்காக மோதிக்கொண்ட சம்பவம் அங்கு பரபரப்பு ஏற்படுத்தியது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
காதல் மனைவியை பிரிந்த இளைஞர் கொடூரமாக கொலை..!
Jun 22, 2025
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu