BIG STORIES
60 வயதில் 9வது முறையாக தந்தையான போரிஸ் ஜான்சன்
May 28, 2025 07:29 AM
650
60 வயதில் 9வது முறையாக தந்தையான போரிஸ் ஜான்சன்
இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், தனது 9வது குழந்தைக்குத் தந்தையாகியிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
போரிஸ் ஜான்சன், இங்கிலாந்து பிரதமராக இருந்தபோது கொரோனா ஊரடங்கின்போது அலுவலக வளாகத்தில் அரசியல் தலைவர்களுக்கு பார்ட்டி கொடுத்தது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி பிரபலமானவர். தற்போது இவர் அரசியலில் இருந்து விலகி ஓய்வில் உள்ளார்.
இதற்கிடையே கடந்த 2020-ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த எழுத்தாளரான கேரி என்பவரை திருமணம் செய்து கொண்டு வசித்து வருகிறார். இந்தத் தம்பதிக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், தற்போது 4-வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்த நிலையில், புதிய குழந்தைக்கு தந்தையானது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் போரிஸ் ஜான்சன் பதிவிட்டுள்ளார். 'பாப்பி' என பெயரிடப்பட்டுள்ள அந்த குழந்தை, போரிஸ் ஜான்சனின் 9-வது குழந்தை.
ஏற்கனவே போரிஸ் ஜான்ஸன், அவரது முன்னாள் மனைவி மரினா வீலருக்கு 4 குழந்தைகளும், காதலி ஹெலன் மெசின்டைருடன் ஒரு குழந்தையும் உள்ள நிலையில், தற்போது, போரிஸ் ஜான்சன் தன்னுடைய 60ஆவது வயதில் ஒன்பதாவது குழந்தைக்குத் தந்தையாகியிருக்கிறார். அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu